(Reading time: 20 - 39 minutes)

"ன் அங்கேயே நின்னுட்ட?"

"நீங்க பாட்டியை கோபமா பேசுனீங்கல்ல!அதான்,பயமாயிடுச்சு!"

"சரி...இனி,கோபமா பேசலை!"

"நான் உங்களை எப்படி கூப்பிடணும்?"-அவள் மௌனம் காத்தாள்.

"உனக்கு என்ன பேர் ரொம்ப பிடிக்கும்?"

"அம்மூ!என் பொம்மைக்கு கூட அந்த பெயர் தான்!நீங்க கூட ஒரு அழகான பெயிட்டிங் மாதிரி இருக்கீங்க!நான் உங்களை அம்மூன்னு கூப்பிடட்டா?"-நிலாவிற்கு ரஞ்சித்தின் ஞாபகம் வந்தது.

அவள் சிரித்தப்படி,

"கூப்பிடு!"

"தேங்க்யூ அம்மூ!"-நிலா அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.அவன் சிரித்தப்படி ஓடிவிட்டான்.

முகத்தில் சற்றே நாணம் படர,அவள் கட்டிலில் சாய்ந்தாள். அவளது கைப்பேசி ஒரு குறுந்தகவலை கொண்டு வந்தது. "உறக்கமே வரவில்லை என்றாலும்,இரவு வணக்கத்தை அரை மனதோடு கூறுகிறேன்!நீ அருகே இல்லாத காரணத்தால்!!!"-அவள் அதைப்படித்து முடித்த நேரம்,அவளது அறை கதவு தட்டப்பட்டது!!

"வாங்க!!"பதில் அளித்தாள்.திவ்யா தான் வந்தாள்!!!

"நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க?ஏன் அப்படி பேசிட்டு வந்த?அடுத்தவங்க உணர்ச்சிகளை கொஞ்சம் கூட புரிஞ்சிக்க மாட்டியா?"-நிலா அமைதியாக நின்றாள்.

"மனசு இருந்தா தானே உணர்ச்சிகளை பற்றி தெரியும்?"

"அதான் தெரிஞ்சிருக்குல்ல!எனக்கு மனசு கிடையாது!உணர்ச்சி கிடையாது!எதுவும் கிடையாது!இதை சொல்லிட்டு போக தான் வந்தியா?"

"உனக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையா?"

"இல்லை..போதுமா?" -அவளது பதில்களை திவ்யா சற்றும் எதிர்நோக்கவில்லை.

"டென்ஷன் ஆகாம போ!கர்ப்பமா இருக்கும் போது கோபப்பட கூடாது!அது உன் குழந்தையை தான் பாதிக்கும்!"

"என் குழந்தையை பார்த்துக்க எனக்கு தெரியும்!எங்கே உன் வாசம்பட்டு அவனும் தவறா வளர்ந்துடுவானோன்னு பயமா இருக்கு!"-நிலா தீர்க்கமாக புன்னகைத்தாள்.

"பயப்படாதே!நான் போய்விடுவேன்!கொஞ்ச நாள் பொறுத்துக்கோ!" -திவ்யா கோபமாக நகர்ந்துவிட்டாள்.

நிலா கண்கள் கவலையில் மூழ்கின.

டுத்த நாள் சூர்ய உதயம் பலரின் வாழ்வில் சூர்ய அஸ்தமனத்திற்கு வழி வகுத்தது. காவ்யா பரமேஷ்வரி கேட்டு கொண்டதற்கு இணங்க அவருக்கு தண்ணீர் கொண்டு வந்தாள்.இரு நாட்களாய் உடல்நிலை சரியில்லாத காரணத்தால்,மயக்கம் வர சிறிது தண்ணீர் அவர் மேல் சிந்திவிட்டது.

"ஏ,..என்ன காரியம் பண்ணிட்ட அறிவில்லை உனக்கு?"

"மன்னிச்சிக்கோங்க அத்தை!கை தவறி.."

"தவறும்டி!நினைப்பெல்லாம் எங்கெங்கோ இருக்கே!அப்போ எல்லாம் தவறும்!!!

"மா!அவ தான் தெரியாம பண்ணிட்டதா சொல்றாளே!"

"நீ என்னடா?இவளுக்கு சாதகமா பேசுற?அப்படி என்ன உங்களுக்குள்ள..."

"மா!"

