(Reading time: 13 - 25 minutes)

"கூறுங்கள்!"

"தாம் அன்று என்னை அந்த கொடிய சிம்மத்திடமிருந்து ரட்சித்தீர்கள்!!என்னிடம் மிகுந்த அக்கறை கொண்டு இருக்கிறீர்கள்!அனைவரிடமும் அன்போடு உறவாடுகிறீர்கள்!!யாவரும் தம்மிடம் ஈர்க்கப்படுபவர்!!நானும்..அதில் விதிவிலக்கல்ல யுவராஜரே!!"-அவள் கூற வந்ததன் பொருள் நிச்சயம் அவனுக்கு விளங்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை....

"தம்மை நோக்கி என்னை ஈர்த்தது.."

"ஏதுமல்ல..."-அவள் முடிப்பதற்குள் கடுமையாக உரைத்தான் அவன்.அதிர்ச்சியாக அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

"விதியின் விளையாட்டை நிதர்சனம் என்று எண்ணாதே!"-உறக்கத்தில் இருந்து பதறிக் கொண்டு எழுந்தான் ஆதித்யா.அந்த குளிர்சாதன அறையிலும் வியர்வை கொட்டியது.

மூச்சிரைத்தது!!!

தன் எதிர் நின்ற நிலைக் கண்ணாடியையே நீண்ட நேராய் பார்த்தான்.

மனதில் குழப்பம் வியாபித்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தங்கமணி சுவாமினாதனின் "கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது..." - பெரியவர்களுக்கான மந்திர, மாயாஜாலங்கள் நிறைந்த வரலாற்று கதை...

படிக்க தவறாதீர்கள்... 

"என்ன நடக்கிறது இங்கே?இதுவரை நான் சந்திக்காத அனுபவங்கள்...எண்ணங்கள்!!!யார் அந்த கன்னிகை??"-மனம் விடை அறிய துடித்தது.

அந்தக் கோட்டையை தியாகித்து,வெளியே வந்தான்.

அழகிய பைராகி நதி சலசலத்து கொண்டிருந்தது.

அதன் அருகே அன்று யாத்ரா எழுப்பிய சிவலிங்கம் கம்பீரமாய்!!!

நதியின் ஓட்டத்தையே பார்த்தப்படி இருந்தான் அவன்.

ஆரவரமில்லாமல் அமைதியாக காற்றின் வேகத்தோடு ஓடிக் கொண்டிருந்தது அந்நதி!!!!

அந்நதிக்கு கட்டுப்பட்டவனாய் அதனருகே செல்ல ஓரடி முன் வைத்தாள்.

"ஆதி!"-என்ற குரல் அவனை தடுத்தது.திடுக்கிட்டு திரும்பினான்.

"என்ன பண்ணிட்டு இருக்க இங்கே?"

"அது...வந்து...தூக்கம் வரலை யாத்ரா அதான்...!!!"

"ஏன்?என்ன?உடம்பு சரியில்லையா?எப்போதும் சீக்கிரம் தூங்கிடுவ?"-அவனருகே வந்தவள் அவனது நெற்றியை தொட்டுப் பார்த்தாள்.

"இல்லம்மா...அதெல்லாம் ஒண்ணுமில்லை...!!!"

"ஏன் பதற்றமா இருக்க?"

"அப்படியா தெரியுது?"

"ம்.."

"அதெல்லாம்    ஒண்ணுமில்லைம்மா!"

-அவள் அவனை நம்புவதாக இல்லை.

"நிஜமாம்மா!ஆமா...நீ என்ன பண்ற இங்கே?"

"தண்ணி குடிக்க வந்தேன்!கதவு திறந்திருந்தது..."

"ஓ...சரி நீ போய் தூங்கு!அப்பறம்,எதாவது ராட்சசன் வந்து தூக்கிட்டு போக போறான்!"-என்று அவளை தன்னருகே இழுத்தான்.

"அதான்...காப்பாற்ற நீ இருக்கியே!"

-அவளது கூற்று அவனை திடுக்கிடவே செய்தது.

"என்னாச்சு??"

"இல்லை....எதுவுமில்லை!இன்னிக்கு ரொம்ப அழகா இருக்க!"

"ம்...ஐயா இன்னும் கனவுலகத்திலே மிதக்கிறீங்களா?"

"ஹனி!"

"ம்..."-அவளது வலக்கரத்தை தனது சிரசில் வைத்தான் அவன்.

"எனக்கு சத்தியம் பண்ணு!நான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் வாழ்க்கை துணையா வருவன்னு!"-அவள் தெளிவாய் குழம்பி போயிருந்தாள்.

"என்னாச்சு?உங்களுக்கு?"

"சத்தியம் பண்ணு!"-அவள் இதழில் காதல் புன்னகையாக வெளியானது.

"எத்தனை ஜென்மம் எடுத்தாலும்,உங்களுக்கு மனைவியாக நானும் பிறப்பேன்!ஏழேழு ஜென்மத்திலும் நம்ம பந்தம் உடையாது!நான் வணங்குற சர்வேஷ்வரன் மேலே சத்தியம்!"-அவர்களின் பந்தத்திற்கு இறைவனை சாட்சியாக்கினாள்.

அவன் மனதில் நிர்மூலமான அமைதி குடிக்கொண்டது.

சிறிது நேரம் அவளையே பார்த்தவன்,தன் புருவங்களை சுருக்கினான்.

"என்ன?"

"நீ என்னை வாங்க,போங்கன்னு சொன்ன தானே!"-அவள் திடுக்கிட்டாள்.

"அ..அதெல்லாம் இல்லையே!"

"இல்லை....சொன்ன!"

"ஆமா சொன்னேன்!இப்போ அதற்கென்ன?நான் சொல்வேன்?"

"இப்போ உங்களுக்கு என்னாச்சு மேடம்?அன்னிக்கு போடான்னு சொன்ன,இன்னிக்கு ஓவரா மரியாதை கொடுக்கிற?"

"எப்போதோ கூப்பிட ஆசை..."

"இப்போ தான் வெளியே வருதா?"-அவள் அங்கிருந்து ஓட பார்த்தாள்.

அவனது கரம் அவளை தடுத்தது.

"ஃபார்மாலிட்டி எதுவும் அவசியமில்லை...நீ எனக்கு தாழ்ந்தவளும் இல்லை,நானும் உனக்கு உயர்ந்தவனும் இல்லை.இரண்டுப் பேரும் வேற வேற இல்லை!புரியுதா!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.