(Reading time: 27 - 54 minutes)

ராகு ஐ காட் எ ஜாப் ஆஃபர்”, என்று சந்தோஷ களிப்பில் திளைக்க.... அங்கே ஹர்ஷ்ஷின் காதில் புகை...

அஞ்சனாவை பொறுத்தவரை ராகவ்விற்கு தான் எப்பொழுதும் முதலிடம்.. ஹர்ஷ் அதற்கு அடுத்து தான்... அதில் ராகவ்விற்கு பெருமை... ஹர்ஷ்ஷிற்கு பொறாமை. இன்றும் அப்படியே..

“கிப்ட் கொடுத்தது நான்!”, என்று ஹர்ஷ் கடுப்புடன் நினைவுறுத்த...

“தீயுற வாசனை வர்றதுலே கண்டு பிடிச்சுட்டேன்!!!  தேங் யூ சோ மச் மை லவ்லி குதிரை!”, என்றவள்.. மேலும்,

“ராகு என் ப்ரைம் ப்ரதர்!! நீ என் க்ரைம் பார்ட்னர்”, என்று

திரையில் தெரிந்தவனிடம் சொல்ல... வாஞ்சையுடன் தன் தங்கையின் தோளில் கைபோட்டு தன்னோடு அணைத்து கொண்ட ராகவ்,

“பொசசிவ்னஸ்ஸ உன் மிக்ஸிகிட்ட காட்டு! என் தங்கைகிட்ட காட்டுற!”, என்று ஹர்ஷ்ஷிடம் வம்பிழுத்தான்.

தன் காதலியை சொன்னதும் ஹர்ஷவர்தன் முகம் பிரகாசமடைந்தது.

“லெக்ஸ்ஸின்னா இன்னும் ஓவர் பொசசிவ்வா இருப்பேன்!”, என்று மெல்லிய சிரிப்புடன் அவன் சொல்ல.. அஞ்சனா வேகமாக ராகவ்விடம் திரும்பி,

“நல்ல வேளைக்கு உன் குட்டி தங்கை தப்பிச்சிட்டா ராகு... “, என்று சொல்ல..

You might also like - Nesam niram maaruma.. Cute family drama

அவளின் குறும்பு பேச்சை ரசித்த படி,

“வாஸ்தவம் தான் குட்டி! ஆனா, உன்னை வேலைக்கு எடுக்கிறவன் சிக்கிட்டானே!“, என்று வாய் நிறைய சிரிப்புடன் சொன்னான் - ஆர்யமனின் தலைவிதியை அறிந்து வைத்தவன் போல...

உள்ளுக்குள் தங்கையை வேலைக்கு அனுப்ப  இஷ்டமின்றி,

“வீட்டில் ஜாலியா இருக்கிறதை விட்டுட்டு வேலைக்கு போய் என்னத்தை  வெட்டி முறிக்க போற? ”, என்று அக்கறையுடன்  கேட்க,

“வேலைக்கு போய் கம்பெனி ஸ்டார்ட் பண்ணனும் அது தான் என் ஆம்பிஷன்!”, என்ற அவளின்  தீர்க்கமான பதிலில் மிகப்பெரிய ஜோக்கை கேட்டது போல ராகவ்வும், ஹர்ஷவர்தனும்  வெடித்து சிரித்தனர்..

“சிரிக்காதே குதிரை! நீ தானே எனக்கு இன்ஸ்பிரேஷன்.. நீயே கிண்டல் பண்ற”, என்று திரையைப் பார்த்து அவள் சிணுங்க..

ஹர்ஷவர்தன்,

“உண்மையை சொல்லு பார்ட்னர் .. கம்பெனி ஆரம்பிக்கிறது உன் ஆம்பிஷனா? லவ் பண்றது ஆம்பிஷனா?”, என்று சிரிப்பை கட்டுபடுத்தியவனாய் கேட்க...

அஞ்சனா, “ஷார்ட் டேர்ம் கோல் லவ் பண்றது...”, என்று இழுத்தவள்...

“லாங் டேர்ம் கோல் கம்பெனி ஸ்டார்ட் பண்றது!”, என்று முடிக்க..

பலமாக சிரித்தான் ராகவ். எப்பொழுதும் ஒரு பாதுகாப்பு வேலிக்குள்ளே இருந்தவளுக்கு... நகர வாழ்க்கையை எட்டி பார்க்க.. சுதந்திர காற்றை சுவாசிக்க... அவளுடன் பயின்ற சக மாணவர்கள் போல ஐ.டி. கம்பெனியில் வேலைக்கு போக... என்று பல ஆசைகள்...

அவள் ஆசைகளின் எல்லை வரை அறிந்தவன் ஹர்ஷவர்தன்!

அதனால் அவளுக்கு காதல் மீதிருக்கிற பிரம்மிப்பும் ஆர்வமும் அவனுக்கு தெரியாமல் இல்லை.. அதுவும் இருபத்தியோரு வயதில் அடிவைத்ததும், காதலிக்க போவதாக அவள் ஏற்கனவே சொல்லியிருந்ததால் தான் அந்த கேள்வியை கேட்டதே! ஆர்வக் கோளாறில் சும்மா சொல்கிறாள் என்று தான் நினைத்தான்.

அமெரிக்காவில் வளர்ந்த தன்னாலே பெற்றோரின் முடிவுக்கு எதிராக செயல் பட முடியவில்லை.. அவளாக யோசித்து.. ஒருவனைத் தேடி... பழகிப் பார்த்து.. முடிவு எடுப்பது எல்லாம் அவளால் முடியாது என்ற அவன் நினைப்பை  அவள் கூடிய விரைவில் சிதறடிக்க போவது அவனுக்கு தெரியாதே! அஞ்சனா பதிலில் சிரித்தவன், ஏதோ நினைவு வந்தவனாக...

