(Reading time: 14 - 28 minutes)

'ன்ன நடந்தது ருத்ரா,' என்று கேட்டார், ருத்ரா நடந்ததை சொன்னான், அவர் காலடியில் உட்கார்ந்து, தலையை அவர்  மடியில் சாய்ந்து அழுதான் சிவகாமி உள்ளே வர வந்தார், நீலகண்டன் ஜாடை காட்டி கதவை சாத்தச் சொன்னார், அவரும் வெளியே போய்விட்டார், அவன் குலுங்கி குலுங்கி அழுதான், தாத்தா ஒன்றும் பேசவில்லை, அவன் அழுது முடித்தவுடன் தன் டவலை கொடுத்து துடைத்துக் கொள்ளச் சொன்னார், பிறகு கவலைப் படாதே கடவுள் என்ன எழுதி வைத்திருக்கிறாரோ அதான் நடக்கும், நீ இப்போதைக்கு உன்னுடைய தொழிலில் உன் முழு கவனமும் செலுத்து, எழுந்து போய் சாப்பிடு, இனிமேல் உன் கண்ணிலிருந்து ஒரு பொட்டு கண்ணீர் வரக்கூடாது, போ இங்கேயே உன் முகம் கழுவி சரி செய்துக் கொண்டு போ,' என்றார் தாத்தா,

அவன் தன்னை சரி செய்து வெளியே போனான், 'அம்மாவிடம் சாப்பாடு எடுத்து வையம்மா, விது எப்படிம்மா இருக்கா போன் பண்ணாளா,' என்று கேட்டான்,

'ஆமாம்பா, உன்னைக் கேட்டாள் நீ வெளியே போயிருந்தாய்,' என்று கூறினாள்

சாப்பிட்டு, நான் வெளியே போயிட்டு ஆபிசுக்கு போறேன், வருவதற்கு நேரமாகும் நீங்கள் எனக்காக காத்திருக்க வேண்டாம்,' என்று சொல்லி கிளம்பி விட்டான்.

'தன் தங்கையை பார்க்க வந்தான், அவர்களும் வாங்க, என்று கூப்பிட்டார்கள், உள்ளே போனான் வித்யா மாடியிலிருந்து இறங்கி வந்தாள், 'அண்ணா என்று ஓடி வந்தாள்,

'செந்தில் எங்கேம்மா,'  'இதோ வரார் அண்ணா என்று மாடியை பார்த்தாள், அவன் இறங்கி வந்து கொண்டிருந்தான், அவன் மனதில் நினைத்துக் கொண்டான் ஒரு வேளை, பூஜை நேர கரடியாக வந்து விட்டோமோ,

'வாங்க சார் எப்படியிருக்கீங்க,'  'நீங்க எப்படியிருக்கீங்க செந்தில், உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா,' என்று கேட்டுகொண்டே வித்யாவின் முகத்தைப் பார்த்தான் அவள் சிவந்தாள்,

செந்தில் சிரித்துக் கொண்டே 'அதெல்லாம் ஒன்றுமில்லை, நீங்க வேற, சும்மா பேசிக் கொண்டிருந்தோம், அவ்வளவுதான்,'

'இங்கே உட்கார் வா,' என்று தன் பக்கத்தில் உட்காரச் சொன்னான் செந்தில் அவளும் உரிமையுடன் கொஞ்சம் வெட்கத்துடனும், அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள், கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள், அவன் அம்மா வந்து இவர்களுடன் உட்கார்ந்தார், எல்லோருமாக பேசினார்கள் அவனை சாப்பிட சொன்னார்கள், ' இல்லைங்க இப்பதான் சாப்பிட்டு வந்தேன்,' என்று கூறி கிளம்பினான்,

அவன் ஆபிசுக்கு போனான் தன் வேலையில் மூழ்கினான், யாரிடமும் ஒன்றும் பேசவில்லை, அவன் ஆபிசிலிருந்து கிளம்பும் போது இரவு பத்து மணி, வீட்டுக்கு போனான், நல்ல காலம் அம்மா இல்லை, தன் ரூமுக்குப் போய் குளித்து டிரஸ் மாத்திண்டு படுத்து தூங்கிவிட்டான்.

சித்ரா யாருக்கும் தெரியாமல் தனியாக வீட்டை விட்டு ஓடினாள், ஆனால் சுரேந்தரனுடைய ஆளிடம் மாட்டிக் கொண்டாள், வீட்டிற்கு கூட்டிவந்தான், சுரேந்தரனிடம் சொன்னவுடன், அவளை அடித்தான், கோபத்தில் கண் மண் தெரியாமல் அடித்தான், அவள் அம்மா, அவன் பாஷையில் ஏதோ சொன்னாள், அவனும் அம்மாவிடம் கத்தினான், அவள் மயங்கி விட்டாள், கவிதா அழுதுக் கொண்டே தன் பெண்ணின் மயக்கத்தை தெளிய வைத்தாள்,அவளை இங்கே விடுவது சரியில்லை என்று தெரிந்தது, தினம் இரவு வெளியே செல்லும் ஒரு வண்டி உண்டு அதில் இவளை கூட்டிக் கொண்டு போய் விடலாம், என்று நினைத்துக் கொண்டாள்,

எல்லோரும் கடைக்குப் போனார்கள், யாரும் இல்லாத சமயம் தன்னுடைய சின்ன பர்ஸையும் தன் நகைகளை ஒரு சின்ன பையில் போட்டு எல்லாவற்றையும் தன் ப்லவுசில் வைத்து மறைத்து யாரும் பார்க்காத அந்த நேரத்தில் சித்ராவை மெதுவாக நடத்திக் கூட்டிக் கொண்டு அந்த வண்டியில் ஏறினாள், அன்று, என்றுமில்லாத அதிசயமாக சீக்கிரம் கிளம்பியது வண்டி, கொஞ்ச நேரத்தில் அங்கிருக்கும் பஸ் ஸ்டான்ட் அருகில் டீ குடிக்க இறங்கி சென்றான், அந்த நேரத்தில், கவிதா மெதுவாக சித்ராவை சத்தம் போடாதே என்று கூறி, அவளை அந்த இடத்திலிருந்து அருகில் நின்று கொண்டிருந்த பஸ்சில் ஏறிவிட்டாள், யாருக்கும் இவர்களை அடையாளம் தெரியாது, அந்த பஸ் எங்கே போகிறது என்று கேட்டு இரண்டு டிக்கெட் வாங்கினாள் கவிதா,

Episode # 15

Episode # 17

தொடரும்

{kunena_discuss:958}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.