(Reading time: 23 - 45 minutes)

"கே யுக்தா நாம இன்னொரு டைம் மீட் பண்ண சான்ஸ் கிடைச்சா அப்போ பார்க்கலாம்.... ஆனா அதுக்குள்ள நான் யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சிடும்..." என்று பிரணதியை பார்த்துக் கொண்டே கூறினான்...

பிறகு பார்ட்டிக்கு வர வேண்டிய முக்கியமானவர்கள் வந்ததும் அங்கே யுக்தாவை பிருத்வி அந்த பிளான் வரைந்து கொடுத்தது இவள் தான் என்று அறிமுகப்படுத்தினான் (வீட்டில் தான் உங்கள் மருமகள் என்று சொல்ல முடியும்... இங்கே முடியுமா..?? இங்கு உள்ளோருக்கு தன் மனைவி என்று அறிமுகப்படுத்தினான்...) பின் பார்ட்டி முடிந்ததும் அந்த ப்ராஜக்ட் சம்பந்தமா பேச வேண்டியிருக்கு என்று தன் குடும்பத்தாரை வீட்டுக்கு அனுப்பி வைத்தான்...

வீட்டிற்கு வந்ததிலிருந்து வரூனைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள் யுக்தா... இந்த வரூன் யாரு..?? பிருத்விக்கு மட்டுமில்லாம மத்தவங்களுக்கும் தெரியும் போல... ஆனா அந்த வரூன் கூட பேசினால் பிருத்விக்கு ஏன் கோபம் வரனும்...?? என்ற கேள்விகளோடு இருந்த இவள் யோசனையை கலைக்க பிரணதி அங்கு வந்தாள்...

"என்ன அண்ணி ஏதோ யோசிச்சிட்டு இருக்கீங்க போல... ஆமாம் அண்ணி அந்த வரூன் உங்கக்கிட்ட என்ன பேசிக்கிட்டு இருந்தாங்க..."

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ரேணுகா தேவியின் "அனல் மேலே பனித்துளி..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

என்ன இவ பார்ட்டில இருந்து கிளம்புனதிலிருந்து அந்த வரூனைப் பத்தியே கேட்டுக்கிட்டு இருக்கா... இதுல ஏதோ இருக்கு... அதுக்கு முன்னாடி வரூன் பத்தி தெரிஞ்சிக்கனும்... என்று மனதில் நினைத்துக் கொண்டு பிரணதியிடம்....

"பிரணதி... அந்த வரூன் என்கிட்ட எதுவும் பேசல... உங்களை ஏற்கனவே தெரியும்... உங்க ஹஸ்பண்ட்க்கு தெரிஞ்சவன்.... உங்களை மாதிரி தான் நானும்னு ஏதோ சொல்ல வந்தாரு... அதுக்குள்ள நீ வந்து என்னை கூப்பிட்ட... ஆமாம் அந்த வரூன் யாரு..?? உங்க எல்லோருக்கும் அந்த வரூன் பத்தி தெரியும் போலயே...."

"ஆமாம் அண்ணி அந்த வரூனை எங்க எல்லாருக்கும் தெரியும்... என்ன சொல்றது அண்ணனும் அந்த வரூனும் 3 வருஷத்துக்கு முன்னாடி வரை பெஸ்ட் ஃப்ரண்டா இருந்தவங்க.... இப்போ அவங்க ரெண்டுப்பேரும் பிரிஞ்சிட்டாங்க... அதுவும் அந்த சப்னாவால..."

"என்ன சொல்ற பிரணதி... ரெண்டுபேரும் ஃப்ரண்ட்ஸா..?? அவங்க பிரிஞ்சதுக்கு காரணம் சப்னாவா..??"

"ஆமாம் அண்ணி... அண்ணா படிச்சிட்டு இருந்த ஸ்கூல்ல +1 வந்து ஜாயின் பண்ணாங்க வரூன்... அப்ப இருந்து ரெண்டுப்பேரும் ஃப்ரண்ட்ஸ்... அண்ணாக்கு ரொம்ப குளோஸ் ப்ரண்ட்ஸ்னு யாரும் அவ்வளவா இருந்ததில்லை... ஆனா வரூன் அண்ணாக்கு பெஸ்ட் ப்ரண்ட் ஆனாங்க...

