(Reading time: 15 - 30 minutes)

'வாசுதேவன் - தேவகி இவர்களது முகமும் அவள் நினைவுக்கு வந்தது. அன்று அந்த வீட்டில் பார்த்தேனே இவர்கள் இருவரும் இருந்த புகைப்படத்தை??? அப்படி என்றால் என்னிடம் பொய் சொல்லி இருக்கிறானா என்னுடன் பழகிய அந்த கிராதகன்???..

'ஏன் மாமா அவாளுக்கு ஒரே பையன் தானா மாமா ???' சில நொடிகள் கழித்து வெளியே வந்த அவள் குரல் வற்றிப்போய் கிடந்தது. உண்மை கொஞ்சம் கொஞ்சமாக தலைக்குள் இறங்கி இருந்தது..

'ஆமாம்மா ஒரே பையன் தான்....' அவர் சொல்லிக்கொண்டிருக்க சரியாக அந்த நொடியில் கோவிலுக்குள் நுழைந்தான் விக்கி. அவன் அவள் அருகில் வர சட்டென சுதாரித்துக்கொண்டாள் வேதா.

'என்னை  சுற்றி வலை பின்னப்பட்டு இருப்பது உண்மை தான். ஆனால் அது எனக்கு தெரியும் என நான் வெளிக்காட்டிகொள்வது புத்திசாலித்தனம் இல்லை...'

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

'ஹேய்.... இங்கே என்ன பண்றே நீ...' அதட்டலாக வெளிவந்தது விக்கியின் குரல். கொஞ்சமாக மாறியது ராஜகோபாலனின் முகம்.

'இல்லை சும்மா கோவிலுக்கு வந்தேன்...' என்று சொன்னவள் வேறே எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல்

'நான் கிளம்பறேன் மாமா...' என்று அந்த புகைப்படத்தை அவரிடம் கொடுத்து விட்டிருந்தாள்.

'யாரும்மா இது??? விக்கியை அளந்த படியே கேட்டார் ராஜகோபாலன்.

'இது... இது ஃப்ரெண்ட் மாமா... நான் வரேன்..' என்றவள் சன்னிதியில் இருந்த கண்ணனை ஒரு முறை திரும்பி பார்த்து கைகூப்பி விட்டு விக்கியுடன் நடந்தாள் தைரியமாக.

சில மணி நேரங்கள் கடக்க.... நேரம் மதியம் ஒன்றை தாண்டிக்கொண்டிருந்தது. அந்த நொடியில் இருந்து சரியாக இருபத்து நான்கு மணி நேரம் கடந்துவிட்டிருந்த நிலையில்......

கோகுலின் வீட்டில்....

முகத்தில் எந்த வித சலனமும் இல்லாமல் கையில் இருக்கும் டம்பளரில் இருந்த காபியை ருசித்து பருகிக்கொண்டிருந்தான் முரளி...

'பாரு பாரு நான் இவ்வளவு கத்தறேனே கொஞ்சமானும் ஏதானும்  பேசறானான்னு  பாரு உன் பிள்ளை... ரசிச்சு ருசிச்சு காபி குடிச்சிண்டு இருக்கான்... நமக்கு எதிரா எவ்வளவு அழகா பிளான் பண்ணி இருக்கான் இவன்.... சாயங்காலம் நிச்சயதார்த்தம்ன்னு சொல்லி எத்தனை பேர் வரப்போறா தெரியுமா??? போயிடுத்து ஊரிலே நேக்கு இருந்த மானம் மரியாதையை எல்லாம் போயிடுத்து.. இதை கூட என்னாலே பொறுத்துக்க முடியறது.... அந்த ஸ்ரீதரன்... என்ன தைரியம் இருக்கணும்  அந்த மனுஷனுக்கு ....' கோபத்தின் உச்சியில் கொதித்துக்கொண்டிருந்தார் நந்தகோபால். முரளியின் தந்தை.

