(Reading time: 21 - 41 minutes)

ந்தையின் வார்த்தையைக் கேட்ட ஷண்மதியின் முகமெல்லாம் பல்லு. அப்படி ஒரு சிரிப்பு. பின்ன அவங்க ஹீரோ பெட்-ல ஜெயிச்சுடாரே. சற்று அதிகாமாக தோன்றிய நகைகளை மட்டும் கழற்றிவிட்டு, கொஞ்சம் சிம்பிளாக கிளம்பினாள். கூட்டி போக வந்த மகதியிடம் பேசியவாறே நடந்து மண்டபத்தின் தோட்டத்தை அடைந்திருந்தாள், ஷண்மதி.

அங்கே அவர்களுக்கென டேபிள் செட் செய்யப் பட்டிருந்தது. ஒரு ரம்யமான சூழல். அனால் அங்கு அவள் கண்ணன் இல்லை. சுற்றி கண்களால் அவள் அவனை  தேட, அவளின் பின்னிருந்து வந்தது அவன் குரல்,

" அஹெம்.. அஹெம்.. உன் உள்ளம் கவர் கண்ணன் இங்க இருக்கேன் " கை கட்டி, தலை சரித்து நின்று அவன் போஸ் கொடுக்க, அவள் சிரித்துக் கொண்டே திரும்பினாள்.

"அஹெம்.. அஹெம்.. நானும் இங்க தான் இருக்கேன் அத்தான்.." சைடில் இருந்து, எங்கோ பார்த்தபடி மகதி தொடங்க,

" நானும் இங்கயே தான்டா இருக்கேன் " கண்ணனின் பின்னால் நின்ற ஹரி முடித்தான்.

‘ஒரு பஞ்ச் பேச விட மாட்டாங்களே!’ என்று எண்ணிய கண்ணன்,  " நீங்க இன்னுமா கிளம்பல?”

" டேய், இது ரொம்ப ஓவர்டா. அண்ணி இருக்காங்கனு பாக்குறேன். அண்ணி அதோ அங்க நிக்குறானே, அவன் தான் என் அப்பாவி நண்பன். போட்டோக்ராபர். ஒரு சில போடோஸ், இந்த பேக்-கிரவுண்டுல. அப்புறம் கிளம்பிடலாம். இந்த திடீர் பிளான் ஏன்-னு உங்களுக்கே தெரியும். கொஞ்ச நேரம், ப்ளீஸ் "

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்... 

ஷண்மதி வெட்க புன்னகையுடன் தலையாட்ட, போட்டோ செஷன் ஸ்டார்ட்ஸ்.

சற்று தள்ளி இருந்த பெஞ்சின் இரண்டு கார்னரில் அமர்ந்தனர், ஹரி அண்ட் மகதி. மொழி இல்லா  மௌனம் அவர்கள் இடையில். இதற்கு முன்னும் இவர்கள் சண்டையிட்டு உள்ளனர், அனால் இந்த மௌனம் புதிது. ஒருவர் முகம் ஒருவர் பாரது அமைதியில் கரைந்தது பொழுது.

சரியாக ஐந்து நிமிடம் கழித்து,  “ஹாய் டாம் அண்ட் ஜெர்ரி, என்ன ஆளுக்கு ஒரு  எண்ட்-ல உட்கார்ந்து  ஸீ-ஸா  விளையாடுரீங்களோ!! ” என்று நக்கலான கேள்வியுடன் எண்ட்ரி கொடுத்து அவர்கள் இருவருக்கும்  இடையில் அமர்ந்தாள் அனன்யா.

பட், அவள் எதிர்பார்த்த எந்த ரேஸ்பன்ஸும் கிடைக்காமல் போக, 'நல்ல டயலாக், இப்டி மொக்க பசங்களுக்கு யூஸ் பண்ணிடோமே' என்று மானசீகமாக தலையில் தட்டிக் கொண்டாள்.