வரூன் குடும்பம் கொஞ்சம் வசதியானவங்க.... அவங்களுக்கு ரெண்டு மூனு பிஸ்னஸ் இருக்கு... இதுல வரூன் பிறந்ததுக்கு அப்புறம் தான் வரூன் பேரை வச்சு VK கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனிய வரூன் அப்பா ஆரம்பிச்சிருக்காரு... அவருக்கு இருக்க காண்டாக்ட்ஸ் மூலமா அவங்களுக்கு நிறைய ப்ராஜக்ட்ஸ் கிடைச்சுது...

அப்பாக்கு அப்போ அவர் கம்பெனி கொஞ்சம் டல் அடிச்சாலும் அந்த கம்பெனிய பார்த்து போட்டியோ பொறாமையோ பட்டதில்ல... ஆனா வரூனும் அண்ணாவும் ப்ரண்ட் ஆனதுக்கு அப்புறம் சில ப்ராஜக்ட்ஸ வரூனோட அப்பா... நம்ம கம்பெனிக்கு ரெகமண்ட் பண்ணாங்க... இவங்க ரெண்டுபேரும் ப்ரண்ட்ஸா இருந்தது போல இந்த கம்பெனியும் கூட போட்டியில்லாம போய்கிட்டு இருந்தது...

ஸ்கூல் முடிச்சதும் ரெண்டுபேரும் ஒன்னா தான் இஞ்சினியரிங் ஜாயின் பண்ணாங்க... வரூன் நம்ம வீட்டுக்கு வருவாங்க... அண்ணா அவங்க வீடுக்கு போவாங்க... இப்படி போய்கிட்டு இருந்த லைஃப்ல அவங்க ஃபைனல் இயர் படிக்கும் போது அந்த காலேஜ்ல வந்து ஜாயின் பண்ண சப்னா... அவங்க பிரிய காரணமாயிட்டா..."

"என்ன சொல்ற பிரணதி... சப்னா என்ன பண்ணா..."

"சப்னா இவங்க டிபார்ட்மெண்ட் கிடையாது... இருந்தாலும் அடிக்கடி வரூனை பார்த்து பேச வந்திருக்கா... ஆனா வரூன் அந்த சப்னாவை அவாய்ட் பண்ணியிருக்காங்க... இதை கவனிச்ச அண்ணா... வரூன் ஒரு முறை வீட்டுக்கு வந்தப்ப அதுக்கான ரீஸன் கேட்டுச்சு... அப்போ நானும் அங்க தான் இருந்தேன்... அப்ப வரூன் சொன்னதை நானும் கேட்டேன்...

வரூனும் சப்னாவும் ஃபேமிலி ப்ரண்ட்ஸ்... வரூனோட வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளி தான் சப்னாவோட தாத்தா வீடு இருக்கு... சப்னாவோட தாத்தா சிமெண்ட் பேக்டரி வச்சிருக்காரு... வரூன் அப்பா கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி வச்சிருக்காரு... அதுமூலமா ரெண்டுபேரும் தெரிஞ்சவங்க... பக்கத்து வீடு வேற... அதனால ரெண்டு ஃபேமிலியும் ப்ரண்ட்ஸா இருந்திருக்காங்க...

சப்னாவோட அப்பா ஒரு நார்த் இந்தியனை மேரேஜ் பண்ணிக்கிட்டு மும்பைல செட்டில் ஆகி சப்னாவோட அம்மா ஃபேமிலி பிஸ்னஸ பார்த்துக்கிட்டு இருந்திருக்காரு... அவங்க பெரிய ஃபேமிலி போல.... அங்க தன்னோட பொண்ணு இருந்தா அவளுக்கு தமிழ் பேசறது கஷ்டம்னு இங்க தன்னோட அப்பா வீட்டில் சப்னாவை விட்டு வச்சிருந்தாரு.... இங்க தான் சப்னா ஸ்கூல் படிச்சிட்டு இருந்திருக்கா...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.