(Reading time: 19 - 37 minutes)

கையிலிருந்த அந்த பேக்குடன் நடந்து கொண்டிருந்தாள் அனு. அவள் மனம் தாறுமாறாய் எகிறி ஏறிக் கொண்டிருந்தது. “அங்க கிராமத்துல அடுத்தவங்க நம்ம பத்தி என்ன பேசிக்கிறாங்களோ அது நம்ம  தினசரி வாழ்க்கைய கூட பாதிக்கும்…. அதுவும் ஒரு பொண்ணு பேரு பையன் பேரோட சேர்ந்து வந்துச்சுன்னா….” அவளது கனி ஆன்டி சொன்னது சிந்தனையில் ஓடிக் கொண்டிருக்க ‘முதல் நாளே இப்டி பேர் வாங்கியாச்சே…. நான் எப்படி சமாளிக்க போறேன்?’ என்று தவித்துக் கொண்டிருந்தது மனது. அதோடு உடனடி ப்ரச்சனையாக அந்த ஸ்ட்ரெய்ட் பஸ் வேற போய்ருக்கும்…

அந்நேரம் ஓடிப் போய் அவளது குறுக்காக நின்றான் ஆரவ். அவள் முகத்தையே பார்த்தபடி குறுக்காக வந்து நின்ற குழந்தையின் முகம் பார்க்கவும் அவளுக்குள் சட்டென இலகு நிலை உயிர் வரை.

“உங்க ஃப்தென்டுட்ட சொல்லிட்டேன் ஆன்டி….நீங்க கோபபட்டா அவங்களும் கோபபடனும்னு…..அவங்க கேட்கவே இல்லை….சிதிக்காங்க…..உங்களுக்கு இந்த கீ தந்து விட்டாங்க….காத்ல வெயிட் செய்வீங்களாம்….” அவளுக்கு திரும்பிப் பார்க்காமலே குழந்தை யாரை சொல்கிறது என புரிகிறது தான்.

“தேங்க் யூ ஸ்வீட் சீக்‌ஸ்…. ஆனா ஆன்டி பஸ்ல போய்க்கிறேன்னு சொல்லிடுங்க ப்ளீஸ்” குழந்தையின் கன்னத்தை தொட்டு செல்லமாக தட்டிவிட்டு இவள் நகர முற்பட….

“நான் திதும்ப அங்க போல….” இதற்குள் மூடு மாறியிருந்த ஆரவ் கீயை கீழே போட்டுவிட்டு அடுத்திருந்த அவனது வீட்டிற்குள் ஓடிப் போனான்.

அனுவுக்கு என்ன செய்யவென தெரியவில்லை….கீயை திரும்பிக் கொடுக்கவென அதிபனை மறுபடியுமாக சென்று சந்திக்கவோ, அல்லது கீயை அங்கேயே கிடக்கட்டும் என போட்டுவிட்டோ, காரில் சென்று கீயை வைத்துவிட்டோ போக மனம் வரவிலை அவளுக்கு. வேறு வழி இன்றி கீயை எடுத்துக் கொண்டு போய் காரைத் திறந்து உள்ளே அமர்ந்து கொண்டாள்.

அவள் சென்று காரில் ஏறி அமரும் வரை பார்த்திருந்த அதிபனுக்கு மனதில் ஓரளவு திருப்தி.

ங்கு விழா நடந்து கொண்டு இருந்தது.

நிலவினி யவ்வன் இருவரும் சம்மதம் என்று சொன்ன பிறகு ‘உனக்கு வைக்றேன்டா ஆப்பு’ என்ற ரேஞ்சில் கருவிக் கொண்டிருந்த நிலவினி  கண் முன் அவளுக்கும் யவ்வனுக்குமான திருமணத்தை உறுதி செய்யும் வண்ணம், இவளது அப்பாவும் அவனது அப்பாவும் பழம், பூ இன்னும் என்னவெல்லாமோ வைக்கப் பட்டிருந்த பெரிய தாம்பளத்தை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ள எழுந்து நிற்க இன்னுமாய் ஏறுகிறது டென்ஷன் இவளுக்குள்.

