(Reading time: 12 - 24 minutes)

நோக்கம் அவள் இன்னுமாய் விழுந்து அடிபட்டுக் கொள்ளக் கூடாது என்பதுதான்….. அதோடு இதுவரை எந்தப் பெண்ணையாவது கை நீட்டி அடித்திருப்பானா அவன்….? அனு எப்படி பட்டவளாய் இருக்கட்டுமே….ஒரு பொண்ண அடிச்சுட்டமே…..அதுவும் இப்டி துடிக்ற அளவுக்கு என  உள்ளுக்குள் அவனுக்கு தவிக்குதுதானே…..

ஆனாலும் அவன் இளக்கத்தை இவளிடம் காண்பிக்க முடியுமா? என்ன ஒரு கேடுகெட்ட நோக்கத்தோடு இங்க வந்திருக்கா இவ…. அந்த எரிச்சல் ஏமாற்றம் அதுவும் அவனுக்குள்ள இருக்குதானே…..அதில் வந்து விழுந்தன அடுத்த வார்த்தைகள்….

“இப்பதான நீயா வந்து என்னை பிடிச்ச? அதுக்குள்ள என்ன ரொம்ப உத்தமி மாதிரி……?”

அவ்வளவுதான் ஆக்ரோஷமாய் அவனிடமிருந்து விடுபட திமிறினாள் அவள் இப்போது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

அதே நேரம் இப்பொழுது கிணற்றடி லைட்டும் எரிய தொடங்க….. பவர் கட்ல ஆஃப் ஆகி இருக்கும் போல….இப்ப கரண்ட் சப்ளை வரவும் அது எரிய தொடங்க…

பிடித்திருந்த அவளை விட்டுவிட்டான்…இனிதான் எதுலயும் விழுந்து வைக்க மாட்டாளே…..

இப்பொழுது இவன் கண்ணெதிரே வயிறை அழுத்தி பிடித்தபடி குனிந்து நிலையில் துடித்துக் கொண்டிருந்தாள் அனு. அவள் வலக்காலில் பாதம் மறைத்து ரத்தம்…..அவளுக்கு அருகில் ஒரு பெட்டி…..கிட்டதட்ட சவப் பெட்டி போல….அது அங்கு இருப்பது தெரியாமல்தான் இவன் அந்த பக்கமாய் அவளை எறிய…அவள் அதில் இடித்து இப்படி துவைக்கிற கல்லில் வந்து விழுந்திருக்கிறாள்….

இதற்குள் நிற்க முடியாமல் அவள் ஒரு கையை தரையில் ஊன்றியபடி இவனை விட்டு  விலகிச் செல்ல தொடங்க…. அதற்கு மேல் அமைதியாய் பார்த்துக் கொண்டிருக்க இவனுக்கு முடியவில்லை….

அவள் மனசு எப்படி பட்டதோ…..ஆனா இவன் மனசு கல்லு கிடையாது….கண் முன்னால ஒரு மனுஷ உயிர் துடிக்றப்ப அவ நல்லவளா கெட்டவளான்னு ஆராய்ஞ்சுகிட்டு இருக்க இவனால முடியாது….

 “அனு…என்னாச்சு அனு…..வா ஹாஃஸ்பிட்டல் போலாம்” இவன் போய் அவளைப் பிடிக்க

“விடுங்க……விடுங்கன்னு சொல்றேன்….முதல்ல இங்க இருந்து போங்க….யாராவது நம்ம பார்த்தா எல்லாம் போச்சு….” அத்தனை வலியிலும் இவள் குரல் யாருக்கும் கேட்டுவிடக் கூடாது என சின்ன குரலில் சொல்லியவள்….. தட்டு தடுமாறி வயலை விட்டு வெளியேற துவங்கினாள்……

அதுவும் அதற்கு வழக்கமாக வரும் பாதையில் இல்லாமல் குளத்தின் புறம் நோக்கி நகர்ந்தாள்….. இந்த நேரம் அங்கு ஆள் நடமாட்டம் இருக்க வாய்ப்பே கிடையாது….அதோடு வீடு போய் சேர ஊரை அரை பங்கு அதிகமாக சுத்திக் கொண்டு செல்ல வேண்டும்….

‘இந்த வலியில அது வழியா போகப் போறாளாமா?’

“ப்ச்….சொன்னா கேளு அனு….கால்ல பாரு எவ்ளவு ரத்தம்….நிமிர கூட முடியல உனக்கு…. போற வழியில மயங்கி எதுவும் விழுந்துடப் போற…..என் கூட கிளம்பு …..ஹாஸ்பிட்டல் போகலாம்……அப்டிலாம் யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க…..” அவளோடு நடந்தான். “போலீஸ கூட கூட்டிட்டு வந்திருக்கேன்…. அவன் கூடவே போகலாம்….”

