(Reading time: 27 - 54 minutes)

தீபாவளிக்கு லீவ் விடலை.. அதிபுத்திசாலி அஞ்சனாவின் பிறந்த நாளுக்காக லீவ் விட்டு இருக்காங்க”, என்ற ஹர்ஷ்ஷின் குரல் மட்டும் கேட்டது.. திரையில் அவன் தெரியவில்லை...

உடனே தன் அத்தையிடம் வாயாடினாள் அஞ்சனா.

“அத்தை, உங்க ஃபீலிங்க்ஸ் புரியது... குதிரை மட்டும் எனக்கு வேலை வாங்கி கொடுக்கலைன்னா வச்சுக்கோங்க கண்டிப்பா அவனை மேரேஜ் பண்ணிப்பேன்! டோன்ட் ஒர்ரி!”

என்று சொல்ல... அது நடந்து விடாத என்ற ஏக்கம் வாசுகிக்கு.. சொக்கரின் சொத்துக்கள் அத்தனைக்கும் சிவகிரிக்கு இருக்கும் உரிமையும் பங்கும் கிரிதரனுக்கும் உண்டு!

ஆனால், கிரிதரனுக்கும் சரி.. வாசுகிக்கும் சரி.. மருத்துவ ஆராய்ச்சியில் கிடைக்கும் பேரும், புகழும் இந்தியாவில் சிறிய ஊரில் கிடைக்காது என்று அமெரிக்காவிலே குடி புகுந்து விட...

அமெரிக்காவிலே அதிக சொத்துக்களை குவித்து விட்ட பின், இந்தியாவின் சொத்துக்கள் மீது நாட்டமின்றி போனது கிரிதரனுக்கு. தம்பி தானே  அத்தனையும் பராமரிக்கிறான். அவனுக்கே அதை கொடுத்து விடலாம்  என்றும் முடிவாக சொல்லி விட்டார்.

வாசுகிக்கோ பராம்பரிய சொத்துக்களை விட்டு கொடுக்கும் எண்ணமில்லை. சிவகிரி - சங்கரிக்கு  ஊரில் கிடைக்கும் மரியாதை தங்களுக்கு கிடைப்பதில்லை என்ற வருத்தம் எப்பொழுதும் உண்டு. ஊருக்கு சென்றால், அங்கு உள்ளவர்கள் தன்னை உரிமையாளர் போல பார்க்காமல்,  ஒரு விருந்தாளி போலவே பார்ப்பதாக ஒரு எண்ணம்.

அஞ்சனா ஒரே பெண் வாரிசு - அவள் பெயரிலும் ஏகப்பட்ட சொத்துக்களும், மூன்று தலைமுறையாக வந்த விலை மதிப்பற்ற நகைகளும்... பண மதிப்பை பார்த்து ஏங்கவில்லை வாசுகி. சொக்கர் குடும்பத்தின் ஒரே பெண் வாரிசு என் மருமகள் என்ற பெருமை வந்து சேருமே! அது அவரை ஏங்க வைத்தது! நெடிய மூச்சை விட்ட வாசுகி,

“நீ விளையாட்டுக்காவது சொல்றே! இவன் என்னடான்னு நம்ம பழக்க வழக்கத்துக்கு கொஞ்சம் கூட ஒத்து வராத லேட்டினோ பொண்ணை...”, என்று புலம்ப ஆரம்பிக்க..

You might also like - Oru kootu kiligal... A family drama...

கிரிதரன்,

“அஞ்சுக்கு பர்த் டே விஸ் பண்ணனும் சொல்லிட்டு.... எதை எதையோ பேசிகிட்டு இருக்க!” அடக்கினார் மனைவியை.. மகனின் வாழ்க்கையை சரியாக அமைத்து கொள்வான் என்று அவன் முடிவுகளில் தலையிட விரும்பாதவராய்.

இருவரும் அஞ்சனாவிற்கு வாழ்த்தை சொல்லி விட்டு ஹர்ஷ்ஷை வாழ்த்து சொல்ல அழைக்க..

தன்னறைக்கு போய் பேசுவதாக அந்த ‘மேக் புக்’ கை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகன்றான் ஹர்ஷவர்தன்....

அஞ்சனாவும் அந்த இடத்தை காலி செய்து ‘ஐ பேட்’ டுடன் பால்கனிக்கு வர...

ஹர்ஷவர்தன், “பார்ட்னர், உனக்கு பார்சல் வந்துருச்சா!”, என்று அஞ்சனாவிடம் கேட்க,

அஞ்சனா, “என்னது பார்சலா? !!”, கேட்டு விட்டு.... பின்,

“உன் மிக்ஸிக்கு வாங்கி வச்சிருக்கிற  என்கேஜ்மென்ட் ரிங் எனக்கு அனுப்பி இருக்கியா? பார்சல்லையே ப்ரோபசலா?!”, என்று தீவிர முகத்தை வைத்து கேட்டாள்.

அவள் மிக்ஸி என்று அழைப்பது ஹர்ஷவர்தனால் லெக்ஸி என்று அழைக்கபடும் அவன் காதலி அலெக்ஸ்சாண்டரியா. வாசுகிக்கு அவள் மீது நம்பிக்கை வராததால், அம்மாவின் சம்மதம் இன்றி  தன் காதலை உறுதி செய்ய முடியாமல் தவித்து கொண்டிருக்கிறான்.

‘நம்ம வீட்டு பொண்ணுடா அஞ்சனா! அவளை நம்மளை விட வேற யாரு நல்லா பார்த்துப்பா?’,

என்று வாசுகியின் வாதத்தில் அஞ்சனாவின் மீதிருந்த பாசம் அவனை வருத்தியது..

