(Reading time: 20 - 39 minutes)

"து முடியாது!!நான்தான் அப்படி கூப்பிடுவேன்!"

"நான் தான் கூப்பிடுவேன்!"

"நான் தான்!"

"நான் தான்!"-ரோஹித் எழுந்து நிலாவை சென்று கட்டிக்கொண்டான்.

ரஞ்சித்தின் முகம் ஏதோ ஒரு வகை அன்பினை அவன் மேல் வெளிப்படுத்தியது.

"உன்னை எல்லாருக்கும் சீக்கிரம் பிடிக்குது அம்மூ!"

"சரி வா!நீயும் அவளை அப்படியே கூப்பிட்டுக்கோ!எனக்கு பொறாமையாஇருக்குது!"-என்றதும் அவன் நிலாவிடமிருந்து விலகினான்.

"அவர் யாரு?"-என்று நிலாவிடம் மீண்டும் கேட்டான்.

"உன் மாமா!"-ரஞ்சித்தே பதில் அளித்தான்.

நிலா கேள்வியோடு அவனை பார்த்தான்.

"மாமாவா?"

"ம்..இந்த டாக்டர் மேடம் உனக்கு என்ன வேணும்?"

"அப்பா அத்தைன்னு சொன்னாரு!"

"அப்போ அவங்க ஹஸ்பண்ட் என்ன வேணும்?"

"என்ன வேணும்?"

"மாமாடா!"

"ஆனா,நீ ஏன் அம்மூக்கூட இல்லை?"

"யார் சொன்னா?நான் அம்மூ கூட தான் இருக்கேன்!"

"நான் உன்னை பார்த்ததே இல்லையே!"

"நிஜத்துல வாழுற வாழ்க்கையைவிட,மனதளவில வாழும் வாழ்க்கை ரொம்ப அழகா இருக்கும்!"

"புரியலையே!!"

"உனக்கு என் வயசு வரும் போது தான் அது புரியும்!"-நிலா அவ்வளவு நேரமும் ரஞ்சித்தின் ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்தாள்.

"எங்கேயாவது வெளியே போகலாமா?"

"நான் அம்மூக்கூட படத்துக்கு போறேனே!"-அவன் கூறியதும் அவன் நிலாவை முறைத்தான்.

"அடிப்பாவி...இத்தனை வருஷத்துல ஒரு தடவையாவது என் கூட வெளியே வந்திருப்பியா?"

"ரஞ்சு..."

"போடி!"

"நீயும் வரீயா போகலாம்?"

"ம்..உன் அம்மூ சொன்னா தான் வருவேன்!"-அவள் சற்றே நாணத்தோடு தலையசைத்தாள்.

"அப்போ வா போகலாம்!"

"வா!"-என்று நிலா அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"எனக்கு?"-ரஞ்சித் அதற்கும் போட்டிக்கு வந்தான்.

அவள் வெட்கத்தில் செய்வதறியாது திகைத்தாள்.

"ன்னடி சொல்ற நிலா தான் அந்தப் பொண்ணா?"-அதிர்ச்சியின் உச்சத்துக்கே போனாள் ப்ரியா.

"ஆமா..என்னால அதை நம்ப முடியலை!எதாவது அதிசயம் நடந்து இதெல்லாம் பொய்யாகிவிடாதான்னு இருக்கு!"

"இப்போ என்ன பண்ணுறது?"

"தெரியலை...வாழ்க்கை முழுசும் அவக்கூட தான்னு நினைக்கிறேன்!உனக்கு எவ்வளவு பெரிய துரோகம் பண்ணா!எனக்கு அவ முகத்தைக்கூட பார்க்க பிடிக்கலை!"-அவள் கூறவும் அங்கு யுகேந்திரன் பிரவேசித்தான்.இருவரின் பேச்சும் நின்றது.

யுகேந்திரனின் பார்வை இருவர் மீதும் விழுந்தது.

"நான் கிளம்புறேன் திவ்யா!"

"சரிடி!"-ப்ரியா கிளம்பினாள்.

"நான் வரேங்க!"-பெயருக்காக யுகேனிடத்தில் விடைப்பெற்று புறப்பட்டாள்.

