(Reading time: 14 - 28 minutes)

'ரி இந்த விஷயம் சொல்லாமல், தள்ளிப் போட வேண்டிய அவசியமென்ன, எனக்கு விஷயம் தெரிந்தால் நல்லதுதானே, ஏன் மறைக்க வேண்டும்,' அவள் அம்மா பதில் சொல்லாமல் உட்கார்ந்திருந்தாள், அப்போது பின் பக்கம் ஒரே சத்தம்

சித்ரா எழுந்து சென்று வெளியே எட்டி பார்த்தாள், அங்கே சுரேந்தர் ஒரு ஆளை சித்ரவதை செய்து கொண்டிருந்தான், அவளால் பார்க்க முடியவில்லை, 'அம்மா,' என்று கத்தினாள்,

அவள் அம்மா பயந்தமாதிரியே ஆகிவிட்டது, சித்ரா மயங்கி விட்டாள் பக்கத்தில் இருந்த ஜக்கிலிருந்து தண்ணியை எடுத்து அவள் முகத்தில் தெளித்தாள்,

ருத்ரா போன் செய்து பார்த்தான் "சுவிச்ஆப்" எற்ற மெசேஜ் தான் வந்தது, கல்யாணம் முடிந்தவுடனேயே அவளுக்குத்தான் போன் செய்தான், தொடர்ந்து போன் செய்துக் கொண்டிருந்தான், தாத்தா கூப்பிட்டு 'ஏன் ஒரு மாதிரியாய் இருக்கே உடம்புக்கு ஏதாவது சரியில்லையா,' என்று கேட்டார், 'இல்லை,' என்று கூறி அம்மாவிடம் 'உடம்பு களைப்பா இருக்கு நான் ரூமுக்கு போய் படுக்கிறேன் ஏதாவது இருந்தா கூப்பிடு,' என்று கூறி போய் படுத்தான்.

அவன் அம்மாவும் ஒன்றும் கூறவில்லை,' சரிப்பா போய் ரெஸ்ட் எடு,' என்றாள்

அவள் ஏன் சுவிச் ஆப் பண்ணியிருக்கா, என்று தூங்காமல், இரவு முழுவதும் யோசித்துக் கொண்டிருந்தான்

மறு நாள் காலையில் குளித்து கிளம்பினான் அவள் இருக்கும் தெருவில் தன் காரை எடுத்துபோய் அவள் வீட்டு வாசலில் நிறுத்தினான், உள்ளே போய் பார்த்தான் கதவு பூட்டியிருந்தது, அப்போதுதான் அந்த ஆண்டி வந்தாள் அங்கே ஹாஸ்பிடலில் அவளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்த ஞாபகம், 'வாங்க தம்பி, அவங்க வேறு ஊருக்கு போயிட்டாங்களே, இனிமே வரமாட்டாங்க,' என்றாள்

'எப்போ போனாங்க, எந்த ஊருக்குப் போனாங்க,' என்று கேட்டான்

அவள் கொஞ்ச நாளாவே அவர்கள் வீட்டுக்கு ஒரு கும்பல் வந்து போவதாகவும், அவர்கள் வேறு பாஷையில் பேசுவதால் ஒன்றும் தங்களுக்கு புரியவில்லை என்றும் சொல்லிக் கொண்டிருந்தாள், 'அப்படி அன்னிக்கு வந்து ஏதோ சத்தமாக பேசி அவங்க போனவுடன் அந்த அம்மா மாரை பிடிச்சுண்டு விழுந்துட்டாங்க, அதுக்கு முன்னாடியே இங்கே உள்ள எல்லோருக்கும் சொல்லிட்டாங்க என் பெண்ணுக் கிட்டே சொல்லிடாதீங்கன்னு அதனாலே நாங்க யாரும் சொல்லலே, என்ன விஷயம்னு தெரியலே, ரெண்டு நாள் முன்னாடி வந்து அவங்களை கூட்டிண்டு போயிட்டாங்க சாவியை என்கிட்டே கொடுத்து இனிமே அவங்க வரமாட்டாங்க, என்ன பொருள் யாருக்கு வேணுமோ எடுத்துக்கோங்க என்று சொல்லிட்டாங்க,' என்று முடித்தாள்

