(Reading time: 19 - 37 minutes)

ப்பொழுது மாப்பிள்ளை வீட்டு தாம்பளத்திலிருந்த மெகாசைஸ் பிச்சிப்பூ பந்தை எடுத்து அனைத்தையும் இவள் தலையில் இவள் ஏற்கனவே வைத்திருந்த பூவிற்கு மேலாகவே சுத்தினார் அவனது அம்மா.

இதுக்கு மேல நினச்சாலும் இவளால தலைய உயர்த்த முடியும் என்று தோன்றவில்லை….. அத்தனை வெயிட்டாய் தலை…..யாரோ கூட்டிப் போய் அவன் அருகில் உட்கார வைத்தார்கள் இவளை.

 அடுத்து “நிலு கைய காமி”  என்ற அம்மாவின் சத்தத்தில் இவள் சட்டென நிமிர்ந்து பார்க்க எதிரில் கையில் மோதிரத்துடன் யவ்வன்….

பிடிக்கலைனு சொல்லியிருக்கேன்….எவ்ளவு தைரியமிருந்தா மோதிரத்தோட வருவான்….தலையை நிமிராமல் விழியால் மட்டும் முறைத்தாள் அவனை….

“நிலுமா……மாப்ள வெயிட் பண்றார் பாரு” அப்பாவின் குரலில் கை அதுவாக உயர்கிறது அவனை நோக்கி….. இவள் கண்ணிலிருந்து அவனை நோக்கி பறக்கும் அக்னி அம்புக்கும் குறைவில்லை….. ‘கைய பார்த்துட்டா மோதிரம் போட்டுடுவானாமா?” இவள் மனம் இப்படி ஒரு படு நீதியான கேள்வியை கேட்டு தனக்குள் எகிற….

“இப்ப கூட போட சொல்லி நீ கைய காமிக்க போய்தான் நான் போடுறேன்” என இவளுக்கு கேட்கும் அளவுக்கு சிறு குரலில் சொல்லிக் கொண்டே இடக் கையால் இவள் கையைப் பிடித்துக் கொண்டு வலக் கையால் அந்த மோதிரத்தைப் போட்டான் அவன்….

‘இருடா இப்ப என்னை போட சொல்லுவாங்கல்ல அப்ப நீ கைய நீட்டுவல்ல….அப்ப கவனிச்சுக்கிறேன் உன்னை…….’ கருவிக் கொண்டே அம்மாவிடம் கையை நீட்டினாள் மோதிரத்திற்காக…. அதற்குள் தன் விரலில் அணிந்திருந்த ஒரு ஷார்ப் எட்ஜ் மோதிரத்தின் கூம்பு போல கூர்மையாக வடிவமைக்கப் பட்டிருந்த பகுதியை உள்ளங்கை பக்கமாக திருப்பிக் கொண்டாள்….கைல வச்சு ஒரு இழு…அடுத்த தடவை தொடனும்னா யோசிப்பல்ல…..

“இல்லமா இப்ப நாங்க உங்க வீட்டுக்கு வந்துட்டு  அவன் உனக்கு ஒன்னும் தராம போனதா இருக்க கூடாதுன்னு தான் இதெல்லாம்….” அவனது அம்மா இப்படி சொன்னார் எனில்  இவளது அக்காவோ

“அவர் கைய பிடிக்க நீ இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணனும் நிலு…..இப்டி அவசர படக்கூடாது…” என்று சற்று சத்தமாக அவனுக்கும் கேட்க்கும் அளவிற்கு முனங்க….அவனுக்கு மட்டுமா அருகிலிருந்த அனைவர் காதிலும் அது விழுந்து வைக்க….. மானம் மார்ச் ஃபாஸ்ட் பண்ணி காணமல் போனது இவளுக்கு….

அடுத்து இவளை இவளது அறையில் போய் உட்கார சொல்லிவிட்டனர். சற்று நேரத்திற்குப் பின் அவன் வீட்டுப் பெண்கள் வந்து விடை பெற்று செல்ல, ஆண்கள் உள்ளறைக்கு வர மாட்டார்கள் என தெரியுமாததால் மாப்பிள்ளை வீட்டு கோஷ்டி கிளம்பிவிட்டது என்ற ஒரு நிம்மதியுடன் அவசரமாக புடவையிலிருந்து ஒரு ஹால்ஃப் சாரிக்கு மாறிக் கொண்டு….இல்லைனா இவ வீட்ல இன்னும் டேரா போட்டுருக்கிற மற்ற சொந்தங்கள் இவளை டார் டாரா கிழிச்சுடுமே….. வீட்டின் பின் புறம் தோட்டத்திலிருந்த கிணற்றடிக்குப் போனாள்.

