(Reading time: 29 - 57 minutes)

பயனை அந்த கணம் பார்த்த பவிஷ்யாவிற்கோ அடுத்து என்ன செய்யவென தெரியவில்லை… ஒரு பக்கம் ஓடிப் போய் அவன் கழுத்தை கட்டிக் கொள்ள தோன்றுகிறது என்றால் மறு பக்கம் மலைத்து போய் நிற்கிறது மங்கை மனம்….

அவன்ட்ட பேசலாமா கூடாதா….? அழுது அவனை நோக வச்சுட்டு போனாளே….ஆயிரம் டைம் அவன்ட்ட சாரி கேட்கனுமே….. எப்டி இருக்கான் அவன்? எப்டி இவளப் பத்தி வீட்ல சொன்னான்? அவங்க வீட்ல எல்லோரும் இத எப்டி எடுத்துக்கிட்டாங்க….? என்னென்னவோ ஓடுகிறது இவள் உள்ளே….

அபயனுமே அவளைப் பார்க்கவும் அசந்துதான் போனான் எனினும் முதலில் சுதாரித்தும் விட்டான்.  இங்க வச்சு அவன் டூயட்லாம் பாட முடியாதுன்றது மட்டுமல்ல சும்மா கூட பேச முடியாது….

ஆக வெகு இயல்பாக அறைக்குள் சென்று அந்த சாவியை எடுத்தவன்….. இவனைப் பார்த்து எழுந்து நின்றவளைப் பார்த்து உட்காரும் படி இயல்பாய் சைகை காட்டினான்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

கிருத்திகாவின் "வசந்த காலம்" - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அதாவது அடுத்தவங்க கண்ணுக்கு இப்ப இவன் பாஸ்….அவள் எம்ப்ளாயி

இதற்குள் இவர்கள் இருந்த அறை வாசலை யாரோ கடந்தனர். இதுல என்ன பேச?

அபயன் சென்று அதிபனுக்கான இருக்கையில் உட்கார அடுத்து இவளும் அமர்ந்து கொண்டாள். என்ன சொல்லப் போறான்….? எதிர் பார்ப்போடு அவன் முகத்தைப் பார்த்தாள்.

இப்போது இவர்கள் அறை வாசல் அருகில் வந்து நின்றனர் ஏதோ இருவர்….. எதுக்கு காத்துட்டு இருக்காங்களோ…. இப்ப இவங்க எப்டி பேசிக்கவாம்?

அவள் எழுதிக் கொண்டிருந்த அந்த காகிதத்தை எடுத்தான் அவன்….. எம்ப்ளாயி ஃபார்ம்…..

அதில் ஒட்டி இருந்த அவள் ஃபோட்டோவைப் பார்த்தவன்…. அமைதியாய் அதை கழற்றி எடுத்து தன் பாக்கெட்டில் வைக்க…. அடித்து சுழற்றுகிறது ஒரு இன்ப அலை அவளை

ஆனாலும் “நான் வேற  கொண்டு வரலை” என்றாள் அவசரமாக…..  ஃபார்ம்ல ஒட்டனுமே அவ…

“உன் அதி அண்ணாட்ட சொல்லிடு அது என்ட்ட இருக்குன்னு…” என்று பதில் வந்தது அவனிடமிருந்து.

உவகையும் இன்ப உழவும் அவளுள்……

இப்பொழுது இவள் ஃபார்மில் அவள் பெயர் எழுதி இருந்த இடத்தைக் கண்டவன் அவள் பெயருக்கு அடுத்து தன் பெயரை எழுதினான்….

“இப்பதான் க்ரெக்ட்டா இருக்கு…..இனி இத சமிட் பண்ணலாம் நீங்க…..” இவள் புறமாக ஃபார்மை நகர்த்தி வைத்தான்.

அனுபவித்த அத்தனை துன்பமும் போய் அடி முடியின்றி மிதந்தாள் அவள்.

“பை த வே உங்களுக்கு ஒரு வொர்க்….”

என்னவெனப் பார்த்தாள்.

 “தினமும் ஒரு மூனு கேர்ள் பேபி நேம் மூனு பாய் பேபி நேம் படிச்சுட்டு வந்து சொல்லுங்க…. அப்பதான் பேபிக்கு பேர் வைக்ற டைம்குள்ள நேம் பத்தி ஒரு ஐடியாக்கு வர முடியும்… “

பேபிக்கு நேமா? என இவள் பார்க்க

“அந்த நேம்ஸ் ஏ பின்ற இன்ஷியலுக்கு மேட்ச் ஆகனும்….”

இன்னும் புரியாமல் இவள் பார்க்க

“பேபிக்கு இன்ஷியல்ல பி அம்மா நேம்” அவன் பதிலில் மெல்ல புரிகிறது இவளுக்கு நம்ம குழந்தைக்கு பேர் தேட ஆரம்பி என அவன் சொல்வது…

அதகளப்பட்டுப் போனாள் அவள்…

அடுத்து அவன் என்ன சொல்ல வந்தானோ? அழைத்தது அவன் மொபைல்…. அதி..

“கீ எடுத்துட்டல்ல கீழ வா” என்றான் அதிபன்…

அதாவது இவனுக்கு அலாட் செய்த டைம் முடிஞ்சு போச்சுன்றான்….

‘அடப்பாவி அதுக்குள்ளயா’ என இருந்தாலும் அதி எதற்கு சொல்கிறான் என்றும் புரிகிறதால்

“இதோ வர்றேன்டா” என்றபடி கிளம்ப தயாரானான் இவன்.

இவள் கண்பார்த்து ஒரு தலையாட்டல்……அதாவது விடை பெறுகிறான்.

அவன் சொல்வது புரிகிறது பவிக்கு….ஆனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் முகம் வாடிப் போகிறது அவளுக்கு….

இப்பொழுது சற்று தலை சாய்த்து அழுத்தமாக அவளைப் பார்த்தான் அவன்… “இது தப்பு ‘ என்றது அவன் பார்வை.

அவள் இவன் முகம் பார்க்காமல் குனிந்து கொண்டாள்…. ‘தப்புன்னு தெரியுது…..ஆனாலும் ஒத்துக்க முடியலை ‘ என்றது அவள் மனம்.

மீண்டுமாய் அவள் நிமிர்ந்து பார்க்கும் போது “ எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு” என்ற ஆறுதலான ஒரு பார்வையோடு “ப்ளீஸ் சந்தோஷமா இரு“ என்ற கெஞ்சல் அவன் கண்களில்…

அவனுக்காகவாவது  இவள் சந்தோஷமாகியாக வேண்டும்…. இல்லனா அவனுக்கு கஷ்டமா இருக்கும்….

இதழ் பிரியாமல் இதமாக சிரித்தாள்.

இரு வந்து கவனிச்சுகிறேன்….. என்ற ரீதியில் ஒரு பார்வையுடன் போனான் அவன்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.