(Reading time: 10 - 19 minutes)

 

வள் உறங்கவே இல்லை...

சதா சர்வ நேரமும் ராகுலின் நினைவு தான்!

வேண்டாம் என்றாலும் விரும்பி அவனையே தஞ்சம் புகுகின்றது அவள் காதல்!

என்ன செய்வாள் இவள்??

அழுகை...இதை மட்டுமே இதுவரை செய்கின்றாள்!!!

இன்னும் 2 வாரத்தில் திருமணமாம்!!

அவசர அவசரமாய் நடக்கின்றன ஏற்பாடுகள்!!

திருமணம் என்னும் பந்தம் ஒரு பெண்ணின் வாழ்வில் இல்லை...அவள் வாழ்வையே புனிதமாக்கும் செயலாகும்!இங்கு...

எல்லாம் தலைகீழே!!!

மரணமும் என் மேல் இரக்கம் காட்ட மறுக்கிறதே!ஏங்கியது பெண்மனம்.

அவள் தைரியம் எல்லாம் தவிடுப்பொடியானது!

ணி ஐந்து...

எழுந்து அன்றைய தனது கடமைகளை ஆற்ற துணிந்து சென்றாள்.

"அப்பா!நான் ஊருக்கு கிளம்புறேன்பா!"-செய்தித்தாள் படித்து கொண்டிருந்த ஆதித்யா திடுக்கிட்டான்.

"ஏன்?"

"மஹீயை பார்க்க போறேன்!"

"என்ன திடீர்னு?"

"சும்மா!தோணுச்சு!"

"அவரை வர சொல்றேன்."

"வேணாம்பா!அப்படியே அங்கே எல்லாரையும் பார்த்துட்டு கொஞ்ச நாள் இருந்துட்டு வரேன்!"

"எப்போ வருவ?"

"ம்...1 மாசம் ஆகும்!"

"தீக்ஷாக்கு கல்யாணம் இருக்குடா!"

"நீ போயிட்டு வா!"

"என்ன நீ?சின்ன வயசுல இருந்து நல்லா பழகி இருக்கீங்க!அவ கல்யாணத்துக்கு நீ வரலைன்னா எப்படி?"-அவன் புன்னகைத்தான்.

"வந்திருக்க அத்தனை பேர்ல என்னதான் தேட போறாளா?அவளுக்கு கனவு காணவே நேரம் சரியா இருக்கும்!"

"ராகுல்..."

"எனக்கு ஈவ்வனிங்  டிரையின்!கிளம்புறேன்!"-அவன் செல்வதையே கேள்வியாக பார்த்துக்கொண்டிருந்தான் ஆதித்யா.

அவன் மனம் முதன்முறையாய் அச்சத்தை உணர்ந்தது!காரணம் புரியவில்லை.

மாலை மணி ஆறு!

தொடர்வண்டியில் அமர்ந்து ஒரு பத்திரிக்கையை வாசித்துக்கொண்டிருந்தான் ராகுல்!

சென்னையை கடந்தாகிவிட்டது!!

மனம் லேசான உணர்வு!

திடீரென்று ஏதோ தோன்ற அவனது கை தன்னாலே அவன் கைப்பேசியை எடுத்து தீக்ஷாவை அழைத்தது.

ஒருமுறை...இரண்டு முறை...மூன்று முறை...அவள் எடுக்கவில்லை.

அவன் முகம் வாடியது!

'என்னவாம் இவளுக்கு?அப்படி என்ன கனவுலகில் சஞ்சரித்து கொண்டிருக்கிறாள்!அனைத்தையும் மறந்துவிட்டாளா?என்னையும் சேர்த்தா?"-அவன் வெளியே வேடிக்கை பார்க்கலானான்.

"ஐயோ!என்னை விட்டுவிடுங்க!"-ஒரு பெண்ணின் அலறல் குரல் கேட்டது.சுற்றி பார்த்தான் ஒருவருமில்லை.மீண்டும் முகத்தை திருப்பி கொண்டான்.

