(Reading time: 21 - 41 minutes)

ண்ணனும் மகதியும் யோசனையில் முழ்கியிருக்க, அதை கலைத்தது ஹரியின் குரல்.

" கண்ணா நாளைக்கு... " எதையோ சொல்லி கொண்டே அறையினுள் வந்தவன், மகதியை கண்டதும் நிறுத்தி, பின் கண்ணனை மட்டுமாக பார்த்து, " என்னாச்சு டா ? " என்று கேட்டான். அவனும் சின்ன மார்டின் காயில் சுத்தி நடந்ததை சொல்லி முடித்தான்.

" எதாவது பொய் சொல்லி தான் ஆகணும் போலவே " என்று மகி இழுக்க,

" இல்லடா, பொய் சொல்லறது எல்லாம் வேண்டாம். அது நல்ல இருக்காது. வேற யோசிப்போம்" மறுத்தான் ஹரி.

" வேற என்ன  தான் செய்யுறதாம் அத்தான் ?”

கேள்வியோ பதிலோ, மகதியும் ஹரியும் கண்ணனை மட்டுமே பார்த்து பேசினர்.

" ம்ம்ம், இப்டி எதாவது, ஒரு சின்ன போட்டோ செஷன் போல செட் செய்து, கொஞ்சம் போடோஸ் எடுக்கனு சொல்லி கூப்டுவோம். ஆல்பம்லயும் சேர்த்துடலாம். யாரும் ஒன்னு சொல்லவும் மாட்டாங்க. மாட்டவும் மாட்டோம். ம்ம், என் ப்ரெண்ட் ஒருத்தன் போட்டோக்ராபர்.  அவன்கிட்ட ஹெல்ப் கேக்குறேன். கண்டிப்பா செய்வான். ஓகே வா? "

ஹரியின் யோசனையைக் கேட்ட கண்ணன் உற்சாகமாக, " சூப்பர் தம்பி. என் அறிவு கொழுந்தே. இந்த உதவிக்கு, பதில் உதவியை நான் சிறப்பா செய்வேன்டா. மார்க் மை வோர்ட்ஸ். இந்த பிளான் ஓகே தானே மகி ? "

'ஹம்' என மண்டையை ஆட்டினாள் மகதி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்... 

" தென் ஓகே. இப்போ எக்சிக்யூட் பண்ணுவோம். ஹரி அந்த ப்ரெண்ட் நம்பர் கொடு. நானே பேசுறேன். இடம் செட் செய்வதும் நானே பாத்துக்குறேன். மகி, ஷணுவ சமத்தா சைட் கார்டனுக்கு கூட்டிட்டு வரது உன் பொறுப்பு "

" அப்போ நான் என்ன தான் செய்ய ? " என்று ஹரி குழம்ப,

" உனக்கு தானே முக்கியமான வேலையே தம்பி " என்றான் கண்ணன்.

" உன் டோனே சரியில்லையே, என்ன ஆப்பு வைக்கபோற டா நீ? "

" சீ.. சீ.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல தம்பி. என் மாமனார் கிட்ட இதை இன்பார்ம் பண்றதை மட்டும் நீ செய்தா போதும் "

" வாவாவாட்ட்ட்ட்ட்ட்?? ரிவார்டு உனக்கு.. பரேடு எனக்கா ??? "

" உன் அண்ணனுக்காக இது கூட செய்ய மாட்டியா? "

" மாட்டேன் டா "

" டேய், அப்டி எல்லாம் டக்குனு சொல்ல கூடாது டா. பொறுமையா யோசிச்சு சரினு
சொல்லு போதும் "

இப்பொழுது ஹரி முறைக்க, " வேற வழியே இல்ல ஹரி நீ தான் பார்த்து எதாவது செய்யணும். கொஞ்சம் யோசிச்சு பாரேன் "

" பயமா இருக்குது போல அத்தான்.. "  இடையில் மகதி வெறுப்பேற்ற,இம்முறை ஹரியிடமிருந்து பதில் வரவில்லை. அவளை திரும்பி கூட பார்க்கவில்லை.

ஓரிரு நொடிகளில், " சரி, செய்யுறேன், உனக்காக....மட்டும் " அழுத்தம் தந்தவன், " இல்லனா விடவா டா போற நீ!!! விதி " என்று வேடிக்கையாக சொல்லி வெளியேறினான்.

" ஹா...ஆ..... அங்..." எச்சிலை விழுங்கினான் ஹரி.

( என்னடா இது!!! தேவர் மகன் ரேவதி போல, ' வெறும் காத்து தான் வருது..' )

கல்யாணத்திற்கு சமைக்க வந்திருந்தவர்களிடம், ஏதோ பேசிக்கொண்டிருந்த தில்லைராஜனை அழைத்தான், இல்ல இல்ல .. அழைக்க முயன்றான் ஹரி.

அவன் 'அங்', 'அங்கிள்' ஆவதற்குள், அவன் அடித்த காற்று பட்டோ என்னமோ  தற்செயலாக அவரே திரும்பி இவனைக் கண்டு,

" என்ன தம்பி இந்த பக்கம், என்னைய பார்க்க தான் வந்தீங்களோ? "

" ஆ....... ஆமா அங்கிள். உங்ககிட்ட ஒன்னு சொல்ல வந்தேன் "

" என்ன சொல்லுங்க? "

" அது வந்து, அண்ணனையும் அண்ணியையும் சில போடோஸ் எடுக்கணுமாம். ரொம்ப கஷ்வல் லுக்ல. மண்டபத்து சைட்ல இருக்குற கார்டன்ல தான்.  அதான் உங்க கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு அவங்களை கூப்டலாம்னு வந்தேன் அங்கிள் "  

" என்ன தம்பி, இப்போவே ரொம்ப நேரமாயிடிச்சே! இதை எல்லாம் நாளைக்கு வச்சுக்கலாமே "

" இல்ல அங்கிள், நைட் எப்பக்ட்ல போடோஸ் சூப்பரா இருக்குமாம். எல்லாம் செட் பண்ணிடாங்க அங்க. அதிகமா போனா கூட அரை மணி நேரம் தான் அங்கிள். அதுக்குள்ள முடிச்சு அவங்களை அனுப்பிடுறோம் "

" நாளைக்கு முடியாத தம்பி? "

" நாளைக்கு கல்யாணம் சடங்கு எல்லாம் முடிஞ்சு, எப்படியும் டையர்ட் ஆகிடுவாங்க. அப்போ போடோஸ் எடுத்தா சரியா வராதில்லையா அங்கிள். நீங்க கவலை படாதீங்க. நான் சீக்கிரம் அண்ணியை கூட்டி வந்திடுறேன். அவங்க கூட மகதியும் அனன்யாவும் இருப்பாங்க "

" ஹ்ம்ம்... சரி தம்பி, நானே அவகிட்ட சொல்றேன். நீங்க கூட்டிட்டு போங்க"

" ரொம்ப தேங்க்ஸ் அங்கிள். மகதி வருவாள், அவகூட அனுப்புங்க " என்று சொல்லி, எஸ் ஆனான் ஹரி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.