(Reading time: 14 - 28 minutes)

விதா தன் நகைகள் பணம் முக்கியமான பொருள்கள் எல்லாம் எடுத்துக் கொண்டாள், அதைதான் அப்பவே சொன்னானே எல்லாம் எடுத்து வைத்துக் கொள் என்று அதே மாதிரி செய்தாள், சித்ராவை திரும்பிக் கூட பார்க்கவில்லை,

வேண் கிளம்பியது சகல வசதியும் கொண்ட வேண் அது, இவர்களுக்காக வாடகைக்கு எடுத்து வந்தான், இவர்களை எங்கும் இறங்க விடக் கூடாது, அது மட்டுமில்லை, அவன் அத்தைக்கு ஆபேரஷன் ஆனது அக்கம் பக்கத்திலிருந்து தெரிந்தது, அதனால் நல்ல வசதியான வேணாக எடுத்து வந்தான்,சுரேந்தர்,

அவர்களுக்கு சாப்பிட கொடுத்தார்கள், ஆனால் அவள் வேண்டாமென்று ஒதுக்கி விட்டாள், அவள் அம்மா வாங்கி சாப்பிட்டாள், அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது, என்ன அம்மா அவர்களிடமிருந்து வாங்கி சாப்பிடுகிறாள் இப்படி யாரோ ஒருத்தர் கூட்ட உடனே கிளம்பி விட்டாள், யாரென்று கேட்டால், சொல்ல மாட்டேங்கிறாள், என்ன பண்றது இப்போ, ருத்ராவிடம் பேச முடியாது, அவர் போன் செய்வாரே, தேடுவாரே, என்ன பண்றது என்று யோசித்தாள்,

அம்மாவிடம் கேட்டாள் 'இவர்கள் யாரம்மா,' என்று

அம்மா சிறிது நேரத்தில்,' இவர்கள் உன் அத்தையின் மகன், புருஷன்,'

'சரி அவர்கள் இத்தனை வருடங்களாக வரவில்லை, இப்போது என்ன, எங்கே கூட்டிப் போகிறார்கள் நம்மை,' என்று கேட்டாள்

'அவர்கள் ஊருக்கு,'

'எதற்கு'

வாயை திறக்கவில்லை, அவள் அம்மா

'அந்த அத்தை பையன் பேரென்ன,'

'சுரேந்தர்'

எழுந்து சுரேந்தர் ரூமுக்கு போனாள், அங்கு அவன் தூங்கிக் கொண்டிருந்தான், கூட இருப்பவர்கள் பேசினது அவளுக்கு புரியவில்லை, திரும்பி தன் இடத்துக்கே வந்தாள்

கொஞ்ச நேரத்தில் சுரேந்தர் இவர்கள் ரூமுக்கு வந்தான் அவன் பாஷையில் 'எதற்கு வந்தாய்,' என்று கேட்டான்

அவளுக்கு புரியவில்லை அப்புறம் தமிழில் கேட்டான்,

'எங்களை எங்கே கூட்டிக் கொண்டு போறே,'

'ஏன் உங்க அம்மா சொல்லலே, நம்ம ஊருக்கு போறோம்,'

‘நம்ம ஊரு எது, இத்தனை நாள் ஏன் எங்களைப் பார்க்க வரலே, இப்ப எதுக்கு கூட்டி போறீங்க, எனக்கு அங்கேயெல்லாம் வர பிடிக்கலே, எதுக்கு என் போனை வாங்கி போட்டீங்க,'

'இரு உன் கேள்விக்கெல்லாம் ஊருக்குப் போய்தான் பதில், சொல்லுவேன், வேறொன்னுமில்லையே,' என்று கேட்டு கிளம்பி போய்விட்டான்

‘அம்மா என்னம்மா சொல்லப் போறியா இல்லையா, என்ன நடக்குது,'

'நான் எதையும் சொல்ல முடியாது, நீ அங்கே போய் தெரிஞ்சுக்கோ,' அவள் அம்மா எப்பவுமே அப்படித்தான், தான் ஒன்று முடிவெடுத்தால் அதில் அப்படியே இருப்பாள்,

அவர்கள் அடுத்தநாள் போய் சேர்ந்தார்கள், வேனிலிருந்து இறங்கியதும், அவள் பார்த்தது பெரிய வீடு, நிறைய பூச்செடிகள், ரொம்ப அழகான வீடு அது, வெளியே வந்தார் ஒரு பெரியவர், அம்மாவைப் போல் நடுத்தர வயது பெண்மணி, ஏதோ பாஷையில் பேசிக் கொண்டு வந்தனர், இவளைப் பார்த்தவுடன் பிரமித்து விட்டனர், அம்மாவும் அவர்கள் பாஷையில் பதில் கொடுத்தாள், இவளுக்கு ஒன்றும் புரியவில்லை,

எல்லோரும் உள்ளே சென்றார்கள், அவர்கள் பேசுவது எதுவும் புரியவில்லை,' அம்மாவிடம் என்ன நடக்கிறது, இவர்களுக்கு தமிழ் தெரியாதா, ஏன் என்னைக் இங்கு கூட்டிக் கொண்டு வந்தாய், ஏதாவது சொல்லம்மா, நான் பெரிய  பெண்ணாகி விட்டேன், வேலைக்கு போறேன், ஆபிஸ்ல லீவுக்கு சொல்லல, என்னை பொருப்பற்றவளா, நினைக்க மாட்டாங்களா, எனக்கு வேலை வாங்கிதந்தவங்களுக்கு எவ்வளவு தலை குனிவு,' என்று கேட்டாள்

'இப்ப என்ன, இரண்டு நாள் காத்திரு விஷயம் உனக்கு சொல்றேன்,'

'விஷயம் சொல்றதுக்கு எதுக்கும்மா ரெண்டு நாள் ஏதாவது கல்யாணம் பேசுறியா எனக்கு தெரியாம,' என்று கேட்டாள் சித்ரா கொஞ்சம் கோவத்துடன்

'ஆமாம் உனக்கும் சுறேந்தருக்கும், இது நான் நீ சின்னப் பெண்ணாக இருந்தப்பவே எடுத்த முடிவு, உங்க அப்பா ஆஸ்பிடல் செலவுக்கு இவர்கள் தான் பணம் கொடுத்தார்கள், அப்போ அவர்களுக்கு நான் வாக்கு கொடுத்திருக்கிறேன், உன்னை அவனுக்கு கல்யாணம் பண்ணிவைப்பதாக, ;

' என்ன பேசுகிறாய், என்னை விற்று விட்டாய் என்று சொல், வீணாக பூசி மழுப்பாதே, வாக்கு அது, இது என்று, என் சம்மதம் இல்லாமல் நீ எப்படி கல்யாணம் பண்ண முடியும், நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க முடியாது, உனக்கு அட்டாக் வந்த அன்னிக்கு இவர்கள் வீட்டுக்கு வந்தார்களா , நீ என்னிடம் மறைத்தாயா,' என்று சரமாரியாக கேள்விகள் கேட்டாள் பெண்,

'ஆமாம், அவர்கள் வந்தார்கள் அதற்கு முன்னேயும் சில தடவை வந்திருக்கிறார்கள், உன்னை உடனே கல்யாணம் செய்யவேண்டுமென்று அவர்கள் என்னை நச்சரித்தார்கள், ஆனால் நான் உன்னிடம் எதையும் சொல்லாத காரணத்தால், தள்ளி போட்டுக் கொண்டு வந்தேன்,'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.