(Reading time: 29 - 57 minutes)

ர்றேன்னு சொல்லிட்டு போறான்…..எப்ப வருவான் என்று ஓடியது மனது….. முன்பும் இப்படித்தான் பார்வையால் விடை பெற்றவன்….ஏன் வெறும் பார்வையால் மட்டுமே உயிர் தைத்தவன்….. இப்ப வந்து நிக்கலையா….? அது மாதிரி வருவான்…. என்கிறது மனம்…

அவன் வருவான் தான்… ஆனால் அவன் வரும் போது அவனவளாய் இருப்பாளா இவள்?

னுவுக்கு எல்லாம் பார்த்து பார்த்து செய்து அவளை அவளது வீட்டில் கொண்டு சேர்த்தது அதிபன். அவள் காலில் பட்டிருந்த காயத்திற்கு ஸ்டிச் போட்டிருந்ததோடு அவளை சில நாள் நடக்க வேண்டாம் எனவும் சொல்ல பட்டிருந்ததால் வீல் சேரில்தான் அவளை கூட்டி போக வேண்டி இருந்தது. அப்படி ஒரு நிலையில் அவளையும் வயதான கனி ஆன்டியையும் தனியாக அந்த வீட்டில் விட அதிபனுக்கு மனமே இல்லை…

இவன் யோசனையோடு அனு வீட்டின் முன் காரை நிறுத்திய போது அங்கே இவர்களுக்காக காத்து நின்றது நிலவினி…..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சித்ரா வெ'யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதலை எப்போது சொல்வேன் உன்னிடமே

படிக்க தவறாதீர்கள்...

நேற்று இரவு மழை முடிந்து இரவு வெகு நேரம் பின்பு வீடு திரும்பிய போது, இராயகிரியில் வினியைப் பார்த்து விரும்ப தொடங்கியதிலிருந்து, இப்போது அதிக்கு அனு மீது உள்ள ஈடுபாடு வரை அனைத்தையும் சொல்லி முடித்திருந்தான் யவ்வன்….

காலையில் அனு ஹாஸ்பிட்டல் சென்ற விஷயம் அறிந்தவள் சூழ்நிலை உணர்ந்து அனு வீட்டினர்க்கு  தேவையான சாப்பாடை தயார் செய்து எடுத்து வந்திருந்தாள் அவள்.

காரிலிருந்து இறங்கிய அனுவை கட்டிலுக்கு கூட்டிச் செல்லும் போதே தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டாள் வினி….

“அதி அத்தானோட தம்பி வைஃப் நான்….என் பேரு நிலவினி….நீங்க வினினே கூப்டலாம்….முறைல நான் உங்களுக்கு தங்கை…… எப்ப என்ன ஹெல்ப் வேணும்னாலும் என்னய கூப்டலாம் நீங்க…..பைதவே அப்டி ஹெல்ப்லாம் கேட்க மாட்டேன்னு சொல்லிடாதீங்க……கனி அத்தைட்ட கேட்டுப் பாருங்க….. இங்கல்லாம் இப்டித்தான்…..குடும்பத்துல ஒருத்தங்களுக்கு உடம்பு முடியலைனா அடுத்தவங்க தான் பார்த்துப்போம்….சித்தப்பா பெரியப்பா வீட்ல என்ன ப்ரச்சனைனாலும் அது நம்ம வீட்டு ப்ரச்சனை மாதிரிதான்…. இப்போ நாம ரெண்டு பேரும் ஒரே குடும்பம்…..சோ நாளைக்கு எனக்கு எதாவது ஒரு ஹெல்ப் வேணும்னாலும் நீங்க தான் செய்யனும்… ”

உதவி வாங்கவெல்லாம் அனுவின் மனம் கண்டிப்பாய் முன் வராதுதான்….. ஆனால் இப்படி எடுத்த எடுப்பில் நாம ஒரே குடும்பம்….இங்க இப்டித்தான் ஹெல்ப் பண்ணுவோம் என்பவளை மறுக்கவும் முடியவில்லை… அதோடு  இங்க யாருக்கும் என்னை பிடிக்காது என நினைத்திருந்த மனதிற்கு இந்த உரிமை உறவு இதமாயும் இருக்கிறது.

