(Reading time: 13 - 25 minutes)

ருகாமையில் கணவனின் தங்கை குடும்பம் இருந்த காரணத்தால் மிகவும் மோசமான எந்த சம்பவமும் ஏற்படா விட்டாலும், எதிர் பாராத புதிய பிரச்சினையை அந்தக் குடும்பம் சந்தித்தது. அது ரூபனின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்ப்படுத்தியது. தாம் தம் மகனின் நன்மைக்காக செய்வதாக நினைத்துச் செய்த அந்தச் செயல், மகனின் மனதில் காயத்தையும்,வருத்தங்களையும் ஏற்படுத்தியதை அவர் உணரவில்லை. அது என்னவென்று சற்று இடைவெளிக்குப் பிறகு சொல்கிறேன். இப்போது ரூபன் அறையில் கொஞ்சம் எட்டிப் பார்ப்போமா? 

 ரூபன் சற்றே புரண்டுப் படுத்தான், தன்னைத் தூங்கச் சொல்லிவிட்டு உடனே கண்ணயர்ந்து விட்ட தன் தம்பியை பார்க்கையில் தன்னை வருத்திய துன்பம் மறந்து அவனுக்கு புன்முறுவல் தோன்றிற்று. 

 ஹாஸ்டலில் தனிமையான ஒன்பது வருடங்களைக் கழித்து, முகம் தெரியாத எதிரியை சம்பாதித்து, ஒவ்வொரு வருடம் சிறந்த மாணவன் பரிசைப் பெற்றவன் மிகக் கேவலமாக பட்டப் படிப்பின் ஒரு வருடம் மீதி இருக்கையில் வெளியேற்றப் பட்டு , நொந்து நூலாகி வந்தவனுக்கு ஆறுதலாக இருந்தது ஜீவனின் நட்பல்லவா? ஆம் நட்பேதான் சகோதரனை நண்பனாகப் பெற்றவர்கள் பாக்கியவான்கள் என்றால் ரூபன் அந்த வரிசையில் முதல் பத்திற்குள்ளாவது வருவான் என்பதில் சந்தேகமேயில்லை.

Related: You might also like... 

G Adarsha's "My really really really really really REALLY weird story" - Come let us sneak peek into the mind of a ten year old kid...

Don't miss it...

அப்போது ரூபன் ஹாஸ்டலிலிருந்து நிரந்தரமாக வீடுத் திரும்பி ஒரிரு வாரங்கள் ஆகியிருந்தன.ஸ்கூலிலிருந்து வந்த ஜீவன் கூண்டில் அடைக்கப் பட்டப் புலிப் போல நடமாடிக் கொண்டிருந்தான். இந்தச் சின்னப் பையனுக்கு என்ன கவலை இருக்க முடியும்? என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

"அண்ணே நீ மட்டும் அவ கூட பேசக் கூடாது சொல்லிட்டேன்" எவக் கூட எனப் புரியாமல் விழித்தான் ரூபன்.

"அவளுக்கு உடம்பெல்லாம் கொழுப்பு, இன்னைக்கு டீச்சர் காட்டின ரெண்டு பேப்பர்லயும் நல்ல மார்க் வாங்கிட்டான்னு அவ்வளவு பெருமை.. எங்க உன் பேப்பர் காட்டுன்னு வந்து நிக்கிறா... 

...............????

நாளைக்கு உனக்கு இருக்கு மவளே.

..................???

உனக்குத் தான் மேத்ஸ் வராதே . உன் மார்க் தெரிஞ்சி கிட்டு உன் அம்மாக்கிட்ட மட்டும் நான் வத்தி வைக்கல..

..................???

ம்ஹீம்... வத்தி வச்சிட்டாலும்........செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்காங்க......ஒரு வார்த்தை சொல்ல மாட்டாங்களே.....

நகத்தைக் கடித்து துப்பியவாறு சட்டென்று தன் அண்ணன் முன் திரும்பி...

இங்க பாருண்ணா அவ எப்பவேணா இங்க வரலாம்... நீ எப்பவும் என் கட்சிதான் புரியுதா.......

கேள்விக் கேட்டவனிடம் தலையைப் பிய்த்துக் கொண்டு " நீ சொன்னது ஒரு வார்த்தை தவறாம எல்லாம் புரிஞ்சிடுச்சிடா"வெனச் சொல்லத் தோன்றியது அவனுக்கு.

அவ ரொம்ப பொல்லாதவ ...அவ யாரு வீட்டுக்கு போனாலும் அந்த வீட்டுக் காரங்களே ஒருவேளை இது நம்ம வீடு இல்லையோ .... இது அவ வீடு தானோன்னு நினைக்க வச்சிடுவா.......ராட்சசி... முண்டக் கண்ணி... 

அவன் கை விரல்களில் நகம் தீர்ந்து விரல்களையும் கடித்து துப்பி விடுவானோ என்று பயமாக இருந்தது ரூபனுக்கு....

 அதே நேரம் "ஹாய் அத்தை" என்றபடி வாயிலில் ஸ்கூல் யூனிபார்மில், இரட்டைச் சடையோடு நின்று தன் அம்மாவின் கழுத்தில் கை கோர்த்துத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். தன் தம்பிக் கொடுத்த இன்ட்ரோவில் அது யார் என்றுப் பார்த்தே ஆக வேண்டும் என்று அவனுக்குத் தோன்றி விட்டிருந்தது.

 தனது அறையிலிருந்து வெளி வர அவன் எடுத்துக் கொண்ட ஓரிரு நிமிடங்களில் அவர்கள் இருவருக்கும் இடையே மூன்றாம் உலகப் போர் ஆரம்பித்து இருந்தது. அவளுடைய ஒரு சடை அவனின் கையில் இருக்க "விடுடா விடுடா" என அவள் அதைப் பிடுங்கிக் கொண்டிருந்தாள். 

 அம்மாவைத் திரும்பிப் பார்த்தால் சலனமே இல்லாமல் அவர் வேலையைச் செய்துக் கொண்டிருக்க, அவருக்கு இது ஒரு தினசரி நிகழ்வு எனப் புரிந்தது. கண்முன் நடக்கும்சண்டையை எப்படித் தீர்க்க எனப் புரியாமல் "ஜீவா என்னடாச் செய்யுற , சடையை விடுடா" என தன்மையாகப் பேசச் சென்றான்.

 அவர்கள் சண்டையில் இடையிட்ட அவன் குரலில் சட்டென்றுத் திரும்பியவள் கண்ணால் ஏதோச் சொல்ல முயன்றாள். அவனுக்கு அந்த சமிக்ஜைகள் ஏனோப் புரியவில்லை. முகபாவங்களால் அவள் சொல்ல முயன்றவைகளை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.எனவே, அவள் தன்னுடைய கடைசி முயற்சியாக தலையை வேண்டாம் என அசைத்தவளாக அவனைப் பார்த்துக் கண்ணடித்தாள்.

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:970}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.