(Reading time: 27 - 54 minutes)

வெடிச் சத்தத்திலும் பின்னால் இருந்து வந்த அந்த அழைப்பு தெள்ளத் தெளிவாக உள்வாங்கியது அவள் மனது.... சற்றும் எதிர்பார்க்காத தன் அண்ணனின் குரல் கேட்டதும் மகிழ்ச்சி கொப்பளிக்க...

“அண்ணா”, இன்ப அதிர்ச்சி அலையின்  வேகத்தில் சத்தமின்றி உதடுகள் உச்சரிக்க திரும்பி பார்த்தவளின் வாயசைப்பை புரிந்து கொண்டவன் முகத்திலும் ஆனந்த பெருமிதம்!

“இருபத்தோரு வயசு ஆனதும் ஞானம் வந்துடுச்சா! அண்ணான்னு மரியாதை எல்லாம்?”, கிண்டல் வாய் மொழியாக வந்தாலும்.. அவன் மன மகிழ்ச்சியை முகம் காட்ட..

அவனுக்கு பழிப்பு காட்டியவள்...

“உனக்கு அப்படி வேற கூப்பிடுவேன்னு நினைப்பா? ராகுன்னு தான் சொன்னேன்.. ”, என்று சரளமாக பொய்யுரைத்தவள்...

“கண்ணை நோண்டுற எக்ஸாம் இருக்கு.. வர முடியாதுன்னு சொல்லிட்டு இப்போ திடீர்ன்னு வந்து குதிச்சிருக்க!”, என்று அவள் கேட்க...

‘கண்ணை நோண்டுறதா.. ஆப்தமாலஜி படிக்கிறவனை  இதை விட கேவலமா யாரும் சொல்ல முடியாது!’

என்று தனக்குள் எண்ணிய படி சிரித்தவன்...

“என் ஸ்வீட் சிஸ்டர்க்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுக்கத் தான்!”, என்று சிரித்துக் கொண்டே அவள் இரு கன்னத்தையும் பிடித்து கிள்ளி,

“பர்த்டே விஷ்ஷஸ் அன்ட் பிஞ்ச்சஸ்”

அஞ்சனா, “தேங்க்ஸ்”, என்று பதிலுக்கு அவன் இரு கன்னத்தையும் பிடித்து கிள்ள... அதைப் பார்த்த பாலாஜி,

You might also like - Ithanai naalai engirunthai... A family oriented romantic story...

“ராகு பார்த்து, உன் கன்னத்தை கொதறி வைச்சிடுவா! இந்த குட்டிஈஈ...”, என்று இழுத்து... “... பிசாசு”, என்று முடிக்க..

சிரித்துக் கொண்டே பார்வையை பாலாஜி மற்றும் சிபியின் பக்கம் திருப்பினான். சிபியை நலன் விசாரித்த ராகவ், பாலாஜியிடம்,

“குட்டிக்கு தான் மன வளர்ச்சி கம்மின்னா.. உனக்கு என்னடா? இன்னும் சின்ன பசங்க கூட போட்டி போட்டுகிட்டு இருக்க!”, என்று கேட்டது தான் தாமதம்,

“பச்சை பசு மாடு (ரா - கவ்)”, என்று அஞ்சனா அவனை நன்றாக அழுத்தி கிள்ள..

பாலாஜி, “பிசாசுன்னு சொல்லி ஒரு செகன்ட் கூட ஆகலை.. ப்ரூவ் பண்ணிட்டா பாரு!”, என்று கிண்டலடித்து விட்டு, ராகவ்விடம்,

“இந்த வீக்கென்ட் இன்டர்ன்ஷிப்க்கு சைனா கிளம்புறேனே! அதான் குட்டி பிசாசு அண்ட் அவ சிஷ்ய பிள்ளை கூட இந்த ஃபன் டைம்மை மிஸ் பண்ண விரும்பலை!”,

என்று சொல்ல.... பிரிய போகிறதை எண்ணி கவலை கொண்டது அஞ்சனாவின் மனது...

தேயிலை வர்த்தகத்தில் காலங்காலமாக ஆதிக்கம் செலுத்தும் சைனாவில் அது சார்பாக புது யுக்திகளை பற்றிய பயிற்சி எடுக்கத் தான் பாலாஜி செல்கிறான். அந்த பயிற்சி படிப்பைப் பற்றி ராகவ் விசாரிக்க ஆரம்பிக்க...

“தடி மாடும்.. பசு மாடும் படிப்பு பத்தி ஆரம்பிச்ச்சாச்சா.. எனக்கு கொட்டாவி வருது. மீ கோயிங்”, என்று அஞ்சனா கிளம்ப,

“அக்கா வெடின்னா ஓடி வருவா.. படின்னா ஓடி போயிருவா...”, என்று சிபி எதுகை மோனையுடன் கேலி செய்ய...

சரவெடிக்கு போட்டியாக வெடிச் சிரிப்பு அங்கே! அஞ்சனா அப்பேர்பட்ட  படிப்பு சூறாவளி!

‘இந்த தம்பி பீஸ் என்னை டம்மி பீஸ் ஆக்குறான்’, என்று அவள் தம்பியை முறைக்க..

சிபிக்கு துணை வந்த பாலாஜி,

“அவனை ஏன் முறைக்கிற குச்சி மிட்டாய்! இருந்த ஒரு அரியரையும், நான் எழுதி கொடுத்த பிட்டை வைச்சு கிளியர் பண்ணிட்ட... எந்த கவலையும் இல்லாம சாப்பிட்டு சாப்பிட்டு தூங்க வேண்டியது தான் உனக்கு வேலை!”, என்று சொல்ல..