வாங்கின மொக்கையை மென்னு முழுங்கியவள், தன் தமக்கையின் பக்கம் திரும்ப,

" இவ்ளோ நேரமா உனக்கு, இங்க வர? " என்று கடுப்புடன் கேட்டாள் மகதி. பின்ன, ஒரு நிமிஷம் கூட அமைதியா இருக்காத பிள்ளை, இவ்ளோ நேரம் தம் கட்டி சைலண்டாக இருந்தால், கடுப்பு வரும்ல!

" பாட்டிஸ் அசோசியேசன் நடுவுல தெரியாம போய்டேன் ஜி. அப்புறம் எங்க சீக்கிரம் வரவாம். அதை விடுங்க, உங்க ரெண்டு பேர் பைட்டும் ஓவரா? வழக்கம் போல அதே ஹாப்- அன்- ஹார் தானே!! " சிரித்தபடியே அனன்யா கேட்க,

தலையை மறுபுறம் திருப்பி கொண்டாள் மகதி. 'இந்த ஸீனுக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை' என்பது போல் அமர்ந்து தனது செல்போனை நொண்டிக் கொண்டிருந்தான் ஹரி. 

தொடர்ந்து வாங்கின தோப்பினால் காதில் புகை வர, ஹரியிடம் இருந்த போனை பறித்துக் கொண்ட அனு,

" அத்து, இங்க ஒருத்தி பேசிக்கிட்டு இருக்கேன், நீங்க 'என்னகென்ன'னு இருக்கீங்க? என்ன ஸ்கிரிப்ட்ல, இந்த ஸீன்-க்கு  உங்களுக்கு டயலாக் இல்லைனு சொல்லி இருக்காங்களா? " என்று கேட்டு வைத்தாள். ஹரி அவள் மாடுலேஷனில் சிரித்தே விட்டான்.

'ஆமா, நான் அத்தான்னு கூப்டலனா  மட்டும் நல்லா கத்து, இவ அத்தானை  சுருக்கி அத்து,  கொத்துனு எப்டி கூப்டாலும் ஈஈஈ-னு இளி'  திஸ் டைம் புகை ப்ரம் மகி காது.

சிரித்தானே தவிர ஹரியிடம் ஒரு மாற்றமும் இல்லை.

" இதோ பாருங்க, உங்க இரண்டு பேருக்கும் நடுவுல நான் மீடியேட்டர் வேலை எல்லாம் பார்க்க முடியாது. இப்ப இரண்டு பேரும் சமத்தா சாரி சொல்லிகோங்க  பாக்கலாம். ஹம்.. கம்-ஆன்..கம்-ஆன் .. "

" ஏன் சாரி? " என்று மகதியும், " எதுக்கு? " என்று ஹரியும் பதில் சொல்ல,

" அடங்க, கொய்யாங்கோஸ்.. இவ்ளோ நேரம் நீங்க சண்ட போடணும்கிறதை தான் மறந்துடீங்கனு பார்த்தால், சண்ட போட்டதையே மறந்துடீங்களா? நம்புற போல இல்லையே? “ இதுக்கும் நோ இம்ப்ரோவ்மென்ட்.

" ம்ஹும், இது சரிபட்டு வராது போலவே. இந்த பேசும் படத்துல நான் மட்டும் தான் பேசுறனே. ஓ… என்னால முடில. நீங்க பேசினா பேசுங்க, இல்லன்னா போங்க. நான் போய் வேஸ்டா போன என் எனர்ஜிய ரீபில் பண்ணிட்டு வரேன் " என்று இடத்தை காலி செய்தாள் அனன்யா. 

யார் மேல் தவறு என்று இருவர் மனதும் மாறி மாறி யோசித்து, உண்மை உணர்ந்த பொழுதும் மௌனமே மொழியாய் சுமந்து அமர்ந்து இருந்தனர்.

இதற்கு நேர்மாறாக, கண்ணன் ஷண்மதி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தனர். வித விதமாக போஸில் அவர்களின் மகிழ்ச்சியை படம் பிடித்தது கேமரா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.