(Reading time: 20 - 39 minutes)

வன் அனுமதிக்கிறேன் என்று கண்ணீரோடு தலையசைத்தான். நடந்தவற்றை எல்லாம் வெளியே நின்றப்படி பார்த்துக் கொண்டிருந்தான் யுகேந்திரன்!!அவன் கண்கள் கலங்கின. அன்பை பயிற்றுவிக்கும் இவளா தவறிழைத்திருப்பாள்?அவன் மனம் குழம்பியது!! நிலா கிளம்பினாள். செல்லும் முன் மகேந்திரனிடத்தில்,

"அன்னிக்கு உன் வாழ்க்கையில இனி வெளிச்சத்தை நீ வணங்குற சூர்ய பகவான் தருவார்னு சொன்னீங்க!ஆனா,அவர் அஸ்தமித்தால் என்ன நடக்கும்னு சொல்ல மறந்துட்டீங்க!இது சொல்ல மறந்த உங்க தப்பா?கேட்க மறந்த என் தப்பா?நினைவுப்படுத்த மறந்த சூர்யனோட தப்பா?"என்றாள்.

அவரால் அவள் கேள்விக்கோ! துன்பத்திற்கோ பதில் அளிக்க முடியவில்லை. அவள் அவரை திரும்பி பார்க்காமல் நடந்தாள்.மனம் கல்லாய் போனது!!!

"நீங்க போங்க!நான் என் கார்ல வரேன்!"-என்று யுகேந்திரனிடத்தில் கூறிவிட்டு தன் காரில் ஏறினாள்.கடைசியாக,அவளது கண்ணீர் திரும்பி பார்த்தது விஷ்வாவை மட்டுமே!!!

அவள் மறைந்ததும்,அவன் உள்ளே சென்று கதவை தாழிட்டு கொண்டு!கோபத்தில் ஜன்னலை எல்லாம் மூடிவிட்டு தனது அறையை இருளாக்கி கொண்டான்!!

மனிதன் எவ்வளவு சுயநலத்தோடு வாழ்கிறான்?எந்த அதிகாரத்தைக் கொண்டு அவன் இயற்கையின் உடமைகளை தனதாக்கி கொள்கிறான்???இயற்கை அளித்ததா அவ்வதிகாரத்தை?இறைவன் அளித்தானா அதை?ஈன்ற  காலம் தான் அளித்ததா??இல்லை... மனம் என்னும் ஆறாம் அறிவு!!ஆக்கத்தைவிட அழிவையே அதிகம் விளைவிக்கிறது!!! எதற்காக இந்த சுயநலம்??பத்து மாதம் கருவை சுமந்து ஈன்ற பிள்ளையை காணும் பெண்ணொருத்தி!தனது பிள்ளையின் வளர்ப்பினை மாற்றி அமைத்தால்...அக்குழந்தை சகலத்திலும் ஸ்ரேஷ்ட்ரன் (வலியவன்)ஆவானா? பலரின் சாபத்திற்கல்லவா ஆளாவான்!!! மனிதனாக பிறந்தவன் ஒவ்வொரு நிலையிலும் பிறரை சார்ந்தே வாழ்ந்தாக வேண்டும்!!!பின்,எந்த நம்பிக்கையை கொண்டு அவன் சுயநலவாதியாக உருவெடுக்கிறான்???

"சில நேரத்துல மற்றவங்க செய்யுற காரியம் மனவேதனையை தரும்!தன்னம்பிக்கையை இழக்கிற நிலை வரும்!அதுமாதிரி சந்தர்பத்துலையும் மனவுறுதியை இழக்காதே!ஒரு மனுஷனோட முக்கியமான கடமையே அவனோட மனதை கட்டுப்படுத்துறது தான்!"-அன்று மகேந்திரன் கூறியது நினைவு வந்தது!!!

உடன்,கண்ணீரும் துணை நின்றது. வானின் குளிர்ந்த நிலவும் அவளுக்கு வேதனையை நல்கியது!!! இதுதான்,அவளது பிறந்த வீடாம்!!! நேற்றைய தினம் வரவு அனைவருக்கும் மகிழ்ச்சி!அவளுக்கு மட்டும் கேடு!!!

விடிந்தாகிவிட்டது!!!ஆனால்,ஆதவன் உதிக்கவில்லை.அவளின் சினத்தைக்காண அஞ்சுகிறானோ!என்னவோ! அவளது வருகை அங்கிருந்த இருவருக்கு பிடிக்கவில்லை என்பது உறுதி!!!ஒன்று,திவ்யா!மற்றொன்று அவளது அத்தை பரமேஷ்வரி!! வந்தப் பொழுதிலே இருவரும் முகத்தை திருப்பிக் கொண்டு தான் சென்றனர்!! திக்கற்ற தனிமையை உணர்ந்தாள் வெண்ணிலா. அவள் கண்கள் கண்ணீர் சிந்திய அதே வேளையில் கதிரவன் உதித்தெழுந்தான்!!!நிலாவின் கவனம் அவன் மீது விழுந்தது!!!

என்றுமில்லா பிரகாசம் அவன் வதனத்தில் தெரிந்தது!!அவள் கண்ணீர் நின்றது!!! மனம் ஏதோ தைரியத்தை ஈன்றது!!! வானின் மழைத்துளியும் அவள் காயத்திற்கு சற்று மருந்திட்டது!!! சில நேரங்களில் காலத்தைவிட சிறந்த நண்பன் யாரும் இருக்க இயலாது!!! அவள் மனம் அவளையே அறியாமல் உறுதி பூண்டது!!!ஏதோ முடிவு வந்தவளாய் அன்றைய பொழுதின் கடமையை ஆற்ற புறப்பட்டாள்!!

