(Reading time: 10 - 19 minutes)

"ண்ணா!படிக்க வேண்டிய வயசுல ஒழுங்கா படிக்காம காதல்,கத்திரிக்கான்னு போய் இந்த நிலைக்கு வந்துட்டோம்!"

"இத்தனை பேருமா?"

"எங்களில் சிலர் ரொம்ப ஏழை!அவங்களை நல்லா படிக்க வைக்கிறோம்னு சொல்லி ஏமாத்திட்டாங்கண்ணா!"-ராகுலுக்கு கண் கலங்கியது.

"சரி அழாதே!!நீங்க எங்கே இருந்து வந்தீங்க?"

"தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா மாவட்டத்தில இருந்து ஒவ்வொருத்தர்ணா!"-அவன் நாடிதுடிப்பே செயலற்று போனது!

பெண்குலத்தை கடவுளாக வணங்கும் தேசத்தில் தான் அவர்களை சர்வநாசமாக்கவும் துணிகின்றனர்.

ராகுல் தன் கைப்பேசியை எடுத்து கார்த்திகேயனுக்கு தொடர்பு கொண்டான்.

"மச்சான் ராகுல் பேசுறேன்டா!"

"சொல்லுடா!"-விவரத்தை கூறினான்.

"என்னடா மச்சான் சொல்ற?ச்சீ...அவ்வளவு கேவலமானவனா அவன்?நாளைக்கே பேப்பர்ல போட்டு கிழிச்சிடுறேன்!அவன் குடும்பமே தூக்குல தொங்கட்டும்!"

"அவசரப்படாதே!இதுல,நிறைய பொண்ணுங்க மானமும் சம்பந்தப்பட்டிருக்கு!நம்மக்கிட்ட சரியான ஆதாரமும் இல்லை!" 

"டேய்!இப்படியே விட்டா..."

"அவனுக்கு தண்டனை கிடைக்கும்!இப்போ அதைவிட நமக்கு இந்த பொண்ணுங்களோட வாழ்க்கை தான் முக்கியம்!"

"சரி மச்சான் பார்த்துடா!"

"ம்..."-இணைப்பை துண்டித்தான்.

அச்சமயம் வந்த நிறுத்தத்திலிருந்த காவலரிடம் விவரத்தை கூறி அப்பெண்களையும்,அத்தடியன்களையும் ஒப்படைத்தான்.

"தேங்க்யூ சார்!ரொம்ப பெரிய காரியம் பண்ணிருக்கீங்க!"

"சார்!இந்த விஷயம் அந்த குழந்தைகளை பாதிக்காம..."

"கண்டிப்பா!அவங்க பெயர் கூட வராம கவனிச்சிக்கிறேன்!"

"தேங்க்ஸ் சார்!"-அவன் கிளம்புகையில் அங்கிருந்த பெண்ணொருத்தி,

"அண்ணா!தெய்வம் மாதிரி வந்து காப்பாத்துனீங்கண்ணா!சாகுற வரைக்கும் உங்களை மறக்க மாட்டேன்!"-என்று அவன் காலில் விழ அவன் தடுத்தான்.

"என்னம்மா!பத்திரமா வீட்டுக்கு போங்கடா!தேவையில்லாம இதுமாதிரி மாட்டிக்காதீங்க!நல்லா படிக்கணும் சரியா?"

"ம்..."

"வரேன்!"-என்று மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்தான்.

ராஜசிம்மபுரத்திற்கு இல்லை...

மதராசப்பட்டினத்திற்கு!!!

2 வாரம் கழிந்தது....

அன்று தீக்ஷாவின் விவாஹம்!!!

திருமண மண்டபமே பரபரப்பாய் இயங்கியது!!

அவள் மனமோ தாறுமாறாய் துடித்தது.நாணத்தில் அல்ல!அச்சத்தில்!

இனி என் வாழ்வில் என்னவாக போகிறது?

நாராயணா...இது என்ன சோதனை??

அவள் அழுது புலம்பினாள்.

"தீக்ஷா குட்டி!"-ஆர்த்தியின் ஆனந்தமான குரல் கேட்டது.

"அத்தை!"

"உட்காரு உட்காரு!"

"என்ன அத்தை?"-அவர் ஒருமுறை அவளை அளவெடுத்தார்.

தங்க நிற பட்டு உடுத்தி,மிதமான நகைகளுடன் தங்க சிலையாய் மின்னினாள் தீக்ஷா.(நம்ம பயலுக்கு தான் கொடுத்து வைக்கலை)

"மஹாலட்சுமியே தான் நீ!உண்மையிலே ஸ்ரீதர் கொடுத்து வைத்தவன்!"

அவளுக்கு அந்த வார்த்தைகள் இன்பம் அளிக்கவில்லை.

"இன்னும் 4 மணிநேரத்துல என் மருமகளாயிடுவ!ஸ்ரீதரை உன் பொறுப்புல ஒப்படைத்துவிடுவேன்! அது போதும் எனக்கு!"(நியாயப்படி இது மது கூற வேண்டிய வார்த்தைகள்)-எதேர்ச்சையாக அவள் கரத்தை பார்த்தவர்,

"இது என்ன ஒரு வளையல் தான் இருக்கு!இன்னொன்னு எங்கே?"-அது மது தந்த வளையல்,மற்றொன்றை போட வேண்டியவன் தான் அதனை மறுத்துவிட்டானே!!

"அது...அத்தை!"

"கழட்டிடு!நான் வேற தரேன்!"தன்னிச்சையாக அவள் கண்கள் ஈரமாயின.

"என்னாச்சும்மா?"

"இது....வந்து...இது...அம்மா வளையல் அத்தை!இன்னொரு வளையலை நான் தொலைத்துவிட்டேன்!"

'"அப்படியா?சரி போட்டுக்கோ!ஸாரிடா!"

"ம்..."

"அழாதே!இனி நீ என் பொண்ணு!அழக்கூடாது!"-அவள் கண்களை துடைத்தார்.

"நீ ரெஸ்ட் எடு!நான் வரேன்!"-அவர் சென்றப்பின்,அந்த வளையலை ஒருமுறை தொட்டு கண்ணீரில் மூழ்கினாள் தீக்ஷா.

தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:877}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.