(Reading time: 13 - 26 minutes)

ந்த சந்தியா வேளையில் பெசன்ட் நகரில் கடற்கறையை ஒட்டி இருந்த பங்காளவினுள் நுழைந்தது அந்தக் கார். சுமார் மாலை ஆறு மணி அளவில் அவர்கள் வீட்டை அடைந்தவன், " காரை போர்ட்டிகோவில் நிறுத்தினான் .... இது தான் நம் வீடு..... இறங்கு துளசி.... உள்ளே போகலாம்" என்று அவள் துளசியின் கையைப் பற்றி, " நான் சொன்னதெல்லாம் நினைவில் இருக்கட்டும். எது நடந்தாலும், அது நன்மைக்கே என்று கருதி மௌனமாக இரு. என்னை நம்பு", என்றவன் "என் பெற்றோர்கள் என்ன சொன்னாலும் நான் சமாளித்து கொள்கிறேன். ஏற்கனவே நீ வீக்காக இருக்கிறாய். நான் அவர்களை பார்த்துக் கொள்கிறேன்", அவள் கையை பற்றி அழைத்துக் கொண்டு அந்த விஸ்தாரமான ஹாலினுள் நுழைந்தான்.

'இவனே பாவம், இப்பவோ அப்பவோ என்றிறுக்கிறான்... இதில் நம்மால் வேறு இத்தனை டென்ஷன் இவனுக்கு, இந்த பாட்டி படுத்திய பாட்டில் வலுகட்டாயமாக தாலியை வேறு கட்டி கொண்டாயிற்று... என்ன செய்து என்ன பயன்... பாட்டியும் நம்மை நிராதரவாக விட்டுச் சென்று விட்டார்... அட்லீஸ்ட் சமயத்தில் உதவிய இவனுக்கு , சொன்ன சொல் தவறாமல் நாம் நடந்து கொள்ள வேண்டும்' என்று எண்ணி அவன் உடன் அந்த ஹாலினுள் நுழைந்தவளுக்கு, அங்கு சோபாவில் அமர்ந்திருந்தவர்கள் கண்ணில் பட வில்லை.

அங்கு, இரண்டு பக்கமும் வளைந்து சென்ற மாடிப்படிகளின் நடுவே நடு நாயகமாக சுவரில் சட்டத்தின் உள்ளே இருந்த அந்த மாலையணிந்த உருவப் படம்தான் பெரியதாக தெரிந்தது... தலை, கிர்ரென்று சுழன்றது.

அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற அவள் உடல் தள்ளாட, 'இது... இதில் இருப்பவன் ?' குழப்பத்துடன் திரும்ப,..... சட்டென அவள் கையை பிடித்து நிறுத்தினான் சரண், ஆம் ராம் சரண் தான்...

"இது என்ன" என்று சுவரை நோக்கி கையை காட்டியவளுக்கு, பதில் சொல்லும் முன், இடை மறித்த சரணின் தாய், "சரண், யாரடா இந்தப் பெண்? கரணின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்க வந்தவளா?" என்று கேட்டார். பின் , "பார்த்தாயா அம்மா".... என்று ஆரம்பித்தவரை சரண், "அம்மா இவள் என் மனைவி துளசி" என்று நிறுத்தி நிதானமாக சொன்ன சரணை அதிர்ச்சியுடன் நோக்கினார் சியாமளா, சரணின் தாய்.

ந்த முறை துளசியுடன், மற்ற இருவருக்கும் கூட தலை சுழன்றது..... சுதாரித்த திரு. கிருஷ்ணன் "என்னப்பா சரண் என்ன என்னவோ பேசுகிறாய்" என்றார்.

சரணோ மீண்டும் நிதானமாக , "ஆம்... இவள் என் மனைவி தான்... எங்களுக்கு பதினைந்து நாட்களுக்கு முன் திருமணம் நடந்து விட்டது." என்றவனை கண்ணீர் மல்க இடைமறித்த சியாமளா, "சே... நீயா? நீ இவ்வளவு சுய நலவாதியா? சகோதரன் இறந்த துக்கம் அனுஷ்டிக்கும் வேளையில் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு தன்னலம் பிடித்தவனா?"

