(Reading time: 21 - 41 minutes)

ரியாக மணி 12 ஆக,

ஷண்மதியின் முன் முழந்தாழிட்ட கண்ணன், " ஹாப்பி வேலடயின்ஸ் டே ஷணுமா!! இன்னைக்கு உன் முகத்துல இருக்குற இந்த சந்தோஷத்தை கொஞ்சமும் குறையாம உன்னை நான் பாத்துகனும். பாத்துபேன்னு நினைக்குறேன். லவ் யூ டா " என்று சொல்லி அவளுக்கு மிகவும் பிடித்த டார்க் பெர்ப்ல் நிற ஆர்க்கிட் பூக்களால் செய்த போக்கே ஒன்றையும், சிறிய ஆல்பம் போல் ஒன்றையும் நீட்டினான்.

அவன் வார்த்தையிலும் பூக்களிலும் பறக்க தொடங்கிய மனதை இழுத்து பிடித்து, ஆர்வத்துடன் அல்பத்தை திறந்தாள்.

ஆல்பம் முழுவதும் அவளின் புகைப்படங்கள். பெண் பார்க்க என்று அவனுக்கு கொடுக்க பட்ட முதல் போட்டோ தொடங்கி, அவள் வீட்டிற்கு சென்று முறை படி பேசிய பின்பு , நிச்சயத்தன்று, அவர்கள் இருவருமாய் சேர்ந்து சென்ற இடங்களில் சிரித்தபடி, முகுர்த்த புடவை எடுக்க சென்ற நாளில், அவனுக்காக காத்திருந்தபோது, அக்கா மகளை அள்ளி கொண்ட போது, வெளுத்து வாங்கிய மழையில் குடையுடன், சோக படம் பார்த்து கண் கலங்கிய நிலையில், கண் மூடிய நிலையில் இசையை ரசித்தபடி என ஒவ்வொன்றிலும் துறுதுறு கண்களும், இதழில் ஒட்டிய புன்னகையும், கன்ன சிவப்புமாய் அவன் ஷணு.

அவள் அறியாமல் அவன் செல் கேமராவில் சேமித்த பொக்கிஷங்கள் அவை. ஒவ்வொரு படத்தின் கீழும் அந்த நொடியில் அவன் உணர்ந்த காதலை விளக்க முயன்றிருந்தான்.

“ கவிதையா எழுதி உன்னை கவுக்கனும்னு தான் நினச்சேன் ஷணு. ஆனா எனக்கு எழுத வரல. அதான் குணா கமல் போல அப்டியே டயலாக்-ஆ எழுதிட்டேன். நீ மானே தேனே போட்டு கவிதையாக்கிடு டா “ சின்ன சிரிப்புடன் அவன் சொல்ல,

“ முடியாது.. முடியாது.. “

“ வொய் பேபிமா? “

“எனக்கு இதுவே கவிதையா தான் மாமோய் தெரியுது!!!” என்று கண் சிமிட்டி சிரித்தாள் அவள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

“ நீ மாமானு சொல்லும் போது, அப்டியே உன்னை அள்ளிக்கனும் போல தான் இருக்கு. ஆனா, அந்த சமயதுல் என் மாமா கண்ணு முன்னாடி வந்துபுடுராரே கண்ணூ...”

“ சரி சரி, பொங்காதீங்க. நம்ம பேக்-கிரவுண்ட் அப்படி.!! “ என்று இயல்பாக பதில் சொன்னாலும், ஷணு முகம் நாணத்தில் சிவந்தது.

“ சரி அதை விடு, எனக்கு கிப்ட் வாங்கனும்னாவது தோணிச்சா உனக்கு? “

“ அது எல்லாம் வாங்கிட்டேன் “

“ எங்க???????????? ” சுற்றி சுற்றி அவன் தேட, அவள் அசடு வழிந்தபடி பதிலளித்தாள்.

