(Reading time: 13 - 25 minutes)

டுத்த வார்த்தை அவன் உதிர்ப்பதற்குள் அங்கிருந்து கிளம்பினாள் யாத்ரா.

நம்மில் பலருக்கு இருப்பது இந்த நோய் தான்!!காரணமே இல்லாது அடுத்தவரை நிந்திக்கும் நோய் அது!!தனது மன அமைதி ஒன்றையே ஆதாரமாக்கி,அடுத்தவரின் வாழ்வை சங்கடத்தில் ஆழ்த்துகிறோம்!!பிறரின் மனநிலை குறித்து எக்கவலையும் இல்லை...ஆனால்,நம் மனம் வருந்த கூடாது!!சற்று சிந்தியுங்கள்...இது நியாயமா??நாம் ஒரு இன்னலை அமைதியான முறையில் அணுகுவதால் நிகழ போவது தான் என்ன??வானம் இடிய போகிறதா??பூமி பிளக்க போகிறதா?கடல்நீர் வற்ற போகிறதா??நிர்மூலமான மனம்...எதையும் சாதிக்கும் சக்தி கொண்டது.அமைதிக் கொண்ட மனம் எதையும் அஞ்சி ஓட வைக்க உகந்தது.ஒருமுறை...வாழ்வில் ஒருமுறையாவது,இன்னல்களை அமைதியாக கையாண்டு தான் பாருங்களேன்...!!!வேறுபாடு தாமே அறிவீர்கள்..!!!

மனம் குத்தி கிழித்தது...

காலையில் அவனது நடத்தை...எவ்வளவு தவறு என்பதை வலிக்கும் அவனது இதயம் உரைத்தது.அவனது நடவடிக்கான காரணம் அவனுக்கே புதிராக இருந்தது.அமைதியாக மொட்டை மாடி நிலவொளியில் நின்றிருந்தான்.

திடீரென தன் பின்னால் நிழலாட திரும்பினான்...யாத்ரா துணிகளை எடுத்துக் கொண்டிருந்தாள்.

அவனிடம் எதுவும் பேவில்லை...துணிகளை எடுத்துக்கொண்டு செல்ல எத்தானித்தாள்.

"ஹனி!"-அவனது குரல் தடுத்தது. 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்... 

திரும்பாமலே நின்றாள்.

அவன் மெல்ல அவளருகே வந்தான்.

அவளது தோள்களை பற்றி திருப்பினான்.அவள் தடை ஏதும் கூறவில்லை.

"கோபமா?"-அவள் கண்கள் கண்ணீரை திரட்டின.எங்கோ வெறித்தப்படி,

"எனக்கு அதற்கெல்லாம் அதிகாரம் இருக்கா?"என்றாள்.சட்டென அவனது முகம் இருண்டது.

"உனக்கில்லை...ஆனா,என் மனைவிக்கு உண்டு!"

"அதான்...இன்னும் நமக்கு கல்யாணம் ஆகலையே!"-இந்த பதிலில் திடுக்கிட்டு போனான் ஆதித்யா.நீண்ட நேரம் அவளையே உற்று பார்த்தான்.

சட்டென அவளை இழுத்து அவளது இதழ்களை தனதாக்கி கொண்டான்.அவனது செய்கை அவளை பலமிழக்க செய்தது.கரம் ஏந்திய வஸ்திரங்கள் தன்னால் நிலம் விழுந்தன...

இதுவரை அவன் அவளிடத்தில் வரம்பு மீறியதில்லை...ஆனால்,இன்று அவனது செய்கைகள் அனைத்தும் விசித்ராகவே இருந்தன.

மெல்ல தன்னவளை தியாகித்தான் ஆதித்யா.

"எந்த ஒரு ஆணும் சரி!தன் வாழ்க்கையை சரிபாதியா வந்து பகிராத ஒருத்தியிடம் தடுமாற மாட்டான்!உன் மேலே எனக்கிருக்கிற உரிமையை சொல்ல வேண்டிய அவசியமில்லை.என் மேலே உனக்கிருக்கிற உரிமையை விளக்க வேண்டிய அவசியமும் எனகில்லை.பதில்,தேவைன்னா,நான் அதை சொல்லிட்டேன்!"என்றான்.

அவள் திகைத்துப் போனாள்.

"என் வாழ்க்கையில என் அம்மாக்கு எந்த அளவு மதிப்பு கொடுக்கிறேனோ!அதே மதிப்பை உனக்கும் தந்திருக்கேன்.இனிமேலும் தருவேன்!!

ஆனா,சில சமயம் என் கோபத்தையும் உன் மேலே காட்டி இருக்கேன்!எனக்கு வேற யாரு இருக்கா!"-அவனது குரல் அடைத்தது.

"நீ எனக்கு வேணும் யாத்ரா!எனக்கு உன்னை இழக்குற அளவுக்கு தைரியம் கிடையாதும்மா!"-ஆதித்யா,அவளது கரங்களை தன் நெஞ்சில் மேல் வைத்தான்.அவனது இதயத்துடிப்பு உச்சப்பட்சமாய் இருந்தது.

அவளது கேள்விகள் யாவும் தீர்ந்திருக்க தான் வேண்டும்,அவனது கவலைகளை தன் தோள் மேல் அவனை சாய்த்து பகிர்ந்துக் கொண்டாள் யாத்ரா.

அவளின் ஆறுதலுக்காக காத்திருந்த காதலின் மனம் தன்னவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டது.

ன்றிரவு...

தனதறையில் ஏதேதோ சிந்தித்து கொண்டிருந்தான் ஆதித்யா.

அவனது நடவடிக்கை மேல் அவனுக்கே சந்தேகம் வந்தது....

ஏன் இவ்வாறு செய்கிறோம்??பல யுகங்களாய் தேடி கைவந்த புதையல் கரம் நழுவி போகும் உணர்வு இதயத்தில் பதிய காரணம் என்ன?கண்களை மூடினான்.

தலை வலித்தது....சிறிது ஓய்வை மனம் நாடியது!!!அமைதியாக சென்று படுத்துக் கொண்டான்.வராத உறக்கத்தை பலவந்தப்படுத்தி தனதாக்கி உறங்க ஆரம்பித்தான்.

காலம் சிறிது சென்றிருக்கும்!!!

சில்லென்ற தென்றல் காற்று மூடி இருந்த ஜன்னலை திறம்பட திறந்தது.

அழகிய கனவுலகம் அவனுக்காய் திறக்கப்பட்டது.

அழகிய ஸ்திரி ஒருத்தி அவன் முன் விழி நிலம் பார்க்க நின்றிருந்தாள்.

அவளின் வதனம் பெண்மையின் இயல்புகளில் ஒன்றான நாணத்தால் பொலிவாக்கப்பட்டிருந்தது.

"என்னை சந்திக்க எண்ணம் கொண்டதன் காரணம்?"

"தங்களிடம்...ஒன்றை உரைக்கவே காத்திருத்தேன்!"

"தயங்காமல் கூறுங்கள்!!"-அவள் தயங்கி நின்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.