(Reading time: 27 - 54 minutes)

ஞ்சனாவை பார்க்கவென்று காத்திருந்த அந்த குழந்தையின் பெற்றோர்கள்  இவள் வரக் கண்டதும்.. ஊரிலே செல்வாக்கான குடும்பத்தில் சீராட்டி வளர்ந்த பெண் தன் உயிரை பணயம் வைத்து நம் குழந்தையை காப்பாற்றணும்ன்னு என்ன அவசியம்? கண்கலங்கி... பேச்சு வராது கையெடுத்து கும்பிட்டவர்களாய்,

“அம்மா.. எஸ்டேட்ல இன்னைக்கு வேலை பார்த்தா எக்ஸ்ட்ரா சம்பளம் கிடைக்கும்ன்னு போயிட்டோம்.. அதுக்குள்ளே இவ ஆத்துல...!”,

நடந்ததை சொல்ல முடியாமல் தவித்த அந்த தாய்....

“அவளை பத்து வருஷமா தவமிருந்து பெத்தேன்ம்மா...”, என்று தழுதழுக்க சொன்னதே அந்த குழந்தை அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியது.

அவர் பேச்சில் இருந்த தாய்மையின் வாசம் அஞ்சனாவை ஏதோ செய்தது...

நன்றி என்ற மூன்று எழுத்தை  விவரிக்க முடியாவிட்டாலும்.. அந்த நன்றி உணர்ச்சி எதிரே நின்றவர்களின் உடல் மொழியில் வெளிப்பட...

‘அன்பான பெற்றோர்கள்... ஏதாவது செய்ய வேண்டும்..’, என்று நெகிழ்ந்தவள்.. ஓடிப்  போய் ஒரு பை நிறைய உயர்ரக இம்போர்டட் சாக்லேட்களை எடுத்து வந்து கொடுத்தாள்.

வாங்க தயங்கியவர்களிடம், “உங்களுக்கு யார் கொடுத்தா? பாப்பாக்கு தான்..”, என்று விளையாட்டாக சொல்லி அவர்களிடம் கொடுக்க..

“அம்மா... நீங்க பிள்ளை குட்டியோட நூறு ஆயுசு வாழணும்மா”, என்று மனதார வாழ்த்தியவர்கள் சொன்ன வார்த்தையில்....

நெகிழ்ந்த சிவகிரி தனது பாக்கெட்டில் இருந்து ஒரு கொத்து ரூபாய் நோட்டுகளை அவர்கள் கையில் திணித்தார்...

You might also like - Krishna Saki... A family oriented romantic story...

வர்கள் சென்ற பின், தன்னையே உற்று நோக்கிய மாமனை எதிர் கொள்ள முடியாமல் அஞ்சனா தவிக்க, அவர்,

“அம்மாவும், அப்பாவும் இப்போ தான் கோவிலுக்கு போனாங்க. இந்த விஷயம் நல்ல வேளைக்கு அவங்களுக்கு தெரியாது.”, என்றவர்.

“உனக்கு எதுவும்ன்னா... எங்க யாராலையும் தாங்க முடியாது! தெரிஞ்சுமா இந்த வேலையை பார்த்து வைச்சிருக்க!”, கண்டிப்பும், கவலையும் சேர்ந்திருக்க...

அது அவளுக்கு புரியாமல் இல்லை. ஆனால், இதை யோசிக்கும் நிலையில் அவள் அப்பொழுது இல்லையே...

“இல்லை மாமா... கண்ணு முன்னாடி ஒரு உயிர் போராடும் போது... என்ன பத்தி இல்லை.. எதை பத்தியும் யோசிக்க முடியலை மாமா!“

தயக்கத்துடன் ஆரம்பித்தவள்.. மனதில் உள்ளதை இயல்பாக வெளிப்படுத்தினாள்.

அவள் சொல்லி முடிக்கும் பொழுது, வெடி பெட்டியுடன் தன்னை கடந்த பாலாஜியை ஆர்வமாக தொடர்ந்த அவளின் கண்கள்... அந்த பதிலில்  சிவகிரி முகத்தில் தாண்டவமாடும் வேதனையை கவனிக்க மறந்து.... பாலாஜியின் பின்னே ஓட வைத்தது....

“ஏஏஏ... பஜ்ஜி!!!!! தவுசன்ட் வாலாவா???”,

தவுசன்ட் வாட்ஸ் பல்பு போல முகம் பிரகாசிக்க அவனருகே ஓடிச் சென்று.. அவன் கையில் இருந்த பெட்டியை பார்வையிட...

“ம்ம்.. ஆமாம். வர்றியா???”,

கேட்டவன் முகத்தில் சற்று முன் இருந்த கோபம் காணாமல் போயிருந்தது. மாறாக கனிவு தான்... அமைதியாக சொன்னவனை கண்டவளுக்கு வியப்பு!

தன் தந்தையிடம் அவள் அளித்த பதில் தான் அந்த மாற்றத்திற்கு காரணம்  என்பதை அவள் அறியவில்லை..

“என்னடா சாஃப்ட் லுக் விடுற! இருந்தாலும்... நம்ம மானம் ரோசம் இல்லாத பரம்பரைன்னு இவ்வளவு சீக்கிரமா ப்ருவ் பண்ண கூடாதுடா! மனசுக்கு கஷ்டமா இருக்கு!”, என்று நெஞ்சை பிடித்து கொள்வது போல பாவனை செய்ய ..