"ப்ளீஸ் வேணாம்!"-சந்தேகித்தவன் எழுந்து சென்றான்.அந்த பெட்டியில் ஒருவருமில்லை.இறுதிவரை அலசினான்.ம்ஹீ்ம் யாருமில்லை.

மனம் எச்சரிக்க அங்கு அடைக்கப்பட்டிருந்த ஒரு அறையை திறந்தான்.

அதில்,ஏறகுறைய பதினைந்து முதல் இருபது வயது வரை உள்ள சிறுமிகள் பலர் இருந்தனர்.அவர்களுடன் ஒரு பத்து தடியன்கள்.

ராகுலுக்கு நிலை புரிந்தது.

"அண்ணா!என்னண்ணா இது?"

"டேய்!போடா!வந்துட்டான் பெரிய ஹீரோ மாதிரி!"

"அண்ணா!பாவம்ணா விட்டுவிடுங்க!"

"போடா!இல்லை கொன்னுடுவேன்."

அங்கிருந்த சிறுமி ஒருத்தி,

"அண்ணா!போகாதீங்கண்ணா!"என்று கதறினாள்.

அங்கிருந்த ஒருவன் அப்பெண்ணின் கேசத்தை பற்றி இழுத்தான்.

"டேய்!போடா!"-என்று ஒருவன் கை ஓங்க ராகுல் அவன் கரத்தை இறுக பற்றினான்.

"விடுடா!விடுடா!"-வலியால் அவன் கத்தினான்.

அங்கு யுத்தம் மூண்டது.

ராகுலின் பின்னால் ஒருவன் கத்தியால் குத்த வந்தான்.

அவன் சற்றே விலக அது இன்னொருவனின் கையை கிழித்தது.

"இதோ பாரு!உன் நண்பன் தான் குத்தினான்!நான் ஒண்ணும் பண்ணலை!"

இன்னொருவன் அவனை அடிக்க வர அவன் மீண்டும் விலக அவன் கம்பியில் போய் மோதினான்.

"ஓ...பார்த்துடா!ஒரு சண்டை போட தெரியலை!நீ எல்லாம் என்னடா ரவுடி!"

இவ்வாறே அனைவரையும் ஒரு கை பார்த்தான்.இறுதியாக ஒருவன் அவன் கையை பின்னால் மடக்க ராகுல் சற்றே திணறினான்.

அங்கிருந்த ஒரு பெண் ஒரு கட்டையை எடுத்து அத்தடியனின் கையில் அடிக்க அவன் கையை விட்டான்.

"சூப்பர் சிஸ்டர்!"-இப்போது ராகுல் அவன் கையை பற்றினான்.

"யார்டா நீங்க?"

"சொல்ல மாட்டேன்!"

"மாட்ட?"

"மாட்டேன்!"

-ராகுல் அவனதுஉடலின் பாதியை ரயிலின் வெளியே தள்ளினான்.

"சொல்லலை!விட்டுவிடுவேன்!"

"சொல்றேன்!சொல்றேன்!"-அவனை உள்ளே இழுத்தான்.

"சொல்லு!"

"நாங்க இந்தப்பொண்ணுங்களை பாம்பேக்கு கூட்டிட்டு போய் அங்கே வித்துடுவோம்!"

"உங்க ஹெட் யாரு?"

"இதை பண்ண சொன்னது ரகுவரன் சார் தான்!"

"யார்டா அவன்?"

"அக்ஷயம் ப்ராப்பர்டிஸ் ஓனர்!"-ராகுலின் புருவம் உயர்ந்தது.

"பொய் சொல்லாதே!"

"இல்லை...சத்தியம்!"-அவன் மனம் குழம்பியது!சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அவரா இதை செய்தார்???

"நீங்க எப்படிம்மா இதுல மாட்னீங்க?"அவன் கேட்டதும் அச்சிறுமிகள் அழுதனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.