(Reading time: 18 - 35 minutes)

 

'ன்ன போயிடுச்சு??? கொஞ்சம் சத்தமா தான் சொல்லேன்.' அவனை குறுகுறுவென பார்த்தபடியே கேட்டாள் அவள்.

'எதுவும்  போகலை' நகர முற்பட்டவனின் கையை பிடித்துக்கொண்டாள் அவள். 'நீ இருக்கும் வரைக்கும் எனக்கு ஒண்ணும் ஆகாது வசி. ஒரு விஷயம் தெரியுமா உனக்கு? எனக்கு எப்பவுமே உயரம்ன்னா ரொம்ப பயம். ஆனா இன்னைக்கு எப்படி இறங்கினேன்னு சொல்லு பார்ப்போம்.'.

'எனக்கு வேலை இருக்கு' அவன் பதில் சொல்லாமல் நகர முயல

அவன் கையை இறுக பற்றிக்கொண்டாள் அவள்.  'ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் வசி, வசின்னு மட்டும்தான் சொல்லிட்டே இருந்தேன் வசி. உன்னை மட்டும்தான் நினைச்சிட்டே இருந்தேன். எனக்கே ஆச்சரியமா இருந்தது. பயமே தெரியலை.!!!!!' சொல்லும்போதே அவள் கண்கள் பளபளத்தன.

'இப்போ சொல்றேன் உன் பேரை சொல்லிகிட்டே நான் வாழ்க்கையிலே எதை வேணும்னாலும் கடந்து வந்திடுவேன் வசி' அழகாய் புன்னகைத்தாள் அவள்.

ஒரு நொடி அவளை ஆழமாக பார்த்தவன் முகத்தில் எந்த பாவமும் காட்டாமல் அவள் கையை விலக்கி விட்டு நகர்ந்தான்.

அப்போது புரியவில்லை அவள் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம்!!!!. காதல் கதைகளிலும் படங்களிலும் கலந்து போய் அதை போலவே வாழ நினைக்கும்  பைத்தியக்கார பெண்' என்றே நினைத்தான் அவன். இன்று புரிந்தது 'நீ தானடா என் வாழ்கையின் பிடிப்பு' என்று சொன்ன  அந்த வார்த்தைகளின் ஆழம்.!!!!!! '

நிலவு நடுவானில் காய்ந்துக்கொண்டிருந்து. நேரம் நள்ளிரவை தாண்டி நீண்டு கடந்துக்கொண்டிருந்து. அறுவை சிகிச்சை முடியும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. டாக்டரின் வரவையே எதிர்ப்பார்த்துக்கொண்டு வாசலில் நின்றிருந்தனர் ரிஷியும், அவளது தந்தையும். நேரம் கடக்க, கடக்க பயம் அதிகரிப்பது போலவே தோன்றியது.

'மனசு கேட்கலைடா. வீட்டிலே தூங்க முடியலை. வந்திட்டேன். என்றபடியே வந்து நின்றான்  சஞ்சீவ். வெளியே வந்தார் டாக்டர். எல்லார் கண்களும் ஒரே நொடியில் அவரிடம் தஞ்சம் அடைய, பதில் சொல்லவில்லை அவர்.

புன்னகைத்தார் !!!!! அழகாய் புன்னகைத்தார்!!!! ஒரு புன்னகை இதயத்தை விட்டு போன சுவாசத்தை மீட்டு  கொண்டு வருமா என்ன???? மீட்டு தந்திருந்தது!!!! டாக்டரின் புன்னகை ரிஷியின் மூச்சை திரும்ப கொண்டு வந்திருந்தது. அந்த நேரத்தில் அவனுக்கு தெய்வமாக தெரிந்தார் அவர்.

நேராக ரிஷியிடம் வந்து கைகுலுக்கினார். 'கங்ராட்ஸ் புது மாப்பிளை. உங்க மனைவி சீக்கிரம் கண் திறந்திடுவாங்க. கலக்குங்க ஹீரோ சார். நாளைக்கு காலையிலே நீங்க அவங்களை பார்க்கலாம் .' சஞ்சீவ் ரிஷியின் தோள்களை அணைத்துக்கொண்டான்

'இதுதான் மகிழ்ச்சியா? இதற்கு பெயர் தான் நிம்மதியா?' இப்படி ஒரு உணர்வை, இப்படி ஒரு சந்தோஷத்தை அவன் வாழ்கையில் இதுவரை அவன் அனுபவித்தது இல்லையோ என்று தோன்றியது அவனுக்கு. டாக்டரின் கையை இறுக பற்றிக்கொண்டு சொன்னான் 'தேங்க்ஸ் எ லாட்  டாக்டர்'

அங்கே மகிழ்ச்சி அலைகள் பரவ துவங்க, நான் சொன்னேன் பார்த்தியா? என்று அவளுடைய தந்தை அவனை அணைத்துக்கொள்ள, அவரது மகிழ்ச்சியில் இணைந்து சிரித்தபடியே  அவன் திரும்பிய நொடியில் அவன் கண்களில் விழுந்தனர் அங்கே நின்றிருந்த மேகலாவும், அஸ்வத்தும்.