"கடவுளே இதற்கா நான் உங்களை உருகி உருகி வளர்த்தேன்... மலடியாகவே இருந்திருக்கலாமே" என் கூறி உன் முகத்தில் விழிப்பதே பாவம்... எந்த சூழ் நிலையில் இவளை மணந்திருந்தாலும் அதை மன்னிக்க முடியாது.... இனி நீ என் மகனே இல்லை... எனக்கு பிறந்தவர்கள் போய் விட்டனர்" என்று கூறி அங்கிருந்து அகன்று தன் அறைக்குள் சென்று கதவை வேகமாக மூடினார்.

"அப்பா" என்றழைத்தவனை நிமிர்ந்து பார்த்த கிருஷ்ணன், "எந்த சூழ் நிலையிலும் நிதானம் தவறாதவன் நீ... ஆனால் நீயே இப்படி செய்து எங்கள் நெஞ்சில் நெருப்பள்ளி கொட்டி விடாயே.... எனக்கு யோசிக்க வேண்டும். என் மகன் இப்படிப்பட்டவனா என்பதை ஜீரணிக்க கொஞ்சம் அவகாசம் கொடு... இன்னும் என்னால் இதை நம்ப முடியவில்லை.... என்றவர், துளசியைப் பார்த்து, " நீ எதற்காக இங்கு வந்தாய் என தெரியாதம்மா... ஆனால் நீ எங்கள் மகனை மணந்தவள்...நீ ஒரு பெண்ணாக இருந்தும் கூட ஒரு தாயின் நிலைமையை நினைக்க மறந்து விட்டாயே..." எனக் கூறி அங்கிருந்து விலகினார்.

அடுத்தடுத்து தலை மேல் விழுந்த இடி போன்ற சொற்களால் செய்வதறியாது நின்றிருந்த துளசிக்கு, ஒன்றுமே மூளையில் ஏற வில்லை. அவள் மனம் ஒன்றை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தது... 'ஏன் அவன் என்னை ஏமாற்றினான்? நான் எவ்வளவு ஈசியாக ஏமார்ந்திருக்கேன்..... அண்ணன் இறந்ததை கூட தெரியப் படுத்தவில்லை...எவ்வளவு நாடகமாடி விட்டான்'... என்று யோசித்தவாறு இருந்தவளின் கையை பற்றி "வா, நம் அறைக்கு போவோம்" என அழைத்தான்.

சட்டென கையை உதறியவள், "தொடாதே என்னை.... பத்திரம் என்று கையை காட்டியவள், வா ரூமைக் காட்டு."

சிறு குற்றவுணர்வுடன் தலை குனிந்த சரண் ஒன்றும் பேசாமல் தன் அறைக்கு அவளை அழைத்து சென்றான்.

றையினுள் நுழைந்த துளசி, "ஏன் இப்படி செய்தாய்? எவ்வளவு நயவஞ்சகன் நீ....என்று சொல்லம்புகளை தூக்கி அவன் மேல் வீசினாள்.

துளசி, "இது தான் நமது பெட் ரூம். அந்தப் பக்கத்தில் இருக்கும் சின்ன அறையை நீ பன்படுத்திக் கொள். கட்டில் பெரியதாக இருப்பதால் நகர்த்தி போட முடியாது. நீ அந்த அறையில் உள்ள ஒற்றைக் கட்டிலை இரவில் பயன் படுத்தி கொள். பகலில் நான் ஒன்பது மணிக்கு ஆபிஸ் சென்று விடுவேன். என்னால் உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது. வேலையாட்கள் அடிக்கடி வந்து போவதால், நாம் கவனமாக இருக்க வேண்டும். கணவன் , மனைவியாக நடிக்க வேண்டும். என் பெற்றோர்களுக்கு கூட சந்தேகம் வரும்படி நடக்க கூடாது" என்றவனை,

"ஹலோ, நான் என்ன கிரீக் அல்லது லத்தீனிலா பேசுகிறேன்?.... ஏதேதோ பேசுகிறாய்?.... உன் வீட்டை நான் என்ன வாங்கவா வந்திருக்கிறேன்? ஏதோ எனக்கு விற்பவன் போல்... போதும் இந்த நடிப்பு... மேலும் மேலும் எதற்கு பொய் சொல்ல வேண்டும்? உங்கள் அண்ணன் உன் அம்மா சொன்னது படி பார்த்தால், பாட்டி இறப்பதற்கு முன்பே இறந்து விட்டார் என்று தெரிகிறது. ஏன் அதை மறைக்க வேண்டும்? அன்றே அதை சொல்லி இருந்தால், இந்தக் கல்யாணம், கருமாதி எல்லாவற்றையும் தடுத்து நிறுத்தி இருக்கலாமே? எதற்காக இதை செய்தாய்? யாரை மணந்து கொண்டேன் என்று கூட தெரியாமல் முட்டாளடிக்கப் பட்டிருக்கிறேனே?" என்று முகம் சிவந்து கோபமாக கத்தினாள்.