இப்பொழுது நின்று திரும்பி இவன் கண்களை நேருக்கு நேராக பார்த்த அவள் பார்வையில் அக்கினி…..

அதே நேரம் அங்கு வந்து சேர்ந்தான் சசிபால். போலீஃஸ் யூனிபார்மில் அவனை பார்த்ததும் தன் பக்கத்தை சொல்ல வேண்டும் என தோன்றிவிட்டது அனுவிற்கு.

“என் ஹஸ்பண்ட் மாத்யூ இந்த ஊர் பூங்காவனத்தாரோட பேரன்….அவர் மகன் நவமணியோட செகன்ட் சன்…… மாத்யூ இறந்து  கிட்டதட்ட 4 மாசம் ஆகப் போகுது…..தன்ன கொண்டல்புரத்துல  புதைக்கனும்ன்றது அவங்களோட லாஸ்ட் விஷ்….அதுக்காகத்தான் போன டைம் இங்க வந்தேன்….ஆனா அவங்க இடம் எதுவுமே இல்லன்னு வந்த பிறகு தான் தெரிஞ்சுது….அதானல இங்க பரி செய்ய முடியாதுன்னு திரும்பி போய்ட்டேன்……இப்ப அவங்களோட சில திங்க்ஸையாவது  அவங்க ஃபோர்ஃபாதர்ஸ் லேண்ட்ல புதைக்கன்னு எடுத்துட்டு வந்தேன்…. ” அவள் வலியில் முகம் சுண்டி சுண்டி சசிபாலிடம் பேச, கேட்டுக் கொண்டிருந்த அதி செத்துக் கொண்டிருந்தான்….. 

‘கடவுளே என்ன செய்துட்டேன் நான்….?’

இதற்குள் அங்கு வந்து சேர்ந்தான் இன்னொருவன்….அனுவைப் போல வெள்ளை தேகக்காரன்.

“இது என் கசின் ஜுவான்….”

“சசி……அவ பயங்கர பெய்ன்ல இருக்கா போல…எதுனாலும் நாளைக்கு சொல்ல சொல்லு…..” சொன்ன அதியின் மொத்த உலகமும் வேதனையால் நிறைந்திருந்தது.

அடுத்து “ஆன்டி தனியா வீட்ல இருக்காங்க….நான் நாளைக்கு ஹாஸ்பிட்டல் போய்ப்பேன்…..” என பிடிவாதம் பிடித்த அனுவை சசியும் அவளது கசின் ஜுவானும் ஹாஸ்பிட்டல் கூட்டிப் போக…..

அனு இல்லாத அவள் வீட்டுக்கு போனது அதி…..தூங்குற ஆன்டி விழிச்சா இவன் விஷயம் சொல்லனும்….. யாரை இந்நேரம் எழுப்பி அங்க போய் தங்கு என சொல்லவும் இவனுக்கு மனம் இல்லை…. காம்பவ்ண்ட் கேட்டை மூடி வைத்துவிட்டு உள் பக்கமாக வீட்டு வாசலில் உட்கார்ந்துவிட்டான் இவன்.

மனம் எங்கும் ரணம்.

அனு விஷயத்தை கொஞ்சம் வெளிப்படையாக சொல்லி இருந்தால் கூட அனைத்தையும் இவனே முன்னின்று செய்து கொடுத்திருப்பான்…..ஆனால் எது எப்படியோ இன்று ஒரு மகனை இழந்த தாயின் முன்னே இவன் என்னதாய் நிற்க வேண்டியதாகிவிட்டது?

அவங்களோட உரிமையுள்ள இடம்….. அதை அவங்களோட அடிப்படை தேவைக்கு கூட தரமாட்டேன்னு மறுத்த மாதிரி ஆகிட்டே…..

நினைத்து நினைத்து வெந்து கொண்டிருந்தான் இவன்…..

Friends இந்த எபிசோடிலேயே சந்தோஷ பக்கங்களையும் கொண்டு வர நினைத்தேன் முடியவில்லை….அடுத்த எபிசோடிலிருந்து கதை சந்தோஷமாகவே தொடரும்…..அதோடு இனி வரும் எபிசோடுகள் பெரிய பெரிய எபிசோடுகளாயும் இருக்கும்….கதைக்கு நீங்கள் தரும் அனைத்து ஊக்கத்திற்கும் நன்றி

தொடரும்!

Episode # 18

Episode # 20

{kunena_discuss:929}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.