“ஒட்டடை குச்சி! வாய் பேசாம உன் தங்க கம்பியை எங்கே ஒளிச்சு வைச்சிருக்க... சீக்கிரமா வரச் சொல்லு! மதுரை மாமா வந்தா நாய்ஸ் பொல்யூஷன்னு கிளாஸ் எடுத்து வெடி போட விட மாட்டார்... ”, என்று சொல்ல..

“போற வழியில் பிக் பண்ணிக்கலாம் டா... கிளம்பு கிளம்பு...”, என்று அவன்  ஏறுவதற்கு முன்னதாகவே பைக் பில்லியனில்  குதித்து ஏறி அமர்ந்து கொள்ள..

“இப்படி பின் சீட்டில் எனக்கு முன்னாடியே குந்திகிட்டா.. நான் எப்படி  வண்டியில் ஏற முடியும்? ”, என்று அவன் மீண்டும் கொதிக்க ஆரம்பித்தான்...

அவளோ சிறிதும் கூட அசைந்து கொடுக்காது, “பெரியப்பா போதனையை கேட்கிறதை விடவா வண்டியில் ஏறுறது கஷ்டம்”, என்று சொல்ல...

“குந்தி தேவி! ஏன்டி  சர்க்கஸ் பண்ண வைக்கிற”, திட்டிக் கொண்டே ஜிம்னாஸ்டிக் செய்வது போல காலை அப்படி இப்படி அட்ஜஸ்ட் செய்து சிரமபட்டு  பைக்கில் ஏறி அமர்ந்து, வண்டியைக் கிளம்பினான்.

செல்லும் வழியில் சிபி வந்து இவர்கள் நடுவில் ஏறி அமர்ந்து கொள்ள இப்பொழுது “ட்ரிபிள்ஸ்”...

அந்த ஊரின் மணிக் கூண்டு அருகே இவர்களை போல இன்னும் இரண்டு அணி இருந்தனர். யார் அணி சரவெடியை தொடர்ந்து அதிக நேரம் வெடிக்க வைப்பது என்று போட்டி.. காலங்காலமாக தீபாவளி தோறும் நடக்கும் போட்டி...

முந்தைய நாளே அஞ்சனாவும், சிபியும்  ஐம்பது - “ஆயிரம் வாலா” சரவெடிகளை இணைத்து கட்டி வைத்திருந்தனர்... வெடியை பற்ற வைத்து வெடிக்க ஆரம்பிக்க.....

அப்பொழுது மதுரையில் இருந்த விஜய தாரிணியின் குடும்பம் வந்த SUV ஊருக்குள் நுழைந்தது. வெடி போட்டதால் அந்த மணிக் கூண்டு இருந்த ரோட்டை கடந்து செல்ல முடியாமல் டிரைவர் தவிக்க, மகேந்திரன் பட படத்தார்.

“ப்ச்.. வெடி சத்தம்.. காதை பிளக்குது. நமக்கே இப்படின்னா  சே... வயசானவங்க எல்லாம் பாவம்!”

“என்னத்தை சொல்ல இந்த காலத்து பசங்களை! அவங்களைச் சொல்லியும் குத்தமில்லை... பெரியவங்க தான் எடுத்து சொல்லணும்...  நாய்ஸ் பொல்லியூஷன் பத்தி  நம்ம வீட்டு பிள்ளைங்ககிட்ட ஒரே ஒரு தடவை தான் சொன்னேன்... பொறுப்பா அதை கேட்டுகிட்டாங்க தானே!”,

என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே... டிரைவர் இருக்கைக்கு அடுத்து அமர்ந்திருந்த ராகவ்வின் கண்களில் சற்று தூர தொலைவில் பாலாஜியும், அஞ்சனாவும் வெடி வெடித்து ஆரவாரித்து கொண்டிருப்பது தெரிய...

‘அப்பா இவங்களை பார்த்துட்டா!! திட்டினாலும் பரவாயில்லை... அட்வைஸ் பண்ணியே புண்ணாக்கிடுவாரே!’, என்று ராகவ் நினைக்கும் பொழுதே..

மாற்று பாதையில் வீட்டிற்கு செல்லலாம் என்று டிரைவர் வண்டியைத் திருப்ப... நிம்மதி பெருமூச்சு விட்டவன் வேகமாக தன் தந்தையை நோக்கி,

“அப்பா.. என் ப்ரண்ட் வீடு இங்க தான் இருக்கு! பார்த்துட்டு வந்துடுறேன்.”, என்று காரில் இருந்து இறங்கி கொள்ள...

“என்னடா.. திடீர்ன்னு...”, என்று அவர்  திகைக்க..

“இல்லைப்பா.. ஜஸ்ட் பத்து நிமிஷம் தான்.. நீங்க தாத்தா வீட்டில் இறங்கிட்டு காரை இங்கயே அனுப்பி விடுங்க”, என்று சொல்லி கழண்டு கொண்டான்...

அஞ்சனாவோ மற்ற அணிகளின் சரவெடி வெடித்து முடிந்து பின்னும்... தொடர்ந்து தங்களின் சரவெடி  வெடித்துக் கொண்டிருப்பதை கண்டதும்,

“அய்... நாம தான் வின்னர்!”, என்று சிபியுடனும் பாலாஜியுடனும் ஹை பை கொடுத்து குதிக்க... 

“குட்டி!!!!”,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.