“ஹே.... ஒரு குட் நியூஸ்”, என்று கண்கள்  மிளிர ஆர்வமாக சொல்ல ஆரம்பிக்க...

ராகவ்,

“என்னது குட் நியூஸ்ஸா?!!!”, அதிர்ந்தவன்,

“மிக்ஸியை ப்ரபோஸ் பண்றதுக்கு முன்னாடியே  விசேஷமா?”, என்று ரகசியக் குரலில் கேட்ட பொழுது, இவர்களைத் தேடி வந்த பாலாஜியின் காதில் இந்த விஷயம் விழுந்து விட...

“என்னது.. மிக்ஸிக்கு குவா.. குவாவா..”, அதிர்ச்சியாக கேட்டுக் கொண்டே அவர்களை நெருங்க...

“அடப்பாவிங்களா... ஒன்னுமே இல்லாததை ஹாட் நியூஸ் ஆக்கிடாதீங்க...”, என்று கையெடுத்து கும்பிடாத குறையாக கெஞ்சிய ஹர்ஷவர்தன்,

“மேக்ஸ் சாஃப்ட்டோட மேஜர் ஷேர் ஹோல்டராகிட்டேன் சொல்ல வந்தேன்...  இன்ஃபாக்ட், அஞ்சுக்கு கூட அந்த கம்பெனி மூலமா தான் ஜாப் ஆஃபர் ஏற்பாடு செய்திருக்கேன்”, என்று சொல்ல...

‘தாத்தா ஸ்கூல்.. பெரியப்பா காலேஜ்.. இப்போ கசின்னோட  கம்பெனியா?’,

ஆதி திருமணத்திற்கு வந்த அவள் பேட்ச் தோழிகள், “ஹே.. நம்ம காலேஜ் மேனேஜ்மெண்ட்க்கு வேண்டிய பொண்ணுன்னு உன் கூட பேசவே பயமா இருக்கும்ப்பா..”, படிப்பை முடித்த பின் மனம் திறக்க..  

இவளுக்கு வருத்தமாகி போனது.நிறுவனருக்கு சொந்தம் என்றதாலே, மற்றவர்களால் இயல்பாக பழக முடியவில்லை. வேலை பார்க்கும் இடத்திலும் அதே நிலை தொடருமா என்ற கவலை இவளை தொற்றியது.  

‘இப்போ அதுவா முக்கியம்?’,

என்றெண்ணியவள் மனது  அந்த கவலையை விட.. ஹர்ஷவர்தனின் வெற்றியை கொண்டாட விழைந்தது!! எந்த பண உதவியும் இன்றி, சொந்தமாக காலூன்ற வேண்டும் என்ற கனவு அவனது!!! 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவளிடம் மிகவும் வருத்தத்துடன் புலம்பியது நினைவில் நின்றது..

“எனக்கே தெரியலை பார்ட்னர் என்னோட மூவ் சரியா தப்பான்னு... நான் பார்த்து பார்த்து வளர்த்த கம்பெனியை மேக்ஸ் சாஃப்ட்க்கு அடகு வைச்சு... சீக்ரெட் டீல் போட்டு இருக்கேன்.. வந்தா மலை.. இல்லைன்னா....”

என்ற ஹர்ஷ் புலம்ப ஆரம்பிக்க அஞ்சனா இடைமறித்து,

“இல்லைன்னாங்கிறதே இல்லை!!! மலை தான்!! மலை தான் கண்டிப்பா கிடைக்கும்! உன் பார்ட்னர் அடிச்சு சொல்றா!”, என்று சொல்ல...

“என் பார்ட்னரும்... அதாவது பிஸ்னஸ் பார்ட்னரும் அதைத் தான் சொல்றான்... , என்றான்..

அன்றைய நிகழ்வை இவள் நினைவு கூர்வதற்குள்..

பாலாஜியும், ராகவ்வும் தங்களை வாழ்த்துக்களை சொல்லி முடித்திருக்க....

தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஷ்ஷிடம்,

“உன் க்ரைம் பார்ட்னரும், பிஸ்னஸ் பார்ட்னரும் சொன்னது நடந்திடுச்சு பார்த்தியா!!!”, என்று குதூகலித்தவளிடம் ஹர்ஷ் சந்தோஷமாக ஏதோ பேச வருவதற்குள்...

பாலாஜி இடைமறித்தான்..

“ஹே.... நெட்டை குச்சிக்கு ஜாப் ஆஃபர்ன்னு ஏதோ சொல்லிக்கிட்டு இருந்தே!”, என்று ஹர்ஷ்ஷிடம் கேட்க, இவள் முந்திக் கொண்டு,

“டேய்.. இங்க பாரு... நீ  சைனா போனா... நான் சென்னை போவேன்ல...”, என்று பெருமையாக தன் வேலை உத்திரவாத கடிதத்தை நீட்ட..

ஆர்வமின்றி அந்த கடிதத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு,

“வேலைக்கு போகணும்னு ஆசையிருந்தா ஆதி கூட நம்ம எஸ்டேட் ஆபிஸ்க்கு போயிட்டு வா. மத்த படி தனியா சென்னை போறதெல்லாம் சரி படாது. உனக்கு ஊரு, உலகத்தை பத்தி தெரியாது! நானும் பக்கத்தில் இருக்க மாட்டேன்!”, என்று அவன் தடை விதிக்க...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.