(Reading time: 23 - 46 minutes)

று நாள் காலை:

 மனவருத்தங்கள், கனவு, பல்வேறு சிந்தனைகளினால் இரவு தூக்கம் தடைப் பட்டிருந்ததால் ரூபனுக்கு மறு நாள் எழும்ப சற்று தாமதமாகியது. கடந்த ஒரு மாத காலமாகவே நடந்து வந்த பிரச்சினைகளால் அவன் தன் வேலைகளில் கவனம் செலுத்த இயலாமல் திணறிக் கொண்டிருந்தான். வெகுவாக பாடுபட்டு தனக்கென நிறுவியிருந்த அவனுடைய தொழிலை கோட்டை விட்டு விடுமோவெனும் நிலைக்கு வந்திருந்தது. புது ஆர்டர்கள் குறித்த வேலைகள் ஏராளமாக குவிந்திருந்தன. இரவுப் பகலாக வேலைச் செய்தாலும் தற்போது ஒரு நிலைக்கு தொழிலைக் கொண்டு வர வேண்டுமென்றால் அவனுக்கு இரண்டு மாதங்களாவது தேவை.

 அதனால் தான் நிச்சயத்திற்கு பிறகு திருமணத்திற்கு 3 மாதங்கள் இருக்கும் படி அமைத்துக் கொண்டான். வெளி நாட்டிலிருக்கும் தந்தை வேலையிலிருந்து ஓய்வெடுத்து வர இன்னும் இரண்டு மாதம் இருக்கிறது , அது மட்டுமா அவள் திருமணம் அவளுக்கு பிடித்தமானது மாதிரி நடக்க வேண்டாமா ..... சுற்றிச் சுற்றி தன்னவளையே எண்ணும் தன் மனதைக் கட்டுப் படுத்தியவனாக தான் செய்ய வேண்டியிருக்கும் பல்வேறு வேலைகளை மனதிற்குள் வரிசைப் படுத்தியவாறு அவசர அவசரமாக எழுந்து , குளித்துப் புறப்பட்டான்.

இந்திரா மகனுக்கு உணவை எடுத்து வைத்தவாறே, 

"வா ரூபன் சாப்பிட உட்கார்" என்று அவனை அமரச் சொல்லி பரிமாறினார். 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஆதித்யா சரணின் "சிவன்யா" - புத்தம் புது தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

சாப்பிட்டுக் கொண்டு இருந்தவனை..

"குட்மோர்னிங்க் அத்தான்" என்னும் குரல் கலைத்தது....

 வாட்ட சாட்டமாய், நெற்றியில் புரளும் கேசமும்,கூர்மையான விழிகளும் கொண்டவனாய் எதிரில் அமர்ந்திருப்பவன், கூப்பிட்டக் குரலுக்கு முகத்தைச் சற்று நிமிர்த்தி முணு முணுப்பாக "குட் மார்னிங்க்" சொல்லி அவளைப் பார்க்காமலிருக்க உடனே தலையைக் குனிந்து அவசர அவசரமாக சாப்பிட்டுக் கிளம்பினான்.

 அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் தன்னிடம் சகஜமாக பேசாமலிருப்பதன் காரணம் புரிந்தே இருந்தது. அதைப் பேசுவதற்கான நேரமோ, இடமோ இதுவரை அமையவில்லை எனவும் தெரிந்து இருந்தது. தகுந்த நேரம் வரும் போது அவற்றைப் பேச வேண்டியது தான் அதை விடுத்து தற்போது மேலும் மேலும் பேச்சுக்களை வளர்ப்பதில் பிரச்சனைகள் தான் கூடும் என எண்ணியவளாக தனக்கு உணவை எடுத்து வைத்து சாப்பிடத் தொடங்கினாள். 

 சற்று முன்னே சென்ற ரூபன் ஏதோ ஞாபகம் வந்தவனாக இரெண்டெட்டு பின் வந்து கண்ணாடியின் முன் வந்து நின்றான். ஏற்கெனவே சரி செய்த சிகையை கோதும் பாவனையில் கண்ணாடியில் தெரியும் அவள் பிம்பத்தைப் பார்த்துக் கொண்டு தன்னிச்சையாக சீப்பை எடுத்து வாரிக் கொண்டு இருந்தான். 