வழக்கமாய் இவளுக்கு மூட் அவ்ட் ஆனால் அது தான் போதிமர ஸ்தலம். சற்று நேரம் அங்கு அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு அப்பொழுதுதான் அவளது லோக்‌ஸோடொன்டா அத்தைக்கு காஃபி கொடுக்கும் மிஷன் ஞாபகம் வர

அவசர அவசரமாக அடித்துப் பிடித்து ஓடி வந்து இவள் வீட்டுக்குள் நுழைய பின் வாசல் படியில் கால் வைக்க….வைத்த பிறகுதான் தெரிகிறது இவள் கால் வைத்திருப்பது ஈரமான துணி துவைக்கும் சோப்பில் என…

மணிக்கு 200 கிலோ மீட்டர் ஸ்பீடில் இவள் கால் வழுக்கி பறக்க…..அடுத்து இதோ இந்த நிலு பக்கத்துல இருக்கிற துணி துவைக்கிற கல்லுல விழப் போறா….மண்டை சிதறு தேங்கா…..ஆள் காலியோ காலி என மனதில் ரன்னிங் கமெண்ட்ரியோடு கண்களை மூடியபடியும், இவள் இரு கைகளால் காதுகளைப் பொத்தியபடிம் “அம்மா…..” என்று அலறலோடும் விழுந்து கொண்டிருக்க…..சட்டென ஒரு டேஷ்….இவள் இடையோடு ஒரு ஹேண்ட் கேட்ச்…. இவள் லிப்ஸ் எதிலோ ஒரு இச்

தன்னை விழவிடாமல் தடுத்த அந்த ஆறடி ஆப்ஜக்டை பிடித்தபடி இவள் கண்களை திறந்தால்….படு க்ளோஷப் ஷாட்டில் அந்த பீச் நிற ஷார்ட்….முகம் பார்க்கும் முன்னமே புரிந்துவிட்டது அவள் யார் கைக்குள் இருக்கிறாள் என……யவ்வன்

அவசரமாக உதறிக் கொண்டு  அவன் பிடியிலிருந்து விலக முயன்றாள் நிலு. அவனும் சட்டென இவளை விட்டுவிட்டான். ஆனால்  காலிலில் ஒட்டியிருந்த சோப் இவளை விடலையே….மீண்டும் ஸ்கிட்…. திரும்பவும் அதே அவனை ஹிட்….அவன் கேட்ச்….. லிப்ஸ் அதே அதே….

“வினி….டென்ஷனாகாத…..வெயிட்….” அவளை பிடித்திருந்தவன் இப்போது அந்த படியிலிருந்து இறக்கி அருகிலிருந்த புல்வெளியில் விட்டான்.

கோப கோபமாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள் நிலவினி. இவனை யாரு இவ வீட்டுக்குள்ள இங்க வரைக்கும் வர சொல்றதாம்? வந்தது மட்டுமில்லாம இப்படி இடிச்சுகிட்டும் பிடிச்சுகிட்டும்…..

“உன்ட்ட சொல்லிட்டு கிளம்ப சொன்னாங்க…..அப்படியே…..” அவசர விளக்கமாக தான் வந்த காரணத்தை சொல்லிக் கொண்டு  போன யவ்வன்  கை தொட்டுப் பார்த்துக் கொண்ட அவன் கன்னப் பரப்பில்….. மாப்பிள்ளை வீட்டிலிருந்து கொடுத்த புடவையை மாற்றிக் கொண்டு கிளம்பிய இவளுக்கு “இப்ப ஃபோட்டோஸ் எடுப்பாங்க” என சொல்லிய படி அவசர அவசரமாக இவளது அக்கா போட்டுவிட்ட அந்த லிப்ஸ்டிக்  அச்சுக்கள் அதுவும் இரண்டு வெவ்வேறு இடத்தில்….

‘ஐயோ இதை இவன்ட்ட எப்படி சொல்லுவேன்….? .இவன் இப்படியே வெளிய போனா என் மானம்லா போகும்…..’ அழாத குறையாக முழித்தாள் நிலவினி…..

தொடரும்!

Episode # 04

Episode # 06

{kunena_discuss:929}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.