அவன் அமைதியாக சென்று கட்டிலில் சாய்ந்துக்கொண்டான்.

"என்னங்க?என்ன பண்ணுது?"

"ஒண்ணுமில்லை...தலைவலி!"

"டீ எடுத்துட்டு வரட்டா?"

"வேணாம்...டீக்கு எல்லாம் இது சரியாகாது!இதுக்கு நேரம் தான் மருந்து போடணும்!"-அவனது பேச்சு சூட்சுமமாகவே இருந்தது.

"என்னாச்சுங்க?"

"ஒண்ணுமில்லை...நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன்!"-அவன் கண்களை மூடிக்கொண்டான்.

ன்று இரவு.... தோட்டத்தில் அமர்ந்திருந்தாள் வெண்ணிலா. தலையில் ஏதோ கனமாக வைத்து தைத்ததை போன்ற உணர்வு!!பயங்கர தலைவலி!!மெல்லிய காய்ச்சல் வேறு!!!மருந்துகளையும் உபயோகப்படுத்தியாகிவிட்டாள் பலனில்லை. ஆறாவது முறையாக அவள் கைப்பேசி அடித்தது.அதை பார்த்த ரோஹித் அவளிடம் அதை எடுத்து வந்து தந்தான்.

"அம்மூ உனக்கு போன்!"

"தேங்க்ஸ் கண்ணா!"-அதை வாங்கிக்கொண்டாள்.

மீண்டும் அழைப்பு வந்தது.

திரையில் "அம்மா!"என்று பளிச்சிட்டது.

அவள் மனம் துணுக்குற்றது.எந்த இந்த நேரத்தில் அழைகிறார்கள்? ஆன் செய்து காதில் வைத்து அமைதியாக இருந்தாள்.

"நிலா!"-பதற்றமாக ஒலித்தது அவர் குரல்.

"உனக்கு அங்கே ஒண்ணும் பிரச்சனை இல்லையேம்மா?"

"காலையில இருந்து மனசே சரியில்லை.உடம்புக்கு ஒண்ணுமில்லைல்ல!"-எப்படி கண்டுப்பிடித்தார் அவர்?இதுதான் தாய்பாசமா??சுற்றி இருப்பவர் ஒருவரும் இதை அறியவில்லை..

தூரத்தில் இருந்தும் துல்லியமாக எப்படி அவர் கண்டுப்பிடித்தார்??

"பதில் சொல்லும்மா..அம்மாவை மன்னிக்க மாட்டியா?என்கூட பேச மாட்டியா?"-அவள் கண்களில் கண்ணீர் திரண்டது.ரோஹித் அவளையே உற்று பார்த்தான்.

"நான் பண்ணது தப்பு தான்மா!அதுக்காக இவ்வளவு பெரிய தண்டனையை தராதே!பேசு நிலா!"-அவள் மனம் உடைந்துப்போனது.

மீனாட்சியின் கண்ணீர் அவள் உயிரை கரைத்தது.

"நிலா!"

"நான் அப்பறம் பேசுறேன்!"-உடனடியாக இணைப்பைத் துண்டித்தாள்.

ரோஹித் மெதுவாக நகர்ந்து அவன் பாட்டியிடம் ஓடினான். அவளால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.மனம் கண்ணீரை நாடியது. அவளது நிலையை மாடியிலிருந்து யுகேந்திரன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனம் சிறிதாவது அவள் ஆறுதல் அடைய வேண்டும் என்று எண்ணம் கொண்டது. அவன் அவளருகே சென்று அமர்ந்தான்.அவனை கண்டதும் அவள் எழுந்து நகர பார்த்தாள்.

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும்!"

"என்கிட்ட பேச எந்த விஷயமும் இல்லை!"

"இருக்கிறதுனால தான் பேசணும்னு ஆசைப்படுறேன்!!"-நிலா அமைதியாக நின்றாள்.

"நீ ஏன் ப்ரியாவை அவ காதலித்தவனிடமிருந்து பிரித்த?"-அவள் அமைதியாக சிரித்தாள்.

"உன்னால எப்படி அந்தக் காரியத்தை செய்ய முடிந்தது?"

"ப்ரியா உங்கக்கிட்ட என்ன சொன்னாங்க?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.