 அவளுக்கென அவன் என்றோ வாங்கி வைத்திருந்த ஆஃப் வைட் சுடியில் அவளைப் பார்ப்பது மனதிற்கு இதமாகவே இருந்தது. அவளது முகத்தை ஆராய்ந்தன அவன் கண்கள், முன்பிற்கு உடல் நலம் தேறியிருந்தாள்.கன்னத்தைப் பார்க்க விடாதபடி கற்றை முடிகள் அவள் முகத்தை மறைத்திருந்தன. கழுத்தைச் சுற்றி மறைத்து அணிந்திருந்த அந்த துப்பட்டா பிறர் அறியா வண்ணம் அவன் அணிவித்திருந்த செயினை மறைத்திருந்தது.

 அவன் மனதைக் கவரும் அந்த அழகுப் புன்னகையில் அவள் அவனுக்கு தேவதைப் போலவே தோன்றினாள். தலைக்கு குளித்திருப்பாளோ?.... இல்லையென்றால் இப்படி முடியை விரித்துப் போடுவது அவள் வழக்கம் கிடையாதே?!... என்னத் திடீரெனெ அந்த முகத்தில் அத்தனைக் குறும்பு ?யாருடன் பேசிக் கொண்டு இருக்கிறாள் அவள்?.....பார்வையை நகர்த்தியவனுக்கு அங்கே இவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி அவளுடன் பேசிக் கொண்டு அமர்ந்து இருக்கும் ஜீவன்... அடப் பாவி கண்டு பிடிச்சிட்டான் போலயே.... சட்டென்று நகன்று ஒன்றுமே நிகழாதது போல விரைப்பாக அந்த இடத்தை விட்டு அகன்றுச் சென்று விட்டான்.

 காலை வேலையை முடித்து ஓய்வாக அமர்ந்திருந்தார் இந்திரா, தீபன் அலுவலுக்கு புறப்பட்டிருக்க, தீபன் மனைவி ப்ரீத்தி தன் குழந்தைக்கு உணவுக் கொடுக்க மல்லுக் கட்டிக் கொண்டிருந்தாள்.

 " அத்தே எதுவும் வேலையிருக்கா?" என்றவளாய் அருகில் அமர்ந்தவளிடம் ,

"எல்லா வேலையும் ஆச்சு குட்டிம்மா, நீ மாத்திரை போட்டுட்டியா?" என விசாரித்தாள்.

" போங்கத்தே நான் மாத்திரைச் சாப்பிடலை, உடனே ஒரே தூக்கமா வருது, இந்த ராஜேஷ் அண்ணா கிட்ட போறதே வேஸ்ட், நாம வேற நல்ல டாக்டர் கிட்ட போலாம் அத்த" என்றவளை

" வாலு, அவனுக்கென்ன ஆசையா உனக்கு மாத்திரைத் தரணும்னு , நீயா உன் உடம்பைக் கெடுத்துக் கிட்டா அவன் என்னச் செய்வான்?" என்றவரின் வார்த்தை அவளுக்கு எதனையோ நியாபகப் படுத்த அவளின் முகம் வாடிப் போனது.

" ச்சே ச்சே என்னடா இது" என்று அதட்டியவர் அவளை அணைத்துக் கொண்டார்.

" சரி சரிப் போ மாத்திரைப் போட்டுக்கோ , அம்மாவும் நானும் இன்னிக்கு உங்க நிச்சயத்துக்கு துணி எடுக்கப் போறோம். உன்னை அலைய வைக்கக் கூடாதுன்னு ராஜேஷோட ஆர்டர் ,ஜீவனை எங்கூடவே கூட்டிட்டுப் போறேன், அவன் ஒவ்வொரு சாரியும் உனக்கு போட்டோ எடுத்து அனுப்பச் சொல்றேன். உனக்கு பிடிச்சது எதுன்னு சொல்லு என்ன?"

 அம்மா என்ற வார்த்தையிலேயே நின்றுப் போன அவள் எண்ணம் அவளைப் பேசத் தூண்டியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.