அருந்ததி பிழைத்த விட்ட சந்தோஷத்தில் மேகலாவின் கண்ணோரத்தில் நீர் துளி. அவர்கள் வந்ததில் அவனுக்கு பெரிய வியப்பில்லை. என்ன இருந்தாலும் அருந்ததி அவர்கள் வீட்டு இளவரசி. எதுவும் பேசாமல் அவர்களை கடந்து அறையை நோக்கி நடந்தான் ரிஷி. அவன் கண்ணிலிருந்து மறையும் வரை மேகலாவின் பார்வை அவனை துரத்துவதை மட்டும் அவனால் நன்றாக உணர முடிந்தது.

சில மணி நேரங்கள் கடந்திருந்தன. சஞ்சீவிடமிருந்து கைப்பேசியை வாங்கிக்கொண்டு அறையில் வந்து அமர்ந்தான் ரிஷி. அவன் மனதில் மெதுமெதுவாய் பெற்றவர்களின் நினைவு எட்டிப்பார்த்தது. சொல்லவேண்டும் அவர்களிடம். என்னவென்று சொல்வது? வார்த்தைகளை கோர்த்துவிட முயன்று முயன்று தோற்றுக்கொண்டிருந்தான் ரிஷி.

கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவனாக அப்பாவின் எண்ணை அழைத்தான். 'என்னடா? இந்த நேரத்திலே கூப்பிடறே?' இப்படிதான் அவர் துவங்குவார் என்று எதிர்பார்த்திருந்தான் ரிஷி.

அழைப்பு ஏற்கப்பட 'ரிஷி..????' என்றார் அப்பா.

'ம். ஆமாம்பா' தயக்கத்தில் மூழ்கி மேலே எழ மறுத்தது குரல்.

'கங்க்ராட்ஸ்டா கண்ணா. பெஸ்ட் விஷஸ். நீ சந்தோஷமா இருக்கணும்' மகிழ்ச்சி ததும்பும் குரலில் வாழ்த்தினார் அப்பா.

எதிர்பார்க்கவில்லை அவன். சத்தியமாக எதிர்ப்பார்க்கவில்லை. இப்படியும் கூட ஒரு அப்பா இருக்க முடியுமா???? வியந்து மகிழ்ந்து போனான் ரிஷி.

அப்பா... உங்... உங்களுக்கு எப்படி???

'இண்டர்நெட்லே நியூஸ் பார்த்தேன்டா' சிரித்தார் அவர்.

'அப்பா ஸாரிப்பா..... எனக்கு.... நான்....' வார்த்தைகள் ஒத்துழைக்கவில்லை.

'எனக்கு உன்னை பத்தி தெரியும்டா ராஜா. தேவை இல்லாம கவலைப்படாதே. இப்போ அவ எப்படி இருக்கா அதை சொல்லு..'

'பிழைச்சிட்டா பா.... பிழைச்சிட்டா... சொல்லும்போதே நிம்மதி பெருமூச்சு அவனிடம். 'அப்பா... அம்மாகிட்டே சொல்லிட்டீங்களாபா ?

'தூங்கறாடா. நான் இன்னும் சொல்லலை. சொல்றேன்.'  

'கூப்பிடுங்கப்பா. எனக்கு அம்மாகிட்டே பேசணும்பா' ஓடி சென்று அம்மாவின் மடி சாய்ந்துக்கொள்ள தவிக்கும் குழந்தையின் பாவத்துடன் ஒலித்தது அவன் குரல்.

'இப்போ வேண்டாம்டா' என்றார் அப்பா. 'நான் அப்புறமா சொல்லிட்டு அம்மாவை உன்கிட்டே பேச சொல்றேன்.'

'ஏன் பா? அவனுக்குள்ளே பல கேள்விகள் எழுந்தன. எதுவாக இருந்தாலும் அப்பா அம்மாவிடம் உடனே சொல்லிவிடுவாரே?