"பார்த்தியாடி!உன்னால,என் பையனே என்னை எடுத்தெரிந்து பேசுறான்!ஊர் பேர் தெரியாத அநாதை கழுதை உன்னால நான் எல்லார்கிட்டையும் தலை குனியணும்!"-சுற்றி கங்காவும்,திவ்யாவும் நின்றிரூந்தாலும் அவர்களால் பரமேஷ்வரியை எதிர்க்க இயலவில்லை.

அவர் காவ்யாவின் கேசத்தைப்பற்றி தள்ளிவிட்டார். தடுமாறி விழப்போனவளை வந்து தாங்கினாள் நிலா.அவளை பார்த்தவரின் கண்கள் சற்றே அச்சம் கொண்டன.

"எ...என்ன?அப்படி பார்க்கிற?"

"இன்னும் எவ்வளவு ஆணவனத்துல உங்களால ஆட முடியும்னு பார்க்கிறேன்!"

"ஏ.."

"போதும் நிறுத்துங்க!இதே நிலைமை உங்கப் பொண்ணுக்கு வந்தா அமைதியா இருப்பீங்களா?"

".........."

"பிறப்பு இவளுக்கு எப்படியோ போகட்டும்!வளர்ப்பு இந்தக்குடும்பம் தானே!கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம..."

"நான் அப்படி தான் பண்ணுவேன்!என்னை கேட்க நீ யார்?"

"என்னை யாரா வேணும்னாலும் நீங்க நினைத்துக்கலாம்.எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை!"

"என்ன திமிரா...நீ என்னையே மிரட்டுறீயா?"

"நான் உங்களுக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை.என் மனசுல உங்களுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு!அதை தயவுசெய்து கெடுத்துக்காதீங்க!"-பரமேஷ்வரி வாயடைத்துப் போனார்.

"நான் பேசினது தப்பா இருந்தா என்னை மன்னிச்சிடுங்க!கொஞ்சமாவது அந்தப் பொண்ணோட நிலைமையை யோசித்து பாருங்க!!"-காவ்யாவின் விழிகள் ஈரமாயின.

நிலா தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

"அம்மூ!"-ரோஹித் அவளை நிறுத்தினான்.அவள் அவனை தூக்கிக்கொண்டாள்.

"சூப்பரா பேசின!நீயாவது என் அத்தையை புரிஞ்சிக்கிட்டியே!"-என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

"ஸ்கூல் போகலையா?"

"எனக்கு எக்ஸாம் முடிந்து  லீவ் விட்டிருக்காங்க!"

"அப்படியா?அப்போ என் கூட ஹாஸ்பிட்டல் வா!"

"ம்.."

"எல்லார்கிட்டையும் சொல்லிட்டு வா!"

"அம்மா!பாட்டி!அத்தை!மாமா!பாய்!!!"-அவன் கண்களை மூடியப்படி விடைப்பெற்று புறப்பட்டான்.

"எனக்கு போர் அடிக்குது!"-வெறுப்போடு கூறினான் ரோஹித்.

"ஏன்?"

"பாரு...நீ வரவங்களை தான் கவனிக்கிற!என்னை மதிக்கக்கூட மாட்ற!"-நிலா சிரித்தப்படி முன்னிருந்த டேபிளில் சாய்ந்தாள்.

"எங்கேயாவது வெளியே போகலாமா?"

"போலாம்!"

"எங்கே போகலாம்?"

"மூவி..."

"மூவிக்கா?ம்..போகலாம்!"-அவர்கள் கிளம்பிய வேளையில்,

"எக்ஸ்யூஸ்மீ மேடம்!உள்ளே வரலாமா?"-என்று ரஞ்சித் சிரித்தப்படி கதவருகே நின்றான்.அவனை கண்டவளின் கண்கள் பொலிவுற்றன.

"ரஞ்சு?நீயா?உள்ளே வா!"-ரோஹித்தின் பார்வை ரஞ்சித்திடம் போனது!!!

ரஞ்சித் புருவத்தை சுருக்கியப்படி அவனை பார்த்தான்.

"சார் யாரு?"

"யுகேன் பையன்!"

"ஓ..."

"அம்மூ இவர் யாரு?"-என்று ரோஹித் கேட்டதும்,சரலென்று அவனருகே திரும்பினான் ரஞ்சித்.

"என்னது அம்மூவா?நீ எப்படி அவளை அம்மூன்னு கூப்பிடலாம்!அது நான் வைத்த பெயராச்சே!"

"நான் அவளை அப்படிதானே கூப்பிடுவேன்!"-ரோஹித் குழந்தைத்தனமாக கூறவும் நிலாவிற்கு சிரிப்பு வந்தது!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.