அவள் பெருங்குரலில் கத்தியவுடன், சரணும் ஆத்திரமடைந்தான்... சட்டென்ற மூண்ட கோபத்துடன், "துளசி, முதலில் கத்துவதை நிறுத்து.... உன்னை விட பெரியவன் நான்... முதலில் மரியாதை கொடுத்து பேச பழகு... எதற்கு இந்த கோபம்... என்றான் கண்டிப்புடன், பின் சற்று தணிந்து, "துளசி, உனக்கு மட்டும் தான் இப்படி பேச தெரியுமா?... உன் மனதில் நீ என்ன நினைத்து கொண்டு இருக்கிறாய்... என்னவோ, நான் உன்னை ஆசைப் பட்டு மணந்தது போல் பேசுகிறாய்!....என்னை என்னவென்று நினைத்தாய்?... எனக்கு மட்டும் தெரியாதா? என் அண்ணன் இறந்து போனதை உனக்கு தெரிவிக்க வேண்டும் என்று...அன்று தான் கரண் உன் பாட்டியை சந்தித்து உன்னை மணக்க கேட்டு இருந்தான்... உங்கள் இருவருக்குமே டிரிட்மெண்ட் ஸ்டார்ட் ஆகி விட்டது. இந்த நிலையில் நான் என்ன செய்ய முடியும்? பாட்டி, பாட்டி, என் அண்ணன் சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டான். இந்த கல்யாணம் நடக்காது, என்றா கூற முடியம்....ஏற்கனவே மூச்சு திணறலில் இருக்கும் உன் பாட்டியின் கதி என்னவாயிறுக்கும்? சொல்லு.... சரி... பாட்டிக்கு சொல்லாமல் உனக்கு மட்டும் என் அண்ணன் பற்றி சொல்லி இருக்க வேண்டும்... ஒன்று, எனக்கு அந்த சமயத்தில் எதுவுமே தோன்ற வில்லை... இன்னொன்று, உனக்கு டீரிட்மெண்ட் ஸ்டார்ட் ஆகி விட்டது, உனக்கு எந்த அதிரிச்சியும் கொடுக்க வேண்டாம் என்று டாக்டர் சொன்னார்.. இதைப் பற்றி என் பெற்றோருக்கு எதுவுமே தெரியாது... அவர்களுக்கு எப்படி உன்னை அறிமுகப் படுத்துவது என்று குழம்பினேன்... இதை ஆரம்பித்தவனோ, உன் பாட்டியை சந்தித்த அன்று இரவே தூக்கத்தில் இறந்து விட்டான். நான் என்ன செய்வது நீயே சொல்லு. பாட்டியின் ஆபரேஷன் முடிந்தவுடன், மெல்ல இதைப் பற்றி சொல்லி விடலாம் என்றே முடிவு செய்து இருந்தேன். ஒரு வேளை நீ கரு தரிக்காமல் போனால் அப்போது இதைப் பற்றி சொல்லி விட்டு என் அண்ணன் கேட்ட கடைசி கோரிக்கையை நிறைவேற்ற உதவிய உனக்கு, கைம்மாறாக, பாட்டியின் ஆபரேஷன் செலவையும், மேலும் என் அண்ணன் கேட்டுக் கொண்ட படி உனது எதிர் காலத்திற்கும் சேர்த்து ஏதாவது செய்யலாம் என்று நினைத்து இருந்தேன். உனக்கு கரு உருவாகி இருந்தாலும், கல்யாணம் செய்யாமல் குழந்தை பெற்று தர மாட்டேன் என்று நீ கூறி இருந்த படியால், என் அண்ணன் வாரிசு இல்லையென்றாலும், உன்னை அபார்ஷன் செய்ய வைத்திருப்பேன்... உன்னை இந்த சமூகம் பழிக்க விட்டிருக்க மாட்டேன்" என்றவன்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.