“அஞ்சுக்கும்  என்னை மேரேஜ் செய்யும் எண்ணம் இல்லையே! மாம்”, என்று சொல்லி அவர் வாயை அடைத்தாலும், அவன் மனதுக்கு நெருக்கமானவள் ஆயிற்றே! அவள் நலன் அவன் நலனை விட முக்கியம் அவனுக்கு.

மருத்துவ ஆராய்ச்சியில் சிகரங்களை தொடும் முனைப்பில் அதிலே தங்களை முழு மூச்சாக அர்பணித்து கொண்ட பெற்றோர்களின் ஒற்றை பிள்ளையாய் வளர்ந்தவன் ஹர்ஷவர்தன். பள்ளி செல்லும் நாட்கள் தவிர.. சம்மர் ப்ரேக், வின்டர் ப்ரேக் என்று விடுமுறை நாட்கள் தொடர்ந்து வந்தால் தன் தந்தை வீட்டிற்கு அனுப்பி விடுவார் கிரிதரன்.

இவன் வந்து விட்டால் போதும்... பள்ளிக் கூடம் போகாமல், இவனுடனே பொழுதை கழிக்கும்  தோழியாய், சகோதரியாய், சில சமயம் தாயாய் கூட அன்பை புகட்டிய அஞ்சனா எது கேட்டாலும் அதை செய்து விட்டே பழக்கபட்டவனாகி போனான்.

அஞ்சனா அவனை கிண்டலடித்ததுடன் மட்டும் அல்லாமல்,

“எனக்கு பிடிச்ச வேலையை கொடுக்கலை, நமக்கு டும் டும் டும் தான்!”, என்று விரலை ஆட்டி மிரட்ட...

அவனுக்கோ...

உன்னை விட வேற யாராலே என்னை நல்லா பார்த்துக்க முடியும்?

தன் அம்மா சொன்னதை இவளாகவே கண் முன் வந்து கேட்பது போலிருந்தது..

அந்த கணமே அவனை வந்து தாக்கியது அந்த நினைவலை.  அவளை கண்ணில் வைத்து தாங்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளி விடும் அந்த நினைவலை.. அது தாளாமல் கண்களை கைகளால் மூடியவனைக் கண்டதும்...

‘ச்சே... அத்தை சொல்றதையே நாமளும் சொல்றோம்.. பாவம் லவ்வை ப்ரோப்போஸ் பண்ண முடியாம அல்லாடுறான்... அப்செட் ஆக்கிட்டோமோ!’, பதறிப் போனாள்..

“ஸாரி பார்ட்னர்!! ஹர்ட் பண்ணிட்டேனா!”, என்றவளின் தழைந்த குரலில் கண் விழித்தவன்...

அடிவாங்கிய குழந்தையைப் போல தன்னையே பார்ப்பவளைக் கண்டதும்.. மறுப்பாக தலையசைத்து...

மெலிதாய் சிரித்த படி, “நாட் அட் ஆல்!!!” என்று  மொழிய..

அவன் பதில் சற்றே ஆறுதல் அளித்தாலும்,

“ஆதி மேரேஜ்க்கு வந்த எங்க பேட்ச் எல்லாரும் வேலைக்கு ஜாயின் பண்ணிட்டாங்க.. நான் மட்டும் தான் வீட்டிலே இருக்கிறேன்!”

“இரண்டு கப்  வைச்சிருந்த அந்த வைஷ்ணவி கூட ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறேன்னு பீத்துறா.... ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு ஒத்த அரியர்.... அதையும் உழைச்சு களைச்சு கிளியர் பண்ண பிறகும் வேலை இல்லாம இருந்தா....”

“.....உன் கசின்க்கு அது எவ்வளோ பெரிய அவமானம்! அதனால் தான்  ஸ்டிரிக்ட்டா சொல்ல வேண்டியது இருக்கு!”, என்று  தன்னிலை விளக்கத்தை  வீர வசனமாக எடுத்துரைக்க....

அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது...

“வெட்கம், மானம் எல்லாம் நம்ம பரம்பரைக்கே கிடையாதே பார்ட்னர்?”, என்று அவளது பஞ்ச் டயலாக் வைத்தே பஞ்சராக்க...

“ம்ம்.. இல்லைன்னா அப்போ லோன் போட்டு எடுத்துப்போம் பார்ட்னர். இப்போ நமக்கு அதுவா முக்கியம்?”, என்று அவள் சமாளிக்க...

“குதிரை ஏதோ பார்சல் அனுப்பி இருக்கான் குட்டி...”, என்று சத்தமாக சொல்லிக் கொண்டே வந்த ராகவ் அந்த பெட்டியுடன் அவளைத் தேடி வர... விழி விரித்த அஞ்சனா....

“ஹே... நீ சொன்ன பார்சல்!!!!”,

என்று சொல்லி முடிக்கும் பொழுது.. ஐ பேட் - ராகவ்விடம், பார்சல் - அவளிடம்...

ஆர்வத்தில் பார்சலை கொதறி ... உள்ளே இருந்த பரிசைப் பிரித்தாள்...

உள்ளே வேலைக்கான உத்திரவாத கடிதமும்... கூடவே ஸ்கேட் போர்ட்டும்...  அதை பார்த்ததும் திக்கு முக்காடிப் போனவளாய் ... ஐ பேட்டில் ஹர்ஷ்ஷிடம் நலன் விசாரித்து கொண்டிருந்த ராகவ்விடம் ஓடி வந்து அவன் கழுத்தை கட்டி துள்ளிக் குதித்து...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.