(Reading time: 23 - 45 minutes)

ம்மாவும் அப்பாவும் இதை நம்பல வரூன்... நீங்க வீட்டுக்கு வாங்க ரெண்டுப்பேரும் ஒன்னும்  சொல்லமாட்டாங்கன்னு நான் சொன்னேன்... எனக்கு தெரியும் அங்கிளும் ஆன்டியும் எல்லாம் தீர விசாரிச்சு தான் செய்வாங்க... ஆனா நான் இப்போ அவங்கள பார்க்க வரல... வந்தா அவன் டென்ஷன் ஆவான்... என்னால இப்போக் கூட நான் அதை செய்யலன்னு நிரூபிக்க முடியும்... அந்த ரவி தான் சப்னாக்கூட சேர்ந்து இப்படியெல்லாம் பண்ணியிருக்கான்...

ஆனா திரும்பவும் சப்னா பிருத்விக்கிட்ட ஏதாவது ட்ராமா பண்ணுவா... சப்னா கூட பழகினா பிருத்விக்கே அவ எப்படிப்பட்டவன்னு தெரிஞ்சிடும்னு சொன்னாங்க... ஏதோ மேலப் படிக்க ஜெர்மனி போறதா சொன்னாங்க... அதுக்கப்புறம் நான் அவங்களை பார்க்கல...

அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு அண்ணா அப்பாக்கிட்ட வந்து... சப்னாவை லவ் பண்றதாகவும் கல்யாணம் செஞ்சுக்கப் போறதாகவும்... ஆனா இப்போ இல்லை நம்ம கம்பெனிய நல்ல லெவல்க்கு கொண்டு வந்ததுக்கு அப்புறம் தான்னு சொல்லுச்சு... அப்பாவோ நீ கோபத்துல  எந்த முடிவும் எடுக்காத.. நல்லா யோசின்னு சொன்னாரு... நான் நல்லா யோசிச்சிட்டேன்.... நீங்களும் அம்மாவும் ஒத்துக்கனும்னு சொல்லுச்சு... நாங்க காதலுக்கு எதிரிங்க கிடையாது... நீ அந்த பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு உறுதியா இருந்தா நாங்களும் ஒத்துக்கறோம்னு சம்மதிச்சாட்டாங்க... ஆனா நான் வரூன் சொன்னதை நம்பினேன்... எனக்கு இந்த சப்னாவை பிடிக்கல... இருந்தாலும் நான் அப்போ அண்ணாக்கிட்ட என்ன சொல்லி இந்த சப்னாவை வேண்டாம்னு சொல்றதுன்னு எனக்கு தெரியல... வரூன் சொன்ன மாதிரி அண்ணாவே சப்னா பத்தி தெரிஞ்சிப்பாங்கன்னு அமைதியா இருந்துட்டேன்..." என்று எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள் பிரணதி...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்...

 

அதையெல்லாம் கேட்ட யுக்தாவிற்கு இந்த சப்னா இதையெல்லாம் செய்தாளா என்று அதிர்ச்சியாக இருந்தது... அதற்கும் மேல் அவளுக்கு இருந்த சந்தேகம் வலுப்பெற்றது... அந்த சந்தேகத்தை பிரணதியிடமே கேட்டாள்..

"பிரணதி... நீ சொல்றதை பார்க்கும் போது சப்னா தப்பு செஞ்சாளா..?? இல்லை வரூன் தப்பு செய்தாங்களான்னு எனக்குத் தெரியல... வரூனைப் பார்த்தா தப்பானவரா தெரியல... ஆனா இதையெல்லாம் வரூன் பிருத்வி கிட்ட சொல்லலை பரவாயில்லை... அத்தை மாமா கிட்ட சொல்லியிருக்கலாம்... ஆனா சொல்லலை... ஆனா ஏன் உன்கிட்ட இதையெல்லாம் வரூன் சொல்லனும்... இதை சாதாரணமா என்னால எடுத்துக்க முடியல...

ஜெர்மனில இருந்த வரூன்க்கு என்னை தெரிஞ்சிருக்கு... வரூன் யாருன்னு எனக்கு தெரியவரும்னு உன்னைப் பார்த்துக்கிட்டே சொன்னாங்க... இதெல்லாம் பார்க்கும்போது உங்களுக்குள்ள..." மேலே சொல்ல முடியாமல் யுக்தா தயங்கியபடியே பிரணதியை பார்த்தாள்... அதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் பிரணதி திரு திருவென்று முழித்தாள்.

ப்ராஜக்ட் சம்பந்தமா பேச வேண்டியவங்களோட பேசிட்டு பிருத்வி கிளம்பும் போது கிட்டத்தட்ட முக்காவாசி பேர் பார்ட்டியிலிருந்து கிளம்பிவிட்டிருந்தனர்... இவன் பார்ட்டி விட்டு வெளியே வந்தால் அங்கே சப்னா நின்றிருந்தாள்...

"என்ன இவ இன்னும் கிளம்பலையா மணி பத்தாக போகுதே.." என்று மனதில் நினைத்துக் கொண்டே அவள் அருகில் வந்தான்...

"ஹாய் பிருத்வி.." என்று சொல்லிக் கொண்டே இவன் அருகில் வந்தாள் அவள்..

"என்ன சப்னா நீ இன்னும் கிளம்பலையா..??"

"இல்லை பிருத்வி... நீங்க உங்க பேமிலி கூட போகலைன்னு தெரிஞ்சுது... நாம மீட் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு... உங்கக் கூட பேசலாம்னு வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன் பிருத்வி.."

"சப்னா என்ன பைத்தியக்காரத்தனம் இது... எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு... "

"இல்லை பிருத்வி.. ஜஸ்ட் நாம ஃப்ரண்ட்ஸ் தான்... உங்க கூட போகலாம்னு தான். வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.."

"சப்னா என்னோட ஃபேமிலி கார்ல போய்ட்டாங்க... நானே ஆட்டோ இல்லை பஸ்ல தான் போகனும்.."

"நோ ப்ராப்ளம் பிருத்வி... தாத்தாவை டாக்ஸில அனுப்பிட்டு நான் காரோட தான் வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்... உங்களை வீட்ல நானே ட்ராப் பண்ணிட்டு போறேன்..."

"சரி குடு நானே ட்ரைவ் பண்றேன் ... என்று அவளிடம் சாவியை வாங்கினான்...

அவன் காரை ட்ரைவ் செய்ய அவள் ஏதேதோ அவனிடம் பேசிக்கொண்டு வந்தாள்... "சேச்சே... இவ ஃபோனை நாம ஏன் அட்டண்ட் பண்ணோம்... நாம இங்க வரப் போறோம்னு அவளுக்கு தெரியாம இருந்திருந்தா... இந்த பார்ட்டிக்கு வராம இருந்திருப்பாளோன்னு அவன் மனதிற்குள் நொந்துக் கொண்டான்...

எதையெதையோ பேசிக் கொண்டு வந்த அவள் திடிரென்று வரூன் பற்றி ஏதோ பேசிக் கொண்டு வந்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.