(Reading time: 15 - 30 minutes)

" ங்க திரும்பி வந்து பிசினஸ் பண்ணனும்னு தான் நானும் நினைச்சேன் .. அதுக்குள்ள நீங்களும் அதையே ப்ளான்  போடவும் , சரியாய் இருந்துச்சு " என்றான் அவன் ..

" அப்போ எங்க ப்ளான் உங்களுக்கு தெரியுமா அண்ணா ? " -கதிர்

" ஏன்டா இவ்வளவு நாள் உங்களோடு இருக்கேனே , யாரு என்னென்ன செய்விங்கன்னு  கூடவா எனக்கு தெரியாது "

" ஹான் ..இந்த முழு பூசணிக்காயை சோத்துல  மறைக்க பாக்காதிங்க ஷக்தி .. இந்த சங்கு தானே உங்ககிட்ட சொன்னா ?" என்றாள்  தேன்நிலா ..

" அது எப்படி நிலா , ஒரு உதாரணம் சொல்லும்போது கூட சாப்பாட்டை விட்டுத்தர மாட்டுறிங்க? " குறும்புடன் சிரித்தான் ஷக்தி .. (அது என்ன மந்திரமோ , மாயமோ தெரியல , நம்ம ஷக்தி பார்க்கும்போதெல்லாம் நிலா ஏதாச்சும் சாப்பிட்டுகிட்டே இருப்பதினால் , ஷக்தி இப்படி நிலாவை வாருவது வழக்கமாகி போச்சு .. அதுவும் நம்ம மதி அண்ணா வந்த சந்தோஷத்தில் நிலா, கொஞ்சம் பௌர்ணமி ரேஞ்சுக்கு வெயிட் போட்டுட்டாங்கன்னு வரலாறு சொல்லுதுங்க ..நான் சொல்லல..ஹீ ஹீ .. )

" டேய் மதி உன் தம்பிய பாரு டா  ..எப்போ பார்த்தாலும் கலாய்கிறான்  "

" பேசவே காசு கேக்குறவன் , இலவசமா பேசிட்டே இருக்கிறவளை  ஓவர்டேக் பண்ணுறது சூப்பரா இருக்கு குட்டிமா ..என்ஜாய் " என்று கண்ணடித்தான் மதியழகன் ..

" போதும் போதும் .. பேச்சு ரொம்ப டைவர்ட் ஆகுது .. சகலை , நீங்க சொல்லுங்க , இந்த விஷயம் எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் ?" என்று மீண்டும் கேள்விக்கு வந்தான் ஆதி ..

" அதுவா ... மிதுவுடைய இமெயில் பாஸ்வர்ட் எனக்கு தெரியுமே .. சும்மா எதார்த்தமா லாகின் பண்ணப்போ தான் பார்த்தேன் .. சரி நீங்களே சொல்லுற வரை சர்ப்ரைஸ்ஸ  கலைக்க வேணாமேன்னு சும்மா இருந்தேன் " என்றான் ஷக்தி .. அவனை ஏதோ குறுகுறுப்புடன் மித்ரா பார்த்து வைக்க அவளை பார்வையாலேயே அடக்கினான் ஷக்தி ..

" ஓ  ..அப்படியா " என்று கோரசாய் கேட்ட மற்றவர்களும் சமாதானம் ஆகிவிட , அதன்பின் "அடுத்த என்ன ?" என்ற கேள்வியுடனேயே  அவர்களின் பேச்சு தொடர்ந்தது ..

ருவாரம் எப்படி கடந்தது என்றே யோசிக்க முடியாத அளவிற்கு காலத்தின் காலில் சக்கரம் மாட்டபட்டு இருந்தது.. காலையிலேயே காரை கிளப்பி கொண்டு மதியழகனின் அபார்ட்மண்ட் வீட்டை தேடி வந்திருந்தாள் தேன்நிலா .. அரக்குவண்ண நிற பட்டுபுடவை , அவளது பால் போன்ற மேனிக்கு அழகாய் பொருந்தி இருந்தது .. புடவை கட்டி இருந்தாலும் , மனதில் இருக்கும் உற்சாகம் நடையிலும் வெளிப்பட , வேகமாய் மாடிப்படி ஏறி அவன் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினாள் .. கதவு திறப்பதற்கு முன்பே அவளது சேலை முந்தானையை பிடித்து இழுத்தான் (அட உடனே மதி அண்ணான்னு நினைக்க கூடாது) நம்ம ஷாந்தனு ..

" ஹே நிலா"

" ஷாந்து  குட்டி .. என்ன பண்ணுறிங்க  ?"

" உன்னை தூரத்தில் இருந்து பார்த்தேனா ? அதான் அம்மாகிட்ட சொல்லாம ஓடி வந்துட்டேனே .."

" வாலு பையா .. அம்மா பாவம் உன்னை தேடுவாங்கல்ல  ? இப்படியா யாரையாவது பார்த்ததும் ஓடி வர்றது ? உன்னை கடத்திட்டு போயிட்டா என்ன பண்ணுவ நீ ? நீ எவ்வளவு கியூட் தெரியுமா ?" என்று அவனை கொஞ்சி கொண்டே  அவள் விளக்க

" ஹேலோ  மேடம் .. அதெல்லாம் நான் யாரை பார்த்தாலும் ஓடி போக மாட்டேன் .. அழகு சொல்லி இருக்கானே .. புதுசா யாரை பார்த்தாலும் உடனே இப்படி ஓட கூடாது .. தெரியாதவங்க கூட ரொம்ப தூரமாய் போக கூடாது .. அப்படியே போனாலும் தைரியமா இருக்கணும் .. வீட்டு அட்ரஸ் , போன் நம்பர் எல்லாம் ஞாபகத்துல வெச்சுக்கணும் " என்று ஒவ்வொன்றாய் தனது பிஞ்சு விரல்களில் பிரித்து சொன்னான் ஷாந்தனு .. ஒரு புறம் அவனது மழலை பேச்சு , இன்னொரு புறம் தன்னவன் அக்கறையாய் அவனுக்கு கூறிய அறிவுரைகள் இரண்டையுமே ரசித்தாள்  தேன்நிலா ..

" ஹையோ ... ஷாந்தனு  ரொம்ப ரொம்ப க்ளேவர் பாய் போல "

" ம்ம்ம் சரி சாக்லட் கொடு "

" இப்போதானே க்ளேவர் பாய்ன்னு சொன்னேன் .. க்ளேவர் பாய்ஸ்  சாக்லட் சாப்பிட மாட்டாங்க "

" அதெல்லாம் கிடையாது .. சாக்லட் அளவோடு சாப்பிட்டா  நம்ம ப்ரெயின் க்கு நல்லதுன்னு அழகு சொன்னான் "

" அழகு சொன்னான் ..அழகு சொன்னான் .. இந்த அழகு இன்னும் எவ்வளவு தான் சொல்லி இருக்கான் .. சரியான கேடி " என்று அவள் சலித்து கொள்ளும்போதே  " வாம்மா நிலா " என்று வாசற்கதவை திறந்து குரல் கொடுத்தார் அம்மு பாட்டி .. அவர் குரல் கேட்டதும் லேசாய் தூக்கி வாரி போட திரும்பினாள்  அவள் .. " நாம ஏகவசனத்தில் பேசினது எல்லாம் கேட்டிருப்பாங்களோ  ?" என்று அவள் நினைக்கும்போது அவர் அருகில் கைகட்டி , காந்த பார்வை வீசினான் மதியழகன் ..

அவனது பார்வை

வில்லில் இருந்து புறப்பட்ட அம்பா ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.