மணி எட்டானது!!!  நிலா தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு  மருத்துவமனைக்கு கிளம்பினாள்.

"நிலா!"-கங்காவின் அழைப்பிற்கு செவிமடுத்து நின்றாள்.

"சாப்பிட்டு போம்மா!"

"இல்லைங்க...எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு!"

"அப்படி என்ன வேலை?"

"சிலருக்கு அடுத்தவங்க வாழ்க்கையிலே தலையிடுறதே முக்கியமான வேலையா இருக்கலாம் அத்தை!"-சுருக்கென்று வார்த்தையை விட்டாள் திவ்யா.கங்கா புரியாமல் விழித்தார்.

"அவங்க சொல்றது உண்மைதான்!!!எனக்கு அதான் முக்கியமான வேலை!"-நிலா சற்றும் காத்திராமல் நகர்ந்தாள்.

"அவ என்ன சொல்லிட்டு போறா?"

"விடுங்க அத்தை...சிலரை புரிஞ்சிக்கவே முடியாது!"

காரின் பாதையை மனதின் போக்கிற்கு அனுமதித்தாள் நிலா.அது தனது கடமையை ஆற்ற மருத்துவமனை எதிரே தான் நின்றது!!! மனதை தேற்றிக்கொண்டு தனது பணியாற்ற உள்ளே பிரவேசித்தாள்.

ன்றிரவு... மணி பத்தானது... இன்னும் நிலா வீட்டிற்கு வந்து சேரவில்லை.கலக்கம் அடைந்து போனார் கங்கா.

"என்னங்க!என்னங்க அவளை இன்னும் காணும்?"

"எதாவது முக்கியமான வேலையா இருப்பா வந்துடுவா!"

"எனக்கு பயமா இருக்குங்க!"

"நீங்க கவலைப்படாதீங்கம்மா!சிலர் இந்த உலகத்துல இருக்காங்க!அவங்களைப் பார்த்து சிலநேரம் தைரியமே தைரியத்தை வரவழைத்துக் கொள்ளும்!!நிலா அது மாதிரி!"-யுகேந்திரனின் வாக்கியம் புரியாமல் அவனை பார்த்தாள் திவ்யா.

"நல்லா இருக்கே!அதுக்கு வயசு பொணணு இவ்வளவு நேரம் வராம இருப்பாளா?"-வம்பிழுத்தார் பரமேஷ்வரி.

"மா!சும்மா இரும்மா!"-அஸ்வின்.

"என்னடா?திடீர்னு இடம் மாறுது பேச்சு?"-அவர் பேசும் போதே நிலா உள்ளே நுழைந்தாள்.

"நிலா!என்னம்மா?ஏன் இவ்வளவு நேரம்?"-பதறியப்படி கங்கா அவளிடம் வினவினார்.

அவள் அமைதியாய் நின்றாள்.

"நான் பயந்துட்டேன் நிலா!"-நிலாவின் பார்வை பரமேஷ்வரியிடமே நிலைத்தது.

"பண்றதை பண்ணிட்டு பார்க்கிற பார்வையை பார்!ஏன்டியம்மா,யார் கூட போய் சுத்திட்டு வர!"

"வாயை மூடு ஈஸ்வரி!"-பிரசாத் கோபமாக கத்தினார்.

நிலா தீக்ஷண பார்வையை விடுத்தப்படி,

"நான் எங்கே போறேன்!யார் கூட இருக்கேன்!என்ன பண்றேன்!இந்தக் கேள்வியை என்னை யாரும் கேட்க கூடாது!என்னை கேள்விக் கேட்கிற அதிகாரம் இங்கே யாருக்கும் இல்லை!முப்பது நாளுக்கு இது நான் தங்க போற இடம் அவ்வளவு தான்!மற்றப்படி,எனக்கும் இந்த வீட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை!"-அவள் அமைதியாக கூறினாள்.இதுவரை யாரும் எதிர்த்து பேசாமல் இருந்தவரை எதிர்த்து பேசியது அனைவரது பார்வையையும் நிலா மீது திருப்பியது!!!

"நீ யார்கிட்ட பேசுறன்னு தெரியுமா?"

"சாதாரண மனிதப்பிறவிக்கிட்ட தான்!நான் வணங்குற கடவுள்கிட்ட இல்லை!"-அவள் கோபமாக தன் அறைக்கு புறப்பட்டாள்.

யுகேந்திரனின் பார்வை தீர்க்கமாக அவள் மேல் விழுந்தது. தன் அறைக்கு சென்றவள் நீண்ட பெருமூச்சு ஒன்றை விடுத்தாள். யாரோ தன்னை கவனிப்பது போலிருக்க கதவருகே பார்த்தாள்.ரோஹித் பயத்தோடு நின்றிருந்தான்!!அவனை உள்ளே  வரும்படி சைகையில் அழைத்தாள்.அவனருகே மண்டியிட்டு அமர்ந்தாள்.

"உன் பேர் என்ன?"

"ரோஹித்!"

"என்ன படிக்கிற?"

"யு.கே.ஜி."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.