(Reading time: 19 - 37 minutes)

ன்னிலை விளக்கம் சொல்லி அதோடு தான் அவனது பேச்சில் காயபட்டிருப்பதையும் குறிப்பால் உணர்த்தியபடி வேகமாக இவன் பக்கவாட்டிலிருந்த சேரில் வந்து அந்த செயினை வைத்த அவள் இவனைத் தாண்டி நடக்க……

“எங்க அம்மாட்ட தான வாங்கின……? அவங்கட்டயே கொடுத்துடு….” சொல்லிவிட்டு வேகமாக அவளையும் சர்ச் வாசலையும் தாண்டி ரோட்டில் இறங்கி நடக்க தொடங்கினான் இவன்.

“சார் ப்ளீஸ் சார்….பஸ்ஸுக்கு டைம் ஆகுது…..” இப்போது இவன் வேக நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவள் மித வேகத்தில் இவனுக்கு இணையாக ஓடி வந்து கொண்டிருந்தாள் அவள். கையில் அந்த செயின்.

“உனக்கு டைம் ஆனா எனக்கென்ன கோழி?” இறுகி இருந்த முகத்தில் எந்த இளக்கமும் இல்லாமல் இவன் இப்படி கேட்க அவள் ஞே என விழித்தாள். ஓடி வந்து கொண்டிருந்தவள் ஓட்டம் தற்காலிகமாக ஸ்டாண்டிங். ‘கோழியா?’

“எனக்கு சார்னு பேர் வச்சுருக்கல்ல…..அது மாதிரி நான் உனக்கு கோழின்னு பேர் வச்சுருக்கேன்” அவளது முழியைப் பார்த்து விளக்கம் சொன்னான்.

இவளது ஞே இன்னும் பரிதாபமான ஞே வாகியது.

நின்று அவளை அர்த்தமோடு பார்த்தான். “என் பேர் அதின்னு தெரியும்தானே…..” கண்டிப்பாய் மற்றவர்கள் இவனைக் கூப்பிடுவதை அவள் கேட்டிருப்பாள்தானே…. அதோடு அபயனை பேர் சொல்லிதானே பேசினாள்.

“அது இல்ல எனக்கு எப்பவும் அ க்கு அடுத்து தி சொல்ற மாதிரி வர்ற வேர்ட்ஸ்ல தி வராம டி னு தான் சொல்ல வரும்…..” அவள் தயங்கி தயங்கி சொன்ன விதத்திலும் அடி என அவன் பெயரை கற்பனை செய்ததிலும் இவன் முகத்தில் புன்னகை பரவுகிறது.

“அப்ப தீபன்னு கூப்டு….. பைதிவே நான் பேசுனதுக்கும் நடந்துகிட்டதுக்கும் சாரி….” அவள் திருடியோ இல்லையோ…..இப்படி தனியாளாய் அடுத்த நாட்டில் நின்று அழுது கொண்டிருப்பவளை வருத்த இவனால் முடியாது. ஆக சமரசத்திற்கு வழி கண்டான் அவன்.

இவன் வார்த்தையில் உடனடியாக உயிர் கொண்டு பூத்தது ஒரு பெரும் புன்னகை அவள் முகத்தில். பார்த்ததும் பக்கத்துவீட்டு குட்டிப் பாப்பாதான் நியாபகம் வந்தது இவனுக்கு. என்னவொரு இன்னொசென்ஸ்….. இவள் எப்படி தனியாக இங்கு சமாளிக்க போகிறாளாம்….? அவன் மனதில் இப்படியாய் ஒரு கேள்வி.

“பிரவாயில்ல தீபன்….. நான் யாரோதானே…….என்னை நம்பனும்னு அவசியம் இல்லை தான்…..அண்ட் தேங்க்ஸ்….. ஆனா நான் பஸ்லயே போறேன்”

கேட்டிருந்த இவன் முகத்தில் பரவியிருந்த புன்னகை மறைந்து முகம் இறுக தொடங்க அவள் குரல் இறங்கிக் கொண்டே போயிற்று.

“நான் போறன்….நீ வர்றியா இல்லையா? “ இப்பொழுது விட்டுவிட்டு விடு விடு என நடக்க மனம் வரவில்லை இவனுக்கு. ஊருக்குப் போய் செயினை கொடுத்துக்கிடலாம்னு அவள் தனியா கிளம்பிட்டா என்னாகிறது? இருட்டிகிட்டு வருதே….

ஆக நின்றபடியே முறைத்தான்.

“எனக்கு என் தம்பி எங்கேஜ்மென்டை பார்க்கனும்” இன்டைரக்ட் ப்ரெஷர் கொடுத்தான்.

அவன் எதிர் பார்த்தது போலவே இதற்கு பலனிருந்தது….அவள் இறங்கி வந்தாள் தான்.

 “வாங்க” அவள் குரலில் உற்சாகமில்லை எனினும் இப்பொழுது நடக்க தொடங்கி இருந்தாள் அவள் பெண் வீட்டைப் பார்த்து.

இணைந்து நடந்த அதிபனோ அவளுள் இருந்த ஒருவித அன்கம்பர்டபிள்  அமைதியை கலைக்க நினைத்து இயல்பாய் பேச்சை துவங்கினான். “உன் பேரென்ன சொன்ன அனுதானே?....அங்கயும் இப்டிலாம் நேம் வைக்றாங்க என்ன?”

“ம்….அனுகா…..அனுன்னு கூப்டுவாங்க….அனுகான்றது ஜூயிஷ் ஃபெஸ்டிவல் ஆஃப் லைட்….”

“ஓ….. அப்ப நீ ஜூயுவா….?”

“அப்டிலாம் இல்ல…. அம்மா ஃப்ரெண்ட் ஒருத்தங்கதான் எனக்கு இந்த நேம் வச்சது…..மத்தபடி எங்க ஆரிஜின் ஸ்பெய்ன்னு சொல்லுவாங்க அம்மா…..நாங்கல்லாம் ஜெனரேஷன்ஸா யூஎஸ் சிட்டிசன்ஸ்….”

இதற்குள் பெண் வீடு வந்திருக்க வீட்டிற்குள் படியேற தொடங்கினான் இவன். அவளோ தயங்கி நின்றாள்.

திரும்பி இவன் பார்த்த பார்வையில் மீண்டுமாக தயங்கி தயங்கி, இவனையும் உள்ளே தெரிந்தவர்களையும் மாறி மாறி பார்த்தபடி ஏறியவள், இவன் நின்றிருந்த மேல் படியில் கால் வைக்கும் போது இவனை இடித்துவிடக்கூடாதென அதிக கவனமாக விலகி ஏற, அதில் படியின் விளிம்பில் கால் வைத்து ஸ்லிப் ஆக, அவசரமாக அனிச்சையாக இவன் தான் அவளை கை பற்றி நிறுத்தினான்.

“எங்க பார்த்துட்டு வர்ற? அங்க யாரு உன்னை என்ன செய்துட போறாங்க?” சின்னதாய் சிடுசிடுத்தான்.

அவன் கோபத்தில் அதை தாங்கமாட்டாமல் இன்னுமாய் ஒரு தவித்த பார்வை இவளிடம்.

“அங்கெல்லாம் யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க அனு….” அவள் பார்த்த விதத்தைப் பார்க்கவும் இவன் தொனி கீழிறங்கிவிட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.