“ ஹீ… ஹீ… ரூம்ல “

“ பத்தரமா வச்சுக்கோ மா.. “

“ சாரிங்க, நாளைக்கு தரேன் “

“ நாளைக்கு நீ ஃபைன்னோட ப்பே பண்ணனும் பேபி “ என்று மறுபடியும் அவளை சிவக்க வைத்தான்.

இந்த லவ்ஸை சற்று தள்ளி இருந்தபடி கண்ட மகி, ஹரி இருவர் முகத்திலும் ஒரு மென்னகை.

அதே சிரிப்புடன் மெல்ல திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்திருந்தனர். ஓரிரு நொடிகள் தான். அப்படியே ஜூம் அவுட் பண்ணி, அழகான கர்டன், மிதமான காத்து.. கூட ஒரு பேக் கிரவுண்ட் சாங் போடலாம்னு நினைக்கையில ,சட்டென தன்னிலை அடைந்து, அவர்களையும் இழுத்துக்கொண்டு இடத்தை காலி செய்தனர்.

னிய காலை அழகாய் விடிய, எல்லா சடங்குகளும் நேர்த்தியாக நடக்க, ஜம் என கிளம்பி உற்சாகத்துடன் கண்ணன் வந்திருக்க,  அவன் அருகில் தேவதையாக வந்தமர்ந்தாள் ஷண்மதி. அவன் பார்வை அவளை உரசி செல்ல, அதை உணர்த்தும் நிமிராது அமர்ந்திருந்தாள் அவள்.

" கெட்டிமேளம்!!! கெட்டிமேளம்!! " என்று ஐயர் சொல்ல, 'சொல்லிட்டாரே.. ' என்று இமான் மியூசிக் மைண்டில் ஓட,  காதலுடன் தன்னவள்  கழுத்தில் மங்கள நாணை அணிவித்தான் கண்ணன். இரு பக்க சொந்த பந்தங்களும்.. ”ரொம்பபப... ஹாப்பி அண்ணாச்சி !!!!"

அக்னியை சுற்றியபின், மாலை மாற்றும் சடங்கு அரங்கேறியது. கண்ணன் ஷணுவிற்கு மாலையிட அமைதியாய் நின்றிருந்த மக்கள், அடுத்து ஷணு முறை வர, அவனை குனிந்து மாலையை வாங்க கூடாதென்று ஸ்ட்ரிக்ட் ஆடரிட்டனர்.

" மாப்பிள்ள, கடைசி கடைசியா..பசங்க கெத்து காட்ட முடிஞ்ச ஒரே சான்ஸ் டா இது. மவனே, குனிய மட்டும் செய்த, மொத்த கும்பலும் சேர்ந்து கும்மாங்குத்து தான் உனக்கு... " என்ற நண்பர்கள் கூட்டம் சவுண்ட் விட, சிரிப்புடன் 'சரி' என்றான்.

அவள் இரண்டு மூன்று முறை மாலையிட முயன்றும், அவன் பின்னால் சாய அவளால் மாலையை போட முடியவில்லை. இது முடியாது என அறிந்தவள், சைலண்டாக சரண்டரானாள்.

'ப்ளீஸ்.. ', என்று அவள் கண்ணாலே கெஞ்ச, அதுக்கு மேல கண்ணன் விடுவானா என்ன?

" இப்போ நான் குனிஞ்சு மாலை வாங்கின தானே தப்பு.. இப்டி செய்யலாம்ல.. " என்று  ஒற்றை கால் மடக்கி முழந்தாழிட்டான்.

பெண் தோழிகள் எல்லாம் சேர்ந்து " ஓஹோஹோஹோ.. " என்று ஆர்பரிக்க, கண்ணனுக்கு மாலை அணிவித்தாள் ஷண்மதி. இப்படி ஒவ்வொரு நிகழ்வும் கலாட்டாவும் கோரசுமாக இனிதே நடந்தேறியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.