(Reading time: 15 - 30 minutes)

'வீட்டை விட்டு போயிட்டாளா??? எங்கே போயிருப்பான்னு எனக்கும் தெரியலையே... இவர் பேரை சொல்லி அவளை ஒருத்தன் ஏமாத்திட்டு இருக்கான்னு மட்டும் எனக்கு புரிஞ்சது. நான் உடனே இவரோட போட்டோ, டீடைல்ஸ் எல்லாம் அவளுக்கு அனுப்பிட்டேன். இன்னும் அவ எதையுமே பார்க்கலையா??? தெரியலையே. போன் கூட சுவிட்ச் ஆஃப் ஆகி இருக்கு...' என்று  சொல்லிக்கொண்டே மறுபடியும் வேதாவின் எண்ணை முயன்றாள் கவிதா. அணைக்க பட்டே இருந்தது அது.

'சரி அவனை பத்தி உங்களுக்கு ஏதானும் தெரியுமா?? அடையாளம் ஏதானும் சொல்ல முடியுமா???

'பார்த்தா என்னாலே அடையாளம் காட்ட முடியும். மத்தபடி போட்டோ எதுவும் இல்லையே. ஆனா ஒரு விஷயம் எங்க ஆபீஸ்லே விக்கின்னு ஒருத்தன் வொர்க் பண்றான் அவன் தான் அவனை கோகுல்ன்னு அறிமுக படுத்தி வெச்சான். அந்த விக்கியும் ரெண்டு நாளா ஆபீஸ் வரலை...'

'விக்கி...' யோசனையுடன் உச்சரித்தான் கோகுல். ' அவன் மொபைல் நம்பர் இருக்கா???'

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

'இருக்கே...' என்றபடி அதை அவர்களிடம் தந்தாள் கவிதா. உடனே தனது கைப்பேசியின் மூலம் முரளி அந்த எண்ணை முயல அதுவும் அணைக்கப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் அங்கே குளித்து உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள் வேதா. உள்ளுக்குள் ஏதோ ஒரு படபடப்பு இருந்துக்கொண்டே இருந்தது அவளுக்கு. முகத்தை துடைத்தபடியே தனது பையை தேடியவளுக்கு ஏனோ சுருக்கென்றது.

அவளது பையை இரவு உறங்கும் போது அங்கே இருந்த அந்த அலமாறியினுள் வைத்ததாகத்தான் ஞாபகம். இப்போது அது எப்படி மேஜையின் மீது வந்தது??? யார் எடுத்தார்கள் என் பையை.???

குழப்பும் சந்தேகமுமாக பையை எடுத்து உள்ளிருந்த பொருட்களை எல்லாம் சரி பார்க்க மற்றவை எல்லாம் வைத்த இடத்திலேயே இருக்க, பை முழுதும் துழாவிய பிறகும் அவளது கைப்பேசி மட்டும் கிடைக்கவில்லை....

'என்ன நடக்கிறது என்னை சுற்றி??? கோகுல் எங்கே ???  அவர் உயிர் வரை பரவியது அதிர்ச்சியும் பயமும்

'யார் உள்ளே வந்தார்கள்???' என்ற யோசனையுடனே அறைகதவை பார்க்க அது தாழிடபடவில்லை. ஒரு முறை குலுங்கியது அவள் உடல். விக்கியை இங்கே பார்த்த அதிர்ச்சியில் கதவின் தாழ்ப்பாளை போடாமலே குளிக்க சென்று விட்டேனா என்ன??? மறுபடி மறுபடி தவறு செய்கிறேனோ???.

இதில் கோகுலும் உடந்தையா??? நேற்றே வீட்டை விட்டு கிளம்பும் போதே  கைப்பேசியை அணைத்துவிட சொன்னானே??? நேற்று கோதையுடன் பேசுவதற்காக அழைத்த போது கூட கைப்பேசியிலிருந்து அழைக்க விட வில்லையே அவன்???

யோசிக்க யோசிக்க உடல் நடுங்குவது போல் ஒரு உணர்வு. மனதின் ஓரத்தில் சின்னதாக ஒரு சந்தேக கொடு. உடனேயே ஏதோ ஒரு நம்பிக்கை சட்டென இடை புகுந்தது.

'இல்லை. என் கோகுலிடம் பொய்யில்லை. தனது வீடு வரைக்கும் என்னை தைரியமாக கூட்டி சென்றானே. அவன் எதற்கு என்னை ஏமாற்ற வேண்டும்??? இருக்காது அப்படி எல்லாம் இருக்காது.

அதே நேரத்தில்... இங்கே அவர்களது வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றிக்கொண்டிருந்தாள் கோதை.

'கண்ணா... வேதா எங்கே இருந்தாலும் அவளுக்கு துணையாக இரு..... அவளுக்கு சரியான வழிக்காட்டு..'

சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்து இருந்த வேதா சுதாரித்து நிமிர்ந்தாள். 'மாட்டேன். நான் அப்படி எல்லாம் யாரிடமும் ஏமாந்து விட மாட்டேன்...' திடீரென எங்கிருந்தோ வந்து சேர்ந்தது ஒரு மன உறுதி. உடையை திருத்திக்கொண்டு தயாராகி வெளியே வந்தாள் வேதா.

'என்ன செய்வது இப்பொது. உண்மைகளை எப்படி தெரிந்துக்கொள்வது??? சட்டென பிடிபடவில்லை தான்....' அப்போது மறுபடியும் கேட்டது அந்த கோவிலின் மணி ஓசை. அந்த கோவிலுக்கு போக வேண்டும் என்று ஏதோ ஒரு உந்துதல் மனதிற்குள்....

அந்த கெஸ்ட் ஹௌசை விட்டு வெளியே வந்தாள் வேதா. தெருவில் இறங்கி அங்கிருத்து சிறிது தூரத்தில் இருந்த அந்த கோவிலை நோக்கி நடந்தாள் அவள். அக்கம் பக்கம் வீடுகள் எதுவும் தென்படவில்லை. மரங்கள் நிறைந்திருந்த அந்த பகுதியில் இருந்தது அந்த கோவில். விக்கி அவள் கண்ணில் தென் படவில்லை. செருப்பை வெளியே விட்டு கோவிலுக்குள் நுழைந்தாள் அவள்.

அத்தனை அழகும் அமைதியும் நிறைந்திருந்து அந்த கோவிலில். கூட்டம் அதிகம் இல்லை. சன்னதியின் உள்ளே மலர் மாலைகளுடன் சிரித்துக்கொண்டிருந்தான் கண்ணன். கூப்பிய கரங்களுடன் வேதா அப்படியே நின்றுக்க திடீரென பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.

'வாம்மா... வேதா... ' திடுக்கிட்டு திரும்பினாள் அவள். புன்னைகயுடன் நின்றிருந்தார் அவர். அந்த கோவில் அர்ச்சகர்.

'என்னடிமா... திருதிருன்னு முழிக்கறே. என்னை தெரியலையா நோக்கு??? நான் உங்காத்துக்கு எத்தனை வாட்டி வந்திருக்கேன். ராஜகோபாலன் ...'

'ஓ... சாரி மாமா.... நேக்கு ஞாபகம் இல்லை...' என்றாள் மெதுவாக.

'அப்பா சௌக்கியமா??? ரெண்டு நாள் முன்னாடிதான் அவரெண்ட பேசினேன். கும்பகோணம் போக போறதா சொன்னார்...'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.