(Reading time: 29 - 57 minutes)

ப்டி ஊரே இல்லாத இடத்துல வச்சு பார்த்தா தான் இவ்ளவு ஸ்டார்ஸ் தெரியும்….. அதப் பார்க்கவே இங்க வந்து இருப்பேன்….” அப்படி ஆரம்பித்த அவர்களது ரசனை பற்றிய பேச்சு வார்த்தை எங்கங்கோ சுற்றிக் கொண்டிருக்க,

 சில்லென்ற குளிர்ந்த ஈரக் காற்று மண்வாசனையோடு அவளை தீண்ட, அதற்கு மறைவாக இன்னுமாய் அவன் கத கத அணைப்பிற்குள் புதையும் போதுதான்….. அவன் இவளை தோளோடு சேர்த்து அணைதிருக்கிறான்…. இவள் பாதியாய் அவன் மார்பில் சாய்ந்து படுக்காத குறையாக கால் நீட்டி அமர்ந்து கதை பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதே புரிகிறது இவளுக்கு….

அச்சோ என்று வெட்கமாகவும் வருகிறது….விடு என பிச்சு ஓடவும் ஏதோ தடை போடுகிறது….

என்ன செய்யவென இவள் முழித்த நேரம் சில்லென விழுந்து தேகம் சிலிர்க்க செய்கிறது முதல் துளி மழை….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??

படிக்க தவறாதீர்கள்...

“மழையா?... ஸ்டார்ஸ் தெரியுறப்ப பொதுவா மழை வராதே” என்றபடி அவனுமே அடுத்து எழுந்து கொள்ள ….. கண்ணோடு கண் பாரமால் அவன்  கை மட்டும் பிடித்து  கவனமாக இறங்கி  அந்த மர வீட்டிற்குள் நுழையும் போது ஓரளவு நனைந்திருந்தாள் வினி…..

என்னதான் குளிர் காற்றில் தேகம் சில்லிட்டாலும், தூவானம் சிதறும் அறை வாசல் முகப்பில் காலை கீழ்பார்த்து தொங்கவிட்டு உட்கார்ந்து கொண்டாள் இவள்…. அங்க இருந்து பார்க்கப்பதான் கண்ணுக்கு வெளிச்சம் என கார் லைட் மட்டுமாவது தெரியுது…..மத்தபடி கும்மி இருட்டு…..

“நனஞ்சுட்டியே வினு” என இவள் அருகில் வந்து அமர்ந்தவன் பார்வை இவள் ஆடவிட்டிருந்த  காலில் பட….

இவளுக்கோ மழையில் நனைந்து கற்றைகளாய் பிரிந்து நெற்றியில் படிந்திருந்த அவன் முடியின் மீது…...…. அவன் அழகென்று இவளுக்கு தெரியும்….ஆனால் அதற்காக இத்தனையா என்கிறது இதயம்….  

 “உனக்குன்னு இத வாங்கினேன் வினு…..பிடிச்சா போட்டுக்கோ….” என்றபடி ஒரு சின்ன கவர் ஒன்றை பாக்கெட்டிலிருந்து எடுத்து நீட்டினான் இப்போது அருகிலிருந்த அவன்….

ஒற்றை சலங்கை வைத்து மிக மெல்லியதாய் இரண்டு வெள்ளிக் கொலுசுகள்…. சில கண்ணாடி வளையல்கள்…..

“இதோட சத்தமெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்….” அவன் தான்.

“அணில்க்கு கொலுசு போட்டப்பவே தெரிஞ்சுதே…” கிண்டலடித்தாலும் அப்போதே அவன் தந்ததை ஆசையாய் அணியத்தான் முனைந்தாள் வினி.

முதலில் வளையல்களை அணிந்தவள்… அடுத்து கொலுசை எடுத்தாள்.

நனைந்து குளிரில் சற்று மரத்திருந்த அவள் கை ஹூக் மாட்ட ஒத்துழயாமை செய்ய…. அதை பார்த்திருந்தவன் அவள் கையிலிருந்து கொலுசு முனைகளை தான் பற்றி அதை மாட்டி வைத்தான்….

மாட்டும் போது  பட்டும் படாமலுமாய் அவளை தீண்டிச் செல்லும் அவன் கை சுடுகிறது இவளுக்கென்றால்…. அவனுக்கு குளிர்கிறது இவள் கால்.

மாட்டி முடிக்கவும்….அவள் கால் மீது கை வைத்துப்பார்த்து “என்ன இப்டி குளுந்துருக்குது உனக்கு…?” என்றவன் கையை

“ப்ச் க..கைய எ..எடுங்க ய…யவிப்பா…காலப் போய் தொடலாமா…?” என்றபடி தட்டிய அவளது உதடுகள் தந்தி அடித்துக் கொண்டிருந்தன.

“ரொம்ப குளிருதா வினு……நான் போய் கார்ல இருந்து….” என்றபடி அவன் எழும்ப முனைய…..அவன் சொல்ல வந்ததை சொல்லி முடிக்கவிடவில்லை இவள்…

“நோ நோ….இ..இப்பல்லாம் நீங்க கீ…கீழ இறங்க கூடாது….” மழையில் அவன் கீழ இறங்குறதே எதுவும் ஆபத்தாகிடும் என பயந்த வினியோ அவனை தடுக்கும் பொருட்டு அவன் கையை வேகமாய் பிடித்து வைத்துக் கொண்டாள்.

“பொண்ணு இப்ப நீ என்ன போகவிடலைனா ப்ரோஸ் அண்ட் கான்ஸ்லாம் படு பெருசா இருக்கும்….”

என்ன? என்பது போல் நெற்றி நெரித்து இவன் முகம் பார்த்தாள்.

“நாளைக்கு உனக்கு ஃபீவர்  வந்தா உனக்கு இஞ்செக்க்ஷன் இருக்கும்….அதை சிலர் உனக்கு போட்டு வேற விடனும்….”

அவன் சொல்ல சொல்ல அந்த காட்சி கண்ணில் விரிய கரடிட்ட கையோட கையா மாட்டிக்கிட்ட மாதிரி முழிச்சா வினி….. இஞ்செக்க்ஷனா?!!!!!

ஆனா அதுக்காக இந்த மழைல இவன எப்டி விட? அவனைப் பிடித்திருந்த பிடியை இன்னுமாய் இறுக்கினாள்.  இப்போதும் தந்தி அடித்துக் கொண்டிருந்தன அவள் உதடுகள்….

அவள் முகம் பார்த்திருந்தவன் என்ன புரிந்தானோ…?

“இங்க வா” என அறையின் உட் சுவருக்கு அழைத்துச் சென்றவன், தான் அமர்ந்து, இழுத்து அவளை தன் மடியில் வைத்து, பின்னிருந்து அவளை இரு கைகளால் இதமாய் அணைத்துக் கொண்டான்…..

“இப்ப குளிராது”

சற்றும் இதை எதிர்பார்க்காத வினி ஒரு நொடி இதில் துடித்துப் போனாள் எனினும்…..மறு கணம் அந்த சுக சுரபிக்குள் தொலைந்து போனாள்…..

 இடி மின்னல் எதுவுமின்றி எதிரில் கொட்டியது மழை….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.