(Reading time: 23 - 46 minutes)

வனுடைய ட்ராஃபிகளை அடுக்குவதற்காகவே புதிதாக ஷெல்ஃப் அமைத்து அலங்கரித்து வைத்தாள். இப்போது ஜீவனுடைய ட்ரீட்மெண்ட் முடிந்து விட்டிருந்தது. இப்போதாவது தன்னை மறுபடியும் தங்களோடு அழைத்துக்கொள்வார்கள் என்று நினைத்திருக்க, அந்தக்கனவையும் கலைத்து வைத்தார் தாமஸ்.

 ரூபன் வாங்கிய ட்ராஃபிகளையே காரணம் காட்டி வேண்டாம் அவன் பட்டப் படிப்பு வரை படிக்கட்டுமே என்று அவனுக்காக பேசுவதாக நினைத்து அவனுக்கு விருப்பமில்லாததைச் செய்து வைத்தார்.தன் பிள்ளையின் நலனுக்காகத்தானே என நினைத்து ரூபன் பெற்றோரும் அதை ஏற்றுக் கொண்டனர்.

 இப்போது அவனுக்கு ஓரளவு வெறுப்புத் தோன்ற ஆரம்பித்து இருந்தது.அவன் மனம் விட்டுப்பேசுகிறவன் கிடையாது, தனக்குள்ளே ஒவ்வொன்றையும் எண்ணி மறுகுகின்ற குணம் அவனுக்கு....ஒருவேளை அம்மாவிற்கு நம்மைப் பிடிக்காததால் தானே தாமஸ் மாமா சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள் என்றுத் தோன்ற ஆரம்பித்து இருந்தது. மனதளவில் அவர்களிடமிருந்து விலக ஆரம்பித்து இருந்தான். அதனோடு கூட தன்னுடைய ஒரே தோழியான ஜாக்கி அக்காவின் திருமணத்திற்க்கு தான் ஒரு விருந்தாளியாகப் போய் நிற்க வேண்டி வந்த போது அவன் மிகவே மனதிற்குள் அடி வாங்கினான்.

 அவனது பன்னிரண்டாம் வகுப்பு பரீட்சையை முன் வைத்து அக்காவின் நிச்சயத்திற்கு கூட அவனை அழைக்க வில்லையென அறிந்து அவனுக்கு படிப்பின் மேலேயே வெறுப்பு வந்து விட்டிருந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சகியின் "சதி என்று சரணடைந்தேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

 இங்கே அவனுடைய வீட்டினர் அவன் மன நிலையை இன்னும் அறிந்துக் கொள்ளவில்லை. ரூபனோ தனக்குள் நத்தையாக சுருண்டுப் போனான். லீவுகளில் வீட்டுக்குப் போக அவனுக்கு மனம் வரவில்லை. அங்கு போனால் அவனுடன் பேச யார் இருக்கிறார்களாம்?

 பிடிவாதமாக அவனை அழைத்து வர அவர்களால் முடியவில்லை. நம்மை யாருக்குமே பிடிக்காது, அம்மாவுக்கே நம்மை பிடிக்கவில்லை , வேறு யாருக்கு நம்மைப் பிடிக்கும் என்ற சுய பச்சாதாபத்தில் மூழ்கினான்.

 வீட்டினர் அவன் படிப்பில் கொண்டுள்ள ஆர்வத்தினால் தான் வர வில்லையோவென நினைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நினைப்பதிலும் தவறென்ன இருக்கிறது? தொடர்ந்து சிறந்த மாணவன் பரிசை வாங்குகின்றவன் அவன் தானே.

 இத்தனை பிரச்சனைக்கு நடுவிலும் தன்னை ஒருவன் காழ்ப்புணர்ச்சியில் எப்போது கீழேத் தட்டலாம் எனக் காத்துக் கொண்டிருப்பதைக் குறித்து ரூபன் அறியவில்லை. தனக்கு நண்பனாக இருக்கும் ஒருவன் அவனுடைய கையாள் என்பதையும் உணரவில்லை.

 "தராதரம் இல்லாமல் யாருக்கும் இங்கு படிக்க அட்மிஷன் கொடுத்து விடுவதால் அல்லவா இவன் பரிசை வாங்க நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டி இருக்கிறது" என்பது அவனின் குரோதத்திற்கான காரணம்.

 மனதளவில் தளர்ந்துப்போன ரூபனின் நிலையை பயன் படுத்திக் கொள்ளத் துணிந்தனர் அவர்கள். கொஞ்ச கொஞ்சமாக அவனை போதைப் பழக்கத்தில் ஆழ்த்துவதே அவர்கள் திட்டம், அப்போது இரண்டாம் வருட படிப்பின் கடைசி பரீட்சைக்கான ஸ்டடி ஹாலிடேஸ் ஆரம்பித்து இருந்தது. அங்கே பலரும் ஒளிவு மறைவாக சில போதைப் பழக்கத்திற்கு ஆளாகியிருப்பது அவனுக்குத் தெரியும். அக்காவின் வழி நடத்துதலில் அவனுக்கு அது வரை அவற்றில் பெரிதான ஆர்வமில்லை, ஆனால் நண்பனின் வற்புறுத்தலும், அப்போதைய அவனுடைய வெறுப்பான மன நிலையும் போதையின் பாதையில் அவனை நடத்திச் செல்லத் துணிந்தது.

 ஒரு சிலப் போதைகள் மந்த நிலையை ஏற்படுத்தும், ஒரு சிலவோ ஆர்ப்பாட்டம் செய்யத் தூண்டும். அவனை பிறர் முன் கூனிக் குறுகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் அவனுக்கு மதுவை மிக அதிகமாக ஊற்றிக் கொடுத்தனர். கூடவே அவனை மிகவும் தாழ்த்திப் பேசவும் தொடங்கினர். அவனுக்கு கோபமூட்டுவது, பிறர் முன் கேவலப் படுத்துவதே நோக்கமாக இருந்த அவர்களுக்குத் தெரியவில்லை அவனுள்ளே கனன்றுக் கொண்டிருந்த பெரிய ஜீவாலையை தான் பற்றியெழச் செய்கின்றோம் என்பது...

 அமைதியாக இருப்பவர்களைப் பெரும்பாலும் குறைவாக எண்ணுதல் இங்கு பலருக்கும் பழக்கம் அது சாதாரண புல் பூண்டுகளைக் கொண்ட மலை அல்ல, எரிமலைக் குழம்பை தன்னுள் அடக்கிகொண்டிருக்கும் மலையாகவும் இருக்கலாம் என அவர்களுக்குப் புரிவதில்லையே...அது போலவே அன்றும் ஆயிற்று.

 அந்த எரிமலை அன்று வெடித்துச் சிதறியது, எதிரில் நின்று தன்னை கேவலமாக, குத்தலாக, கேலிப் பேசியவர்களை அடித்து நொறுக்கியது. இயல்பாகவே நல்ல உடற்க்கட்டும், உடற்ப்பயிற்சிகளால் தன்னை உறுதிப் படுத்தியிருக்கும் தேகமும் கொண்டவனை அவர்களால் எதிர் கொள்ள முடியவில்லை.

 அடித்துப் புரண்டு ஓடி வந்த இந்திரா, தீபன் மற்றும் தாமஸை வரவேற்றது, தான் முதன் முறையாக எடுத்துக் கொண்ட போதையால் பலபேரைக் காயப் படுத்திவிட்டு சுவரோரமாக தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த ரூபனேதான்.

தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:970}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.