'அதான் நான் நெனெச்ச மாதிரி தான் எதுவுமே நடக்கலையே. கோதை தான் எல்லாத்தையும் மாத்தி பண்ணிட்டாளே??? எல்லாரும் அங்கே பேசாம தானே இருந்தேள்??? இங்கே வந்து என்னத்துக்கு குதிச்சிண்டிருக்கேள்..' உதடுகள் வரை வந்த வார்த்தைகளை அப்படியே விழுங்கிக்கொண்டு  மெல்ல விழி நிமிர்த்தி எல்லாரையும் பார்த்தான் முரளி.

சோபாவின் பின்னால் சாய்ந்து கண்களை மூடி இருந்தான் கோகுல். புது வேஷ்டியும், ஷர்ட்டும் முகத்தில் தாண்டவமாடும் கல்யாண களையுமாக அமர்ந்திருந்தான் அவன். நடந்த எல்லாவற்றையும் தாண்டி கோதையே அவன் மனதில் நிறைந்திருந்தாள். அவள் மீதான காதல் பல மடங்கு கூடி விட்டதை போன்றே தோன்றியது

'பொய், பேராசை, துரோகம்... இது போன்ற குணங்களின் சாயல்கள் கூட இல்லாத வெள்ளை மனம் அவளது. இப்படி பட்ட பெண்ணுடன் வாழ்வதற்காக எப்படி பட்ட அவமானத்தையும் சந்திக்கலாம் என்றே தோன்றியது அவனுக்கு.  

அவர் மனதில் என்ன இருக்கிறது என்று கண்டு பிடிக்கவே முடியாத ஒரு பாவத்துடன் அமர்ந்திருந்தார் வாசுதேவன். நியாயமாக இப்படி ஒரு சூழ்நிலையில் இரண்டு அன்னையரின் கண்களிலும் கண்ணீரே நிறைந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே கண்ணீர் இல்லை. மாறாக இருவர் மனமும் ஏனோ சலனமற்றே இருந்தன. அவர்கள் முகத்தில் நிறையவே தெளிவு. கோகுலின் அன்னையின் மனதின் ஓரத்தில் கொஞ்சம் சந்தோஷ ரேகைகள் கூட இருந்தன என்றே சொல்ல வேண்டும்.

அங்கே கோதையின் வீட்டில்....

அப்பாவின் கையில் அந்த கடிதம். வீட்டை விட்டு கிளம்பும் முன்னால் வேதா எழுதி அவர் சட்டை பையில் வைத்து விட்டு சென்ற அந்த கடிதம். அதையே மறுபடி மறுபடி படித்துக்கொண்டிருந்தார் அவர். அவர் முகத்தில் கோப தாண்டவம். அவள் பக்கம் கூட திரும்பவில்லை அவர்.. பெண்ணை பெற்ற தந்தைக்கு எழும் நியாயமான தவிப்பும், கோபமும் அவரிடத்தில்.

அப்பா ஆசை ஆசையாக வாங்கிக்கொடுத்த அந்த புது பட்டுப்புடவையும், காதில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த ஜிமிக்கிகளும், கூந்தலில் மணம் வீசிக்கொண்டிருந்த மல்லிகை சரமுமாக அப்பா அமர்ந்திருந்த நாற்காலியின் கீழே... அவர் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் கோதை........

'அப்பா...' அவள் அழைக்க திரும்பவே இல்லை அவர்.

'நான் தப்பு செய்து விட்டேனா??? என் அப்பாவை ஏமாற்றி விட்டேனா??? தவிப்புடன் அவரையே பார்த்திருந்தாள் கோதை.

மை டியர் ஃப்ரெண்ட்ஸ்.

24 மணி நேரம் கழித்து எல்லாருடைய மன நிலையும் எப்படி இருந்ததுன்னு ‌நான் சொல்லிட்டேன். இதை வெச்சு கோகுல் - கோதை ரிஜிஸ்டர் மேரேஜ் நடந்ததா இல்லையான்னு நீங்க சொல்லுங்க பார்ப்போம். கரெக்ட் ஆன்சர் அடுத்த வாரம் நான் சொல்றேன். ;-) ;-) Thanks a lot .

கீதம் தொடரும்.....

Episode # 10

Episode # 12

{kunena_discuss:890}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.