காரணமாதான். எனக்கு ஒரு வாரம் டைம் குடு. அப்புறம் அம்மா உன்கிட்டே பேசுவா சரியா?. நீ அருந்ததியை பார்த்துக்கோ வெச்சிடவா? அழைப்பை துண்டித்தார் அப்பா.

'அப்பா ஏன் அப்படி சொன்னார் என புரியவில்லை அவனுக்கு. ஆனால் அப்பா எது செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும். என்ற நம்பிக்கையுடன் அமர்ந்திருந்தான் ரிஷி.

றுநாள் காலையில் அருந்ததிக்கு கொஞ்சம் நினைவு திரும்பி இருந்தது. இருப்பினும் மருந்துகளின் தாக்கத்தாலும் வலியினாலும் அரை மயக்க நிலையிலேயே இருந்தாள் அவள் . இப்படியே இரண்டு நாட்கள் கடந்திருந்தன.

மூன்றாம் நாள் காலையில் சற்று எழுந்து அமரும் நிலைக்கு வந்திருந்தாள் அருந்ததி. நெற்றியை சுற்றிலும், கையிலும் போடப்பட்டிருந்த கட்டுகளுடன் அமர்ந்திருந்தாள் அவள், இடக்கையில் ஏற்பட்டிருந்த எலும்பு முறிவை தவிர, மற்ற பாதிப்புகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளி வரத்துவங்கி இருந்தாள் அவள்.

மேகலா வீட்டுக்கு சென்றிருக்க, அவளது அருகில் வந்து அமர்ந்தார் இந்திரஜித்.. அப்பா தன்னிடம் ஏதோ சொல்ல வருவது மட்டும் புரிந்தது அவளுக்கு. 'என்னப்பா.... என்றாள்' மெலிதான குரலில்.

'உன்கிட்டே ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லணுமே என்றபடியே திரும்பியவரின் பார்வை வாசலில் நின்றிருந்தவனின் மேல் சென்று விழுந்தது. அங்கே கதவின் மீது சாய்ந்தபடி இதழ்களில் புன்சிரிப்பு ஓடிக்கொண்டிருக்க  கையில் பூங்கொத்துடன் நின்றிருந்தான் ரிஷி.!!!!!

'மெல்ல திரும்பினாள் அருந்ததி. சில நாட்களுக்கு முன் அவன் முகத்தில் படர்ந்திருந்த தாடியை கூட நீக்கிவிட்டவனாய் பளீரென நின்றிருந்தான் ரிஷி. அவள் அவனுக்கு திரும்ப கிடைத்து விட்ட மகிழ்ச்சி அவன் முகத்திலும் மனதிலும்.

பார்த்த. மாத்திரத்தில்....... அவனை பார்த்த மாத்திரத்தில் பொங்கி மலர்ந்துதான் போனது அவள் முகம். சட்டென அவளையும் அறியாமல் அவள் இதழ்களில் புன்னகை ஓடத்தான் செய்தது..

மொத்தமாய் குளிர்ந்து போனான் ரிஷி. 'போதுமே! இது ஒன்றே போதுமே! இரண்டு நாட்களாய் அவள் கண்விழித்து பார்த்து விட மாட்டாளா என அவன் தவித்த தவிப்புக்கெல்லாம் வரமாயிற்றே  இந்த புன்னகை'.

அவள் முகத்தை ரசித்தபடியே புன்சிரிப்பு மாறாமல் அவன் அவளை நோக்கி நடந்து வர, அந்த நேரத்தில் என்ன தோன்றியதோ??? மனதிற்குள் எது வந்து நின்றதோ???? மெல்ல மெல்ல  மாறத்துவங்கியது அவள் முகம்.

சார் யாருன்னு தெரியுதா? அவளை குறுகுறுவென பார்த்தபடியே கேட்டார் அப்பா. அழகான சிரிப்பு அவர் உதடுகளில்

'ம்' என்றபடியே தலை குனிந்துக்கொண்டாள் அருந்ததி.

என்ன 'ம்'? கேட்டார் அப்பா. நீ மயக்கமா இருக்கும் போது சார் ஒரு வேலை பண்ணிட்டாரே அது உனக்கு தெரியுமா?

ம்? விழி நிமிர்ந்தினாள் அருந்ததி.

'பெருசா ஒண்ணுமில்லைமா. நீ மயக்கமா இருக்கும் போது சார் உனக்கு தாலிக்கட்டிட்டார் அவ்வளவுதான்.' அவள் முகத்தை பார்த்தபடியே புன்னகையுடன் சொன்னார் அப்பா.

Episode # 03

Episode # 05

மழைச்சாரல் தொடரும்......

{kunena_discuss:886}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.