(Reading time: 27 - 54 minutes)

வள் ஆற்றாமையில்...

“நீ என்ன சைனாலே பொறந்து வளர்ந்தியா? இல்லை தானே! சைனீஸ் கூட தெரியாத நீ சைனா போறப்போ.... இந்தா இருக்கிற சென்னைக்கு போகக் கூடாதா?”,

என்று பாலாஜியிடம் கோபமாக சண்டை போடும் பொழுதே, கண்ணீர் எட்டி பார்க்க..

ஹர்ஷவர்தனிடம் திரும்பி,

“என்ன செய்வியோ தெரியாது பார்ட்னர்... இவன் சைனா போறதுக்கு முன்னாடி நான் வேலையில் இருக்கணும்.”,

மனத் தாங்கலில் குரல் நடுங்க சொன்னவளுக்கு மடை திறந்த வெள்ளமாய் கண்ணீர் பெருக்கெடுக்க..

ராகவ் அவளை தேற்ற விழைய.. இங்கே ஹர்ஷவர்தன் கோபத்தில் பாலாஜியை கடிந்தான்.

“அவளும் உன்னை மாதிரி மனுஷி தானே! அவளுக்குன்னு கனவுகள் இருக்காதா? சும்மா எந்த நேரமும் அவளை மட்டம் தட்டி... அவ ஃபீலிங்க்ஸ்ஸ கொஞ்சமாவது புரிஞ்சிக்க முடியாதா உனக்கு? அவளை என்ன காட்டுக்கா அனுப்புறேன்!”,

பாலாஜி, தனது ரோல் மாடலாக நினைக்கும் ஹர்ஷவர்தனிடம் திட்டு வாங்கியது மனதை வருத்த... அது அவன் கோபத்தை அதிகரித்ததே தவிர... குறைக்கவில்லை..

தன் தோளில் அஞ்சனாவை சாய்த்து ராகவ் தேற்றிக் கொண்டிருப்பதை கண்டு எரிச்சலடைந்தவன்,

You might also like - Manam koithaai Manohari... A family oriented romantic story!

“எதுன்னாலும் அழுதே சாதிச்சிடு.. எல்லார்கிட்டயும் என்னை திட்டு வாங்கி கொடுக்கிறதே வேலையா போச்சு உனக்கு!  தாராளமா சென்னைக்கு போயிட்டு வாம்மா! எனக்கென்ன வந்தது!”, என்றவன்...

“பாஜி நீ சொன்னதை கேட்கலையேன்னு ஒரு நாள் ஃபீல் பண்ண தான் போற”, ஆதங்கத்தில் கத்தி விட்டு அங்கிருந்து அகன்றான்.

முரட்டு சுபாவம் கொண்ட பாலாஜி, உண்மையில் மனதால் கூட அவளுக்கு தீங்கு நினைக்க மாட்டான். என்ன பேசுகிறோம் என்று  தெரியாமலே  ஆத்திரத்தில் கொட்டிய வார்த்தைகள்... பின்னாளில் உண்மையாகும் பொழுது எத்தனை வேதனை படப் போகிறானோ!

அவன் அந்த இடத்தை விட்டு அகலும் வரை காத்திருந்த ராகவ்... அவன் சென்ற பின் தங்கையின் முகவாயை உள்ளங்கைகளில் அள்ளி அவள் கண்களுக்குள் பார்த்த படி,

“பாஜியை பிரிய கஷ்டமா இருக்கா குட்டி?”, தானும் வருந்தியவனாய் தழைந்த குரலில் கேட்டான்...

;நான் இருக்க மாட்டேன்’, என்ற பாலாஜி சொன்னது... இவளது ஆற்றாமையை கிளறி இருக்கிறது. பிரிவாற்றாமையில் தான் அவள் அவனிடம்  சண்டை போட்டது. அவன் இல்லாத வீட்டில் இவளால் இருக்க முடியாது. அவனுக்கு முன்பே சென்னைக்கு கிளம்ப நினைக்கிறாள். இத்தனையும் யோசித்து விட்டிருந்தான் ராகவ்.

தன் மனக் கவலையை சொல்லாமலே படித்து விட்ட அண்ணனை எண்ணி நெகிழ்ந்தவளுக்கு பதில் சொல்ல முடியாமல் மேலும் கீழுமாக தலையசைத்தவளுக்கு கண்ணீர் மேலும்  ஊற்றெடுக்க....

அதை பார்க்க முடியவில்லை அவனால். அவளை ஆறுதல் படுத்தும் வழிகளை யோசித்தவனாக.... மெல்ல அவள் தலையை கோதி விட்டவன்,

“சரி! இங்கே இருக்க வேண்டாம்.. அண்ணா கூட மதுரைக்கு வந்துடு”, மென் குரலில் கேட்க...

மறுப்பாக தலையசைத்தவள்.. கேவலுடன் சொன்னாள்..

“அங்க வந்தாலும் பாஜியை மிஸ் பண்ணுவேன் ”, 

நான்கு வருடம் இருவருமே அங்கே தானே தங்கி படித்தனர்! இரட்டையர் போல வளர்ந்தவர்களுக்கு பிரிவு கஷ்டமாக இருக்கும். அதிலும், வீட்டு உறவுகளே கதியென கிடக்கும் இவளுக்கு அது பெரிய கஷ்டம்!

அஞ்சனாவிற்கு இட மாற்றம் வேண்டும் என்று இவன் நினைக்க.. இவர்கள் பேசுவதை திரையில் பார்த்த ஹர்ஷவர்தனும் அதே முடிவுக்கு வந்திருந்தான்.

அவள் ஆசைகளை நிறைவேற்ற நினைக்கும்  ஹர்ஷவர்தன்...

அவள் கவலையை களைய நினைக்கும் ராகவ்...

அவளை ஆபத்து அண்ட கூடாது என்று நினைக்கும் பாலாஜி...

இவர்களின் பாச முடிச்சுகளையும் மீறி விதி என்று ஒன்று இருக்கிறதே!!!! அது வலியதாயிற்றே!!! அது அஞ்சனாவின் வாழ்வில் விளையாட காத்திருக்கிறதே!!! காதல் என்னும் மாய வலை ரூபத்தில்!

தொடரும்

Episode 04

Episode 06

{kunena_discuss:922}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.