(Reading time: 13 - 25 minutes)

"பொதுவா...பொண்ணுங்க கணவனை மரியாதையா கூப்பிட காரணம் என்ன தெரியுமா?அவங்க வாழ்க்கையில,அவங்க மதிக்கிற அம்மா,அப்பா,குரு,மற்ற உறவுகள்,இறைவன் எல்லோருடைய பாசத்தையும் அவங்களை கல்யாணம் பண்ணிக்க போறவர் தர முடியும்!அந்த பந்தத்திற்கு மனதளவுல என்ன மரியாதை இருக்கோ!அது வார்த்தைகளாக வெளிவரும்!"-ஆதித்யாவின் முகம் கனிந்தது.

"அதே பந்தத்தை பெண்களாலும் தர முடியுற பட்சத்தில்,நாங்க அப்படி கூப்பிடுவதில்லையே!!"

"காரணம்,ஒரு ஆணுக்கு தன் துணை மேலே இருக்கிற உரிமை!பெண் இயற்கையிலே மென்மையானவள்!

அவளுக்கு தன்னோடு உரிமையை அன்பாலே நிலைநாட்டிக்க தெரியும்!"-என்று அவனது கன்னத்தைப் பற்றி கிள்ளினாள்.

"இப்படி எல்லாம் பேச சொல்லி உனக்கு யாரு சொல்றா?"

"அது அந்த ஆண்டவன் ஆசி!"

"போதும்மா!போய் தூங்கு!"

"சார் என்ன பண்ண போறீங்க?"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

"நானா!!என்ன பண்ணலாம்??ம்...உன்னை தூங்க விடாம பண்ணலாம்!"-அவளை தன்னோடு இழுத்தப்படி கூறினான்.

"இதெல்லாம் சரியே இல்லை...நீங்க ரொம்ப கெட்டு போயிட்டீங்க!கெட்ட பையன்!"

"பரவாயில்லை..சொல்லிக்கோ!"-அவளை நெறுங்கியவனை தள்ளிவிட்டு ஓடினாள் யாத்ரா.அவள் ஓடும் அழகையே பார்த்தவனின் மனம் மீண்டும் தனது சொப்பனத்தை நினைவுக் கொணர்ந்தது.

"விதியின் விளையாட்டை நிதர்சனம் என்று எண்ணாதே!"-தலையை உலுக்கிக் கொண்டு நடந்தான் அவன்.

பைராகியானவள் அவர்களின் காதலை தள்ளி நின்று ரசித்துக் கொண்டிருந்தாள்.

விதியின்  வலிமையால் தான் சேர்த்த பந்தம் பிரிய நேரிட்ட போது,யார் அழுதார்களோ!இல்லையோ!பல வருடங்களுக்கு முன் அந்நதி அழுதது!!இன்று அதே பந்தம் கரம் சேர நினைக்கையில் நிகழ போவது தான் என்ன???

ட்டை மரங்கள் சூழ்ந்துப்போய் இருளில் மூழ்கி இருந்தது அந்த வனம்!!!சூரிய கிரகணமே உட்புக இயலாத காரணத்தால்,சாபம் பெற்ற வனம் என்று தலைமுறை தலைமுறையாக நம்பிக்கை வளர்த்த வனம் அது!!!

நமது பயணம் அங்கே நிகழுமானால்...எண்ணற்ற வௌவால்களை கண்குளிர காணலாம்!!மனதில் நிச்சயம் 'திக்'என்ற உணர்வு பரவாமல் இராது!!நமது காலடி ஓசை நம்மையே நமக்கு அமானுஷ்யமாய் காட்டும்!!அந்த அமானுஷ்யத்திலும்,அச்சமின்றி கம்பீரமாய் நடந்து வந்தது அந்த ஜீவன்!!!தைரியத்திற்கு பெயர் போன சிம்மம் அது!!!!உறுதியான வஜ்ர தேகத்தை கொண்டிருந்தது!!!அதன் ஒரு கர்ஜனை அங்கிருந்த வௌவால்களை அலறி அடித்து வனத்தை தியாகிக்க வைத்தது.