“சொல்லுவடா.. சொல்லுவ... நீ சும்மா வீட்டில் உக்கார்ந்து புக்கை துறந்து வைச்சிட்டு ஈஸியா பிட் எழுதிட்ட...”

“அதை எக்ஸாம் ஹால்ல ஒளிச்சு ஒளிச்சு வைச்சு எழுத நான் எவ்வளோ கஷ்ட பட்டேன் தெரியுமா? ஹார்ட் வொர்க் நெவர் ஃபெயில்ஸ்! என் கடின உழைப்பாலே  பாஸாயிருக்கேன்!”, என்று பெருமை அடிக்க...

“அய்யோ காமெடி பண்றியே குட்டி!!”, என்று வயிற்றை பிடித்துக் கொண்டு ராகவ் சிரிக்க...

“குட்டி தான்... குட்டி சாத்தான்.. மை டியர் குட்டி சாத்தான்”, , என்று பாலாஜி ஓட்ட... அஞ்சனாவும் பதிலுக்கு அவனை ஏதாவது சொல்ல வேண்டும் என்று,

“எனக்கு என்னமோ நீ சைனாக்கு ட்ரையினிங் போற மாதிரி தெரியலை.. ஒரு சப்பை மூக்கி ‘யுவான் சுவாங்கி’ யை பிடிக்க போறது போல தெரியுது....”  என்று ஆரம்பிக்க அவர்கள் உரையாடலை தொடர விடாது..

ராகவ்வை அழைத்து செல்ல கார் வந்து சேர... அஞ்சனாவும், சிபியும் அவனுடன் காரில் ஏறிக் கொள்ள.. அவர்களை தன் பைக்கில் தொடர்ந்தான் பாலாஜி.

நால்வரும் அரட்டை அடித்த படியே வீட்டிற்குள் நுழைய.... அஞ்சனாவைப் பார்த்ததும்...

“அத்த!!!”, மழலையில் மொழிந்த படி ஓடி வந்து அவள் காலை கட்டிக் கொண்டான் கேசவ்வின் மூன்று வயது பையன் அபினவ்..

மென்பஞ்சாய் தன் காலை கட்டிக் கொண்டவனை கையில் அள்ளிக் கொண்டு உச்சி முகர்ந்து முத்தமொன்றை வைத்தவள்...

“என் செல்ல மருமகனே! கண்டிப்பா என் பொண்ணை உனக்கு தான் கட்டி வைப்பேன். அதுக்காக இப்பவே காலை பிடிக்காத!”, என்று கிண்டலாக கொஞ்ச...

பேரன் பின்னே ஓடி வந்த விஜய தாரிணி அவள் சொல்வதைக் கேட்டு,

“வாம்மா மகாராணி! நம்ம ஹர்ஷ்ஷை கல்யாணம் செய்துக்கோன்னா நீயே கேட்க மாட்டேங்கிற! நாளைக்கு உன் பொண்ணு மட்டும் உன் பேச்சை கேட்குமா?”,

கிண்டலும், கவலையுமாக அவளை வரவேற்றார் அவர்.

ஞ்சனாவை ஹர்ஷவர்தனுக்கு மணமுடிக்க அவருக்கு மட்டுமல்ல மொத்த குடும்பத்தின் விருப்பமுமாக இருக்க... அந்த பேச்சை எடுத்த பொழுதே இருவருமே மறுப்பு சொல்லி விட்டனர்.

இருவரும் பழகும் விதத்தை நன்கு அறிந்த பவதாரிணியும் அதை  வற்புறுத்தவில்லை. ஆனால், வீட்டில் உள்ள மற்ற பெரியவர்களுக்கு அது ஏமாற்றமே!

வந்ததும் வராததுமாக பெரியம்மா இந்த பேச்சை எடுக்கிறாரே என்று யோசிக்கும் பொழுதே... சோபாவில் அமர்ந்த படி, ஐ பேட்டில்  ஃபேஸ் டைம் போட்டு தன் ஆச்சியும் தாத்தாவும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும்,

‘அதானே பார்த்தேன்! சுகி அத்தை புலம்ப ஆரம்பிச்சுட்டாங்களா?’, என்று யூகித்த படி.. அவர்களை நோக்கி சென்றவள்.. ஐபேட் பின்னே இருந்து குனிந்து தலையை கவுத்திய படி காமிராவின் மிக அருகில் முகத்தைக் காட்டி ....

“ஹாய் சுகி அத்தை!”,

என்று சொல்ல...  தலைகுப்புற தெரிந்த அவள் பிம்பத்தை பார்த்து...

“அறுந்த வாலு... காமிரா முன்னாடி வந்து நேரா உட்கார்ந்து பேசு! ”, என்று வாசுகி அழைக்க... தாத்தா பிடித்துக் கொண்டிருந்த ஐ பேட்டை தன் வசம் எடுத்துக் கொண்டவள்...

அப்படியே தாத்தா, பாட்டி மடியில் பாதி உடலை சாய்த்து படுத்த படி திரையில் தெரிந்த தன் அத்தை மாமாவைப் பார்த்து..

“தீபாவளிக்கு ஹார்வேர்ட் யூனிவர்சிட்டி லீவ் விட்டு இருக்காங்களா? நீங்களும் மாமாவும் ரிலாக்ஸ்டா வீட்டில் இருக்கிறீங்க”,

பல்கலைக் கழக ஆராய்ச்சி மருத்துவர்களான இருவரிடமும் அவள்  இந்த கேள்வியை வைக்க, அவர்கள் வாயைத் திறக்கும் முன்னே...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.