(Reading time: 9 - 18 minutes)

'ட் இஸ் ஹர் வே ஆஃப் ஸேயிங். அதுக்கு என்னமா பண்ண முடியும்?

'ஆமாம். நோக்கென்ன இப்போ? சொல்லபோனா நோக்கு இப்போ ரொம்ப கொண்டாட்டமாவே இருக்கும்...' நறுக்கென சொன்னார் அவர். 'அம்மாவாலே ஏத்துக்க முடியலை டா....'

'என்னை பொறுத்த வரைக்கும் ஸ்ருதி மேலே எந்த தப்பும் இல்லை.' என்றான் நிதானமாக. கொஞ்சம் யோசிச்சு பார். நீ மட்டும் உன் பிள்ளைக்கு உன் அந்தஸ்துக்கு ஏத்த பொண்ணுதான் வேணும்னு நினைப்பியாம். நீ மட்டும் மத்தவாளை பிடிக்கலைன்னு சொல்லுவியாம். அவ மட்டும் மாடர்ன்னா மாப்பிள்ளை வேணும்னு நினைக்க கூடாதா?. என்னை பிடிக்கலைன்னு சொல்லக்கூடாதா? ஷி ஹாஸ் காட் ஆல் தி ரைட்ஸ் டு சே நோ டு மீ இல்லையா மா? என்றபடியே  நீர் பளபளத்துக்கொண்டிருந்த அம்மாவின் கண்களை சில நொடிகள் ஊடிருவியது அவனது கத்தி முனை பார்வை.. பின்னர் விருட்டென சாலையின் பக்கம் திரும்பிக்கொண்டன அவன் விழிகள்.

அதற்கு மேல் அம்மா எதுவுமே பேசவில்லை. காரில் கனத்த மௌனம் நிலவியது.

ன்றிரவு மிக நிம்மதியாய் உறங்கினான் கோகுல். மறுநாள் காலை மணி ஒன்பதை கடந்திருந்தது.

காலை உணவை முடித்து விட்டு எழுந்தவனிடம் மெல்லக்கேட்டார் அம்மா 'கண்ணா .... மனசே சரியில்லை டா. ஏதாவது கோவிலுக்கு போயிட்டு வரலாமாடா???.'

சில நிமிடங்கள் கழித்து அந்த கண்ணனை தரிசித்து விட்டு கோவிலின் பிராகாரத்தை வலம் வந்துக்கொண்டிருந்தனர் அம்மாவும் மகனும்.

அதே நேரத்தில் 'மாரி மலை முழைஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும் ...' திருப்பாவையை உச்சரித்த படியே சந்நிதையை விட்டு வெளியே வந்தாள் கோதை. அடுத்த நொடி மலர்ந்தது அவள் முகம் 'கோகுல் தானே அது??? சற்று தூரத்தில் இருந்தவளின் கண்ணில் அவனது அம்மா தென்படவில்லை. உள்ளமெங்கும் பரவிய உற்சாகத்துடன் அவனை நோக்கி ஓடினாள் அவள்.

மூச்சிரைக்க அவன் முன்னால் சென்று நின்ற பின்னர் தான் அவள் பார்வையில் பட்டார் தேவகி. மெல்ல இரண்டடி பின் வாங்கினாள் கோதை.

கோகுலிடம் வியப்பில் கலந்த புன்னகை. தேவகியிடமும் புன்சிரிப்பு மலர்ந்தது 'எதுக்குமா இப்படி ஓடி வரே?'. அவர் கை தன்னாலே நீண்டு கோதையின் கன்னம் தொட்டு வருடியது.

இ..இல்லை சு,, சும்மா உங்களை பார்த்தேன் அதான்....

அப்படியா??? என்றார் அம்மா. அவர் கை கோதையின் தோள் அணைத்துக்கொண்டு நடக்க, மூவரும் ஒன்றாக நடக்க துவங்கினர்.

'ஏம்மா....  கோதை .... என்றார் அம்மா. 'உன்னை ஒண்ணு கேட்பேன் சட்டுன்னு மனசிலே இருக்கறதை மறைக்காம சொல்லுவியா?

ஒரு நொடி அவரை பார்த்தவள் வேகமாக தலை அசைத்தாள் 'ம்....'

'நோக்கு கோகுலை பிடிக்குமா....'

கண்கள் நிறைய தவிப்புடன் கோகுல் அவள் பக்கம் திரும்ப, 'ஏ... ஏன்... அப்படி கேட்கறேள்? என்றாள் கோதை

'இல்லைடா... என்றார் தேவகி, 'நேத்து. அந்த பொண்ணு கோகுலை பிடிக்கலைன்னு சொல்லிட்டா பார்த்தியோன்னோ, அதான் நோக்கு பிடிக்குமான்னு....'

முடிக்கவில்லை அவர், அதற்குள் படபடவென வெளிவந்தன அவள் வார்த்தைகள். ' ஆமாம் பிடிக்கலையாமாம் பிடிக்கலை... அது எப்படி சொல்லுவா அவ... நம்ம கோகுல் மாதிரி மாப்பிள்ளை யாருக்கு கிடைக்கும்...  திமிரு... திமிரு அவளுக்கு.... பாவம் மாமி நம்ம கோகுல் அவரை போய்... பிடிக்கலைன்னு....  அப்படியே அவளை அங்கேயே அடிச்சு போட்டுடலாம்னு தோணித்து...பெரியவா நீங்க எல்லாம் இருந்தேள் அதனாலே நான் பேசாம எழுந்து போயிட்டேன்... என்.. என்னாலே என்னாலே அதை தாங்கிக்கவே முடியலை ... நேக்கு அப்படியே... அவள் குரல் கொஞ்சம் கரைய கண்களில் நீர் கட்டிக்கொண்டது.

அவளது வார்த்தைகளும், தவிப்பும் கண்ணீரும் அம்மாவை வியப்பின் உச்சிக்கு கொண்டு சென்றது. 'நான் நேற்று துடித்த துடிப்பிற்கும் இதற்கும் என்ன வித்தியாசமாம்? இவளை விட அன்பான பெண்ணை என்னால் கோகுலுக்கு தந்து விட முடியுமா என்ன???' சில நொடிகள் பேச்சிழந்து நின்றிருந்தார் அவர்.

கண்களில் வழிந்தோடிய கண்ணீரை துடைத்துக்கொண்டு அவள் நிமிர, 'சரி நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லலையே... என்றார் அவர். 'நோக்கு கோகுலை பிடிக்குமா...'

அரை நொடியில் பதில் வந்தது பட்டென ' நேக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்....

'அப்படின்னா நீயே அவனை கல்யாணம் பண்ணிக்கோயேன்....' என்றார் புன்னகையுடன்.

கீதம் தொடரும்.....

Episode # 03

Episode # 05

{kunena_discuss:890}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.