(Reading time: 21 - 41 minutes)

ப்பொழுது அவன் முறைக்க, " இதுக்கு போய் பீல் பண்லாமா எமோஷனல் ஏகாம்பிரம்.. கண்ணை தொடச்சுட்டு போய் பேக்-அப் பண்ற வழியா பாருங்கா. நான் வாரேன்.. ஏகா " என்று நகர்ந்தாள்.

சின்னதாய் ஒரு சிரிப்புடன் கண்ணனின் அறைக்கு ஹரி வர, அங்கு 'என்ன?' என்ற லுக்குடன் நின்றிருந்தான் ரவி.

அவன் ஊடுருவும் பார்வையை கண்டுக்கொள்ளாதது போல் அங்கிருந்த துணி போன்றவைகளை ஹரி பேக்-யில் திணிக்க, ரவி அசராமல் நின்றான்.

" டேய், ஹெல்ப் பண்ணுடா. அங்க இருக்க பேக்-ஐ  கொஞ்சம் எடு "

ரவியிடம் பதில் இன்றி போக,

" சரி, என்ன வேணும் உனக்கு இப்போ? "

" அப்படி வா வழிக்கு. நானும் இதை ரொம்ப நாளாய் கேக்கணும்னு இருந்தேன், இப்போ எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும்!! "

" என்ன உண்மை? " வேலை செய்து கொண்டே பதிலளித்தான் ஹரி.

" உனக்கும், மகதி பொண்ணுக்கும் சம்திங் சம்திங்கா ? "

" அடிங்க.. " என்று ஒரு மூட்டையை அவன் மீது ஹரி எரிய, அதை லாவகமாக பிடித்தவன்,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதலை எப்போது சொல்வேன் உன்னிடமே

படிக்க தவறாதீர்கள்... 

" நீ ஆல்ரெடி அவுட் சார். வாக்குமூலம் கொடுத்தா மட்டும் போதும் இப்போ "

" லூசாடா நீ, அப்டி எல்லாம் ஒன்னும் இல்ல "

“ எனக்கு உண்மை தெரியணும்னு சொன்னேன் ”

ஹரியை அழைத்து வருமாறு மகதியின் தந்தை சங்கரன் அவளை ஏவ, அவனை தேடி அந்த அறை வாசலை அடைந்திருந்தாள் அவள்.

ரவியை கன்வின்ஸ் செய்யும் நோக்கத்துடன் ஹரி, " உண்மைய தான்டா சொல்றேன். இன்னும் சொல்லணும்னா அவ மேல ஒரு வெறுப்பு தான் எப்பவும் எனக்கு. யார்க்கும் அடங்க மாட்ட. பத்தாததுக்கு அவ்ளோ செல்லம் வேற. சரியான இம்சை கேஸ். நைநைனு வெறுப்பேத்தி கடுப்ப கிளப்புவாள். அதுவும் கண்ணன் அப்டியே அவ என்ன சொன்னாலும் ஆமா போடுறவன். இது என்னை இன்னமும் கடுப்பாக்குற விஷயம். அவளை போய் நான் எப்படி லவ் பண்ணுவேன்னு நினைக்குற! அவளை எனக்கு சுத்தமா பிடிக்கவே பிடிக்காது. இன்னும் பெர்பெக்டா சொல்லணும்னா, மகதியை நான் ஆத்மார்த்தமாக வெறுக்கிறேன் ”

மூச்சுவிடாமல் சொல்லி முடித்தான் ஹரி.

அவளால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை.  இவள் மேல் இவனுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு? புரிந்துக்கொள்ள முடியவில்லை அவளால். ஏதோ தன்னை அழுத்துவதை போல ஓர் உணர்வு. ‘ஆனால், எனக்கு அவனை ரொம்ப பிடிக்குமே’ எடுத்துரைத்தது மனது. வலித்தது. ‘காரணம் இல்லாம, கண்ணீர் வேற வருதே’ என்று அதற்கும் தன்னையே நொந்தபடி அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

இதை எதையும் அறியாத ரவி ஹரியிடம்,

" என்னடா நீ,’அவ கண்ண பாத்து பேச பேச, அப்டியே இடியும் மின்னலும் அடிச்சு பிரிச்சு மேஞ்சுட்டு போயிருச்சு' இப்டி எதாவதுசொல்லுவனு பார்த்தால், இப்டி சொல்லிட்ட! "

" ஹீ.. ஹீ.. "

" என்ன இளிப்பு? "

" உண்மைய நினச்சேன் சிரிச்சேன் "

" ஐ யம் யுவர் பேஸ்ட் ப்ரெண்ட், என்கிட்டே சொல்ல கூடாதா? "

" அதும் ஒன்னும் இல்ல டா, அவளை கட்டினா இடி மின்னல் இல்ல, அவளே அடிச்சு பிரிச்சு மேஞ்சுட்டு போயிடுவா. அதை நினைச்சேன் சிரிச்சேன் "

" ஹா..ஹா.. "

" இப்போ நீ என்ன சிரிக்குற? "

" ஒன்னும் இல்ல, விடுடா. சொன்னா அடிப்ப "

“ நீ சொல்லலைனாலும் அடிப்பேன். மவனே, ஒழுங்க சொல்லிடு "

" அது ஒன்றும் இல்லை ஹரி கிருஷ்ணன் அவர்களே, தங்கள் கற்பனை குதிரையில் நீங்கள் விரைந்து சென்று கண்ட காட்சியில், பிரித்து மேயப்படும் ஆளாய் நீங்கள் உங்களையே தான் கண்டு இருப்பீர்கள் என்பதை உணர்ந்து சிரித்தேன் "

'அட ஆமாவாச்சே.. இதை சொன்ன இன்னும் ஒரு மணி நேரம் வச்சு செய்வனே..  ஓ காட், சமாளிப்போம்' என்று எண்ணிய ஹரி,

" மங்குனி அமைச்சரே, தங்கள் கூற்றில் சற்றும் உண்மை இல்லை. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் " என்றான்.

அவனை நம்பாத ரவியோ,  " ஆஹான், செல்லாது செல்லாது.. ஒப்ஜக்ஷன் ஓவர் ரூல்  "

" அடிங்க சொல்லிகிட்டே இருக்கேன், நீ நிறுத்தாம பேசுற!!! தூக்கி அடிச்சுடுவேன் பாத்துக்க!! "

" பாருங்க மக்களே, உண்மைய சொன்னால் அடிக்க வராங்க! நல்லதுக்கே காலம் இல்ல. நீ செய்தாலும் செய்வடா. பட், உன் லவ்ஸ்டோரிக்கு நான் ஏன் மேன் சாகனும். எனக்கு நிறைய கடமை பாக்கியிருக்கு " என்று ரவி ஓட தொடங்க,

" சொல்லிகிட்டே இருக்கேன், மறுபடியும் லவ் ஸ்டோரியா??? மவனே உன் சாவு என் கைல தான் " என்று அவனை துரத்திச் சென்றான் ஹரி.

It hurts so much

not to have you by my side,

not to be around you,

not to be with you.

You are the pain that I won’t give up.

சண்டைகள் தொடரும்

Episode 04

Episode 06

{kunena_discuss:954}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.