‘கொஞ்சம் சாவியைக் கொடுங்க ஏதாவது இருக்கா பார்க்கிறேன், சித்ரா போன் எடுக்க மாட்டேங்கிறா, அவ போனை விட்டு போயிட்டாளா பார்க்கிறேன்,' என்று சொன்னான்

இல்லை தம்பி, நான் ஜன்னலிலிருந்து பார்த்தேன் அவள் யாருக்கோ போன் பண்ண போனாள், போனை அந்த ஆள் வாங்கி, சிம்மை எடுத்து கசக்கி தூக்கிபோட்டான், அதையும் பார்த்தேன்,' என்று கூறினாள் அப்படியே சாவியை கொடுத்தாள் அவனிடம்

பூட்டை திறந்து அந்த வீட்டினுள் நுழைந்தான், எல்லாவற்றையும் திறந்து பார்த்தான், சுற்றிலும் பார்த்தான் ஒன்றும் முக்கியமாக இல்லை, ஒரே ஒரு போட்டோ மட்டும் சின்ன குழந்தையின் போட்டோ அநேகமாக சித்ராவுடையதாகத்தான் இருக்க வேண்டும், அதை எடுத்துக் கொண்டான் அவளுடைய ரெண்டு டிரஸ் இருந்தது அதையும் எடுத்துக் கொண்டான் அங்கிருந்த ஒரு பாகில் போட்டுக் கொண்டு பூட்டி சாவியை அந்த ஆண்டியிடம் கொடுத்துவிட்டு, 'தேங்க்ஸ் ஆண்டி நான் போயிட்டு வரேன்,' ஒரு நடை பிணம் போல் நடந்தான்,

அவன் வீடு வந்து சேர்ந்தான், அவன் அம்மா ‘வாப்பா சாப்பிடலாம்,’ என்று கூப்பிட்டாள்,

'இல்லைம்மா, நான் சாப்பிட்டு விட்டேன்,' என்று கூறி தன் ரூமுக்கு போனான், கதவை மூடிவிட்டு வாய்விட்டு அழுதான், அந்த டிரெஸ்ஸை தன் முகத்துக்கருகில் வைத்துக் கொண்டு அழுதான், என்ன செய்வது, எப்படி அவளை தேடுவது ஒன்றும் புரியவில்லை,

அழுது, அழுது அப்படியே தூங்கிவிட்டான், ரொம்ப நேரம் கழித்து, கதவு தட்டும் ஓசை கேட்டு, எழுந்து வந்து திறந்தான், அவள் அம்மாதான் 'என்னப்பா ஆச்சு நீ இப்படியெல்லாம் இருக்கமட்டியே, எழுந்து வா தாத்தா கூப்பிடுகிறார்,' என்றாள் i

'நான் கொஞ்சம் ப்ரெஷ் அப் பண்ணிட்டு வரேன்மா,' என்று கூறி கதவை மூடி பாத்ரூமில் குளிக்க போனான், டிரஸ் மாற்றிக் கொண்டு கீழே தாத்தாவைப் பார்க்க போனான்,

அவனை பார்த்ததும் ' ஏன் ருத்ரா இந்த சித்ராவை காணோமே, நீ போய் பார்த்தியா,' என்று கேட்டார்

'அவள் இனிமே வர மாட்டா, அவ ஊரை விட்டு போய்விட்டாள்,' என்று சொன்னான், தாத்தா அதிர்ச்சியாய் அவனைப் பார்த்தார் அவன் அழுதிருக்கிறான் என்று தெரிந்தது,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.