அதற்குள் “என்ன ஜெயநாதா பாதி பணம் வைக்கலைனாலும், சப மரியாதைக்காவது தட்டுல மூனு இல்லனா 5 லட்சம் வச்சு கொடுக்கலாம்ல…..எல்லாத்தையுமே தனியாதான் கொடுக்கனும்னு நினச்சுட்ட போல…” கூட்டத்துக்குள்ள இருந்து ஒரு ஆண் குரல்…..

தன் அம்மா அவரை “அப்பா பங்காளி குடும்பங்கள்ள இவர்தான் மூத்தவர்….நல்லது கெட்டது இவரை வச்சுதான் பேசுவாங்க” என அடையாளம் சொன்னது நிலவினிக்கு ஞாபகம் வருகிறது

“சரி இப்ப போய் இத சொல்லிகிட்டு இருக்கீங்க பெரியப்பா…. இப்ப போய் பணத்தை எடுத்துட்டா வர முடியும்….? ஜெயண்ணா நீ எவ்ளவு குடுக்றன்னு  வார்த்தையா சபைல சொல்லி தட்டை மாத்திரு…. அது போதும்….” இது இன்னொரு உறவுக்காரர்.

“ஒரு பைசா தரக் கூடாது, எது கொடுக்கனும்னாலும் நேரம் காலம் பார்த்து பின்னால உங்க பொண்ணுட்டயே நேரடியா கொடுத்துக்கோங்கன்னு சொல்லிட்டாங்க பொற்பரன் அத்தான்.….. இதெல்லாம் சொல்லிட்டு தான் பொண்ணு பார்க்கவே வரேன்னு சொன்னாங்க” அப்பா பெருமிதம் பொங்க சொல்லிக் கொண்டு போக இவள் கண் எதிரில் தட்டு கை மாறுகிறது.

நிலவினிக்கு இப்பொழுது இன்னுமாய் பயம் வயிற்றைப் பிசைகிறது. இதுவரையே கூட அப்பாட்ட இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்ல தைரியம் வரலை…இனிமேலா இவ சொல்லிடப் போறா? கண்ணில் அதுவாக நீர் கட்டுகிறது.

அடுத்து அப்பா அந்த தட்டை  அம்மாவிடம் கொடுக்க அம்மா அதை இவள் கையில் கொடுத்து இவளுடன் உள்நோக்கி நடக்க தொடங்க, இவர்களைப் பின் பற்றி அவன் வீட்டு பெண்கள் வருவதை உணர்ந்து அழுதுவிடாமல் இருக்க மனம் முகம் என எல்லாவற்றையும் கட்டுப் படுத்திக் கொண்டு இவள்.

இவளது அறைக்கு அத்தனை பேரும் உள்ளே வர…. “நீ போய் அடுத்த ரூம்ல அந்த புடவைய மாத்திட்டு வந்துடும்மா…… நாங்க இங்க இருக்கோம்” என்றார் யவ்வனின் அம்மா.

சற்று முன்பு தான் இவர் யவ்வனின் அம்மா என புரிந்தது இவளுக்கு. ராயகிரியில் வைத்து இவளது அத்தனை கண்டிஷன்களை கேட்டவர்தானே இவர்? பின்னே எப்படி இந்த கல்யாணத்திற்கு இவர் ஒத்துக் கொண்டார்? எல்லாம் பண ஆசை…..பொண்ணுக்கு விருப்பம் இல்லைனா பையன் லைஃப் எப்படி நல்லா இருக்கும்னு ஒரு அக்கறையும் இல்லை…. அம்மா பையன் யாருக்குமே பொண்ணுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்றது ஒரு விஷயமா படலைனா எப்படிப் பட்ட குடும்பம் இது?

தன் அறைக்குள் போய் கண்ணில் இருந்து நீர் பொங்கி பொங்கி வடிய மாப்பிள்ளை வீட்டிலிருந்து கொடுக்கப்பட்டிருந்த, உடல் முழுவதும் ஜரி வேலைப்பாடு செய்யப் பட்டிருந்த அந்த பீச்சிஷ் பிங்க் நிற செல்ஃப் ஜரி பட்டுப் புடவைக்கு மாறினாள்.

வடிந்த கண்ணீரைக் கட்டுப் படுத்தி……அழுத அடையாளம் தெரியாதிருக்க மீண்டுமாய் மேக்கப் போட்டு ஓரளவு நேரத்தை கபளீரம் செய்துவிட்டே வெளியே வந்தாள் நிலவினி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.