மெல்ல ஒவ்வொரு அடியாய் முன்னேறியது அந்த சிம்மம்!!!எதார்த்தமான நடை!!ஒரு பெரிய பாழடைந்த மண்டபத்திற்குள் சென்றது!!!சில அடிகள் சென்றதும்,எதற்கோ கட்டுப்பட்டு நின்றது!!அதன் எதிரே,எப்படியும் ஏழடி இருக்கும் கம்பீரமாய் பல நூறு வருடங்களுக்கு முன் பிரதீஷ்டைசெய்யப்பட்டிருந்த சிவலிங்கம்!!!மீண்டும் ஒரு கர்ஜனை!!!இறைவனுக்கும்,அவன் பிம்பத்திற்கும் இடையே ஒரு சிறு மேடை எழுப்பப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்தது அது!!!முதல் அத்தியாயத்தில் பார்த்த அதே புத்தகம்!!!

ஆண்டாண்டு காலமாய் தன் சுவாமியின் வருகைக்காக காத்திருக்கும் புத்தகம் அது!!!

எண்ணிய தரிசனம் இன்னும் அதன் கரம் சேரவில்லை!!

"ஓம் த்ரியம்பகம் யஜாமஹே சுகங்திங் புஷ்டி வர்த்தனம் உர்வா ருதமிப வந்தனார் மிருத்யுர் முக்ஷி யமாங்கிருதாம்!"-மேற்கூறிய மிருத்யுன் ஜெய ஸ்தோத்ரம்!இறைவன் சங்கர நாராயணன் ருத்ர நர்த்தனம் ஆடும் சமயத்தில் அவரது உடுக்கையிலிருந்து எழுந்த ஓசை என்று யுக யுகங்களாய் நம்பிக்கை பெற்றது!!!இதை கூறுவதன் மூலம் துர்மரணங்களை மற்றும் தோல்விகளை தவிர்க்கலாம் என்பது நம்பிக்கை.அன்று தன்னவனுக்காக அந்த ஸ்தோத்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தாள்.

மனதின் வேண்டுதலை மிக அமைதியாக இறைவனிடம் எடுத்துரைத்தாள் அவள்.

இறைவனை பூஜித்துவிட்டு எழுந்தவளின் பின்னே கைகளை குறுக்கே கட்டியப்படி நின்றிருந்தான் ஆதித்யா.அவனது நெற்றியில் திருநீற்றின் கீற்றை பதித்தாள் யாத்ரா.

"இன்னிக்கு என்ன வேண்டுதல்?"

"என்னிக்கும் ஒரே வேண்டுதல் தான்!!"

"உனக்காக எதுவும் கேட்க மாட்டியா?"-அவள் சிறிது மௌனம் காத்தாள்.

"நீங்க போதும்!!"-அடுத்த கேள்வி அவனை கேட்க வைக்காதப்படி இருந்தது அவள் பதில்!!

"இப்படி ஒரு பெண் மனைவியா வரணும்னா!நிச்சயம் ஒருத்தன் ஆயிரம் வருஷம் தவம் செய்து வரம் வாங்கி இருக்கணும்!"

"போதும்!போய் சாப்பிடுங்க!டைம் ஆகுது!"

"ம்...வந்து ஊட்டிவிடு!!"

"மனசுல கைக்குழந்தைன்னு நினைப்பா?"

"ஏன்?நீ உன் குழந்தைக்கு மட்டும் தான் ஊட்டிவிடுவியா?"-சட்டென அவன் கூறியதன் பொருள் விளங்கியவளின் முகத்தில் நாணம் குடிக் கொண்டது.

"ச்சீ...போங்க!"-என்று அவனிடமிருந்து விலகி ஓடினாள் யாத்ரா.

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:969}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.