அப்போது தான் அறைக்குள் இருந்த மாற்றத்தை கவனித்தாள் அனு. கட்டில் இருந்தது அங்கு. சுற்று முற்றும் பார்த்தால் வீட்டுக்கு அத்யாவச தேவையான பல பொருட்கள்…..அனு எதையும் எடுத்து வந்திருக்கவில்லை……அவளுடைய பொருளாதார சூழ்நிலை அதுக்கு இடம் கொடுத்திருக்கவில்லை….

அவள் பார்வையை உணர்ந்த வினி “முன்னால இந்த வீட்ல எல்லா ஃபர்னிசரும் உண்டாம்….பூட்டி போட்றுக்க வீடுன்னதும் எடுத்து யூஸ் செய்துட்டாங்க   போல….இப்பதான் ஆள் வந்தாச்சே அதான் எடுத்தத கொடுக்கனும்னு கொண்டு வந்து வச்சாங்க……” என அனு மறுக்க முடியாதபடி அதற்கும் ஒரு காரணத்தை சொல்லி வைத்தாள்.

அனுவுக்கு இதற்குள் ஒன்று புரிந்து போனது…..வினி விஷயத்துல நோ சொல்றது தனக்கு கஷ்டம் போலும்…. அது அவள் ப்ளான் பண்ணி இவள வாயடைக்கிறதாலன்னு மட்டும் இல்ல…..இவளுக்கு வினிய பிடிச்சுறுக்கதாலயும்தான்…

அனுவை வீல் சேரிலிருந்து கட்டிலுக்கு மாற கவனமாய் உதவிய வினி…. அங்கு அனு செட்டிலாக சிறுது நேரம் கொடுத்து அவளிடம் நட்பாய் பேசிக் கொண்டிருந்தவள்

 “இன்னைக்கு சாப்பாடு முழுக்க  எங்க சைடு டிஷ்தான் கொண்டு வந்திருக்கேன்…. உங்களுக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தெரியாது….வேற எதாவது வேணும்னா சொல்லுங்க…..” என இனி சாப்பாடு எங்க வீட்ல இருந்து தான் வரும் என்பதை தெரியபடுத்தினாள்.

 “இல்ல வினி……உங்களுக்கு ஏன் சிரமம்…அதெல்லாம் நாங்க சமாளிச்சுப்போம்….” வேகமாக மறுத்தாள் அனு. ஒரு நாள் ஒரு வேளை உணவு கொண்டு வருவதென்பது வேறு…..தினமும் கொண்டு வருவது என்பது வேறல்லவா….?

“சிரமாமா? அப்டில்லாம் எதுவும் இல்ல…..நான்தான் முதல்லயே சொன்னேன்ல…இங்கல்லாம் இப்டித்தான்னு…..கனி அத்தைட்ட கேளுங்க அவங்களே சொல்வாங்க….” என ஒரு கணம் நிறுத்தியவள்

 “ பூங்காவன தாத்தான்னா எங்க வீட்ல எல்லோருக்கும் ரொம்ப இஷ்டமாம்…. அவங்களோட சொந்த குடும்பம் இவ்ளவு நாள் கழிச்சு வந்திருக்கீங்கன்றப்ப…..உங்கள நல்லா கவனிச்சுகனும்ன்ற எண்ணம் எல்லாருக்கும் இருக்கும்தான…..? உங்களுக்கு செய்றத யாரும் இங்க சிரமமா யோசிக்க  மாட்டாங்க….” என முடித்தாள்.

மெல்ல எனினும் அனுவுக்கு தன் தவறு புரியத் தொடங்கியது…..அப்போதுதான் அறை வாசலில் வந்து நின்ற அதிபனை தவிப்போடு பார்த்தாள் அவள்.

தொடரும்!

Episode # 20

Episode # 22

{kunena_discuss:929}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.