(Reading time: 16 - 32 minutes)

ன் மனைவி இறந்ததற்கும், தன் தோப்பனாரின் மறைவுக்கும் காரணமே இந்த குழந்தை தான் என ஆணித்தரமாக நம்பியவர் “இது நம்மை அழிக்க வந்த சாத்தான்… இதை என் கண் முன்னாடி கொண்டு வந்திடாதே இனி எப்பவும்…” என கூறிவிட, அதன் பின்னர் அவளை முழுமையாய் வெறுத்தார்…

தகப்பனின் கோபம் அறிந்த அவளும் விவரம் தெரிந்த நாள் முதல், ஒதுங்கியே போனாள் அவரிடமிருந்து பயந்து போய்… இருந்தாலும் விடாமல், அவர் அவளிடம் வெறுப்பையே உமிழ்ந்தார் கோகிலவாணியின் பேச்சையும் மீறி கண்டு கொள்ளாமல்… 

றுநாள் சீக்கிரமே எழுந்து சாப்பிடாமல் ஸ்கூலுக்கு கிளம்பியவள், “பாட்டி நான் சாயங்காலம் நடந்தே வர்ற மாதிரி காலையிலேயேயும் நடந்தே ஸ்கூலுக்கு போறேன்… யாருக்கும் என்னால கஷ்டம் வேண்டாம் பாட்டி…” என சொல்லியவள், கோகிலவாணியின் எதிர்ப்பையும் மீறி, நடக்க ஆரம்பித்தாள்…

அவள் செல்வதைப் பற்றி மகனிடம் அவர் கூறிய போது, அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை… “போனா போகட்டும்மா… விடு… எனக்கு இனி அவ முகத்துல முழிக்க வேண்டிய அவசியம் இருக்காது… சந்தோஷம்…” என்றபடி அவர் மிக இலகுவாக சொல்ல, கோகிலவாணிக்கு யாரை சமாதானப்படுத்த என்றே தெரியவில்லை… மனம் நொந்து போனார் அவர்…

அழுது வீங்கிய முகத்துடன் வந்தவள் வீட்டை விட்டு சற்று தொலைவு வந்ததும், தனக்கு முன் நடந்து கொண்டிருந்தவனைக் கண்டதும், வேகமாக அவனருகே ஓடினாள் அவள்…

தனக்கு முன் மூச்சிரைக்க ஓடி வந்தவளைக் கண்டவன், “ஹேய்… பார்த்து… மெதுவா…” என சொல்ல,

“அதெப்படி என்னைப் பார்க்கும்போதெல்லாம், பார்த்து மெதுவா… அப்படின்னே சொல்லுறீங்க?... ஹ்ம்ம்…” என ஒற்றைப் புருவத்தை உயர்த்தி இடுப்பில் ஒருகைவைத்தபடி அவள் கேட்க, அவளின் அந்த செய்கையில் புதிதான சந்தோஷத்தை உணர்ந்தான் அவன்…

“என்ன நான் கேட்டுட்டே இருக்கேன்.. நீங்க பதிலே சொல்லாம இருக்கீங்க?...” என அவள் மீண்டும் அழுத்தி கேட்க,

“ஹ்ம்ம்… உண்மையை சொல்லனும்னா தெரியலையே…” என்றான் அவன் இருகைவிரித்தபடி…

“ஓஹோ…” என்றவளை அப்போது தான் கூர்ந்து கவனித்தான் அவன்…

அழுது அழுது வீங்கிய கண்களுடன் இருந்தவளை சற்று உன்னிப்பாக பார்த்தவன், “ஹ்ம்ம்… சாப்பிட்டியா?...” எனக் கேட்க

அவனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் திணறியவள், “ஆ… சாப்பிட்டேனே… இட்லி, சாம்பார், வடை…” என அவள் உற்சாகமாய் சொல்ல

“ஓ… சரி…” என்றபடி சற்றும் முற்றும் பார்த்தான் அவன்…

அங்கே ஒரு பெரிய ஆலமரமும், சுற்றிலும் மண் திட்டுகளும் இருக்க, அங்கே சென்று அமர்ந்தான் அவன்…

அவனது செய்கை அவளுக்கு புதிராக இருக்க, “எங்க போறீங்க?...” என அவனைப் பின் தொடர்ந்தவாறே செல்ல, அவனோ அவளுக்கு பதில் சொல்லாமல், தனது பையைத் திறந்து அதிலிருந்த டிபன் பாக்ஸினை எடுத்து அவளிடம் நீட்ட, அவள் முழித்தாள்…

“என்ன பார்க்குற?... நீ சாப்பிட்ட இட்லி, சாம்பார், வடை கூட சேர்த்து இதையும் சாப்பிடு… பிடி…”

“இல்ல… நான் சாப்பிட்டேன்…” என அவள் சொன்னதையே சொல்ல

“நிஜமாவே சாப்பிட்டியா?...” என அவன் தாழ்ந்த குரலில் கேட்க, அந்த குரல் அவளை அதற்கு மேலும் பொய் சொல்லவிடாமல் செய்ய, மெல்ல அழுதாள் அவள்…

“ஹேய்… ஏன் அழற?... என்னாச்சும்மா?... அழாத… ப்ளீஸ்… சொல்லும்மா?... என்னாச்சு?...” என அவன் பதறிபோய் கேட்க, அவள் அழுகை நீண்டது…

ஏங்கி ஏங்கி அவள் அழ, அவன் அவள் முன் முட்டி போட்டு, “சொல்லுறேன்ல… ப்ளீஸ்… அழாத…” என்று சொல்லும்போதே அவன் கண்கள் கலங்கி விட்டிருந்தது…

அவனின் கம்மிய குரலில் அவனைப் பார்த்தவள், “நீங்க ஏன் அழறீங்க?...” எனக் கேட்டதும் தான், தனது கண்களில் கண்ணீர் வந்ததையே அவன் உணர்ந்தான்…

“எத்தனையோ துன்பங்கள் வந்த போதிலும் அழாத தானா இன்று அழுவது?... ஏன்???...” என தனக்குத்தானே அவன் கேட்டுக்கொண்ட போதிலும் அவனுக்கு ஏனோ விடை தான் கிடைக்கவில்லை…

“சொல்லுங்க… ஏன் அழறீங்க?...” என அவள் மீண்டும் கேட்டதும்,

“தெரியலை…” என்றான் அவன் ஒற்றை வார்த்தையில்…

“சரி அழாதீங்க… இங்க உட்காருங்க…” என அவனை எழுந்து பழையபடி தன்னருகே அமர சொன்னவள், “நீங்க சாப்பிட்டீங்களா?...” எனக் கேட்க

“நான் சாப்பிட்டேன்… இப்போ நீ சாப்பிடு…” என்றான் மெதுவாக…

“இது மதியத்துக்கு தான வச்சிருப்பீங்க… இத இப்போ காலையில எனக்கு கொடுத்தா நீங்க மதியம் என்ன சாப்பிடுவீங்க?...” என அவள் கேள்வியோடு நிறுத்த,

“நான் என் ஃப்ரெண்ஸோட சேர் செய்துப்பேன்… நீ இப்போ சாப்பிடு….” என அவன் எடுத்துக்கொடுக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.