(Reading time: 21 - 41 minutes)

" ண்ணா, இந்த பக்கம் சாம்பார் கொண்டுவாங்க..", " எப்படி இருக்கீங்க ஆச்சி ? ", " அத்தை சாப்ட வாங்க..", " குட்டி இன்னும் கொஞ்சம் சாப்பாடு வைக்க சொல்லவா? "

இப்படி விழுந்து விழுந்து வந்திருந்தவர்களை கவனித்தவாறே, கொஞ்சம் (வெட்டி ;) ) பந்தாவோட வேட்டி கட்டிக்கிட்டு சுத்தி சுத்தி  ஹரி வலம்வர, இதுவர கட்டி பழக்கமில்லாத பட்டு புடைவைய உடுத்தி, அதை கட்டி  காப்பாத்திகிட்டே சுத்திகிட்டு இருந்தாள் மகி.

ரெண்டு பேரும் படு பிஸி , அப்படிதான் காமிச்சுகிட்டாங்க. தற்செயலாக இருவரும் சந்தித்துக் கொண்ட போதும், கண்டும் காணாத போல ஒரு பாவனையுடன் விலகி சென்றனர்.

இதற்கு இடையில், ஹரியின் தந்தை வழி உறவில் ஒரு பெரியம்மா அவனை அழைத்து,

" யாருடா அந்த வைலட் சாரி பொண்ணு, உன் அம்மா வழி உறவா? " என்று விசாரிக்க,

அவனும் அந்த பெண்ணை பார்த்தவாரே கொஞ்சமாக ரசித்து, " ஆமா பெரியம்மா, அவ மகதி, அம்மாவோட தம்பி பொண்ணு " என்றான்.

" ஓ.. " என்றவர் திரும்பி தான் கணவரிடம், " லக்ஷணமா இருக்குங்க பொண்ணு .. " என,

ஹரி மனம் அவன் கண்ட்ரோலை மீறி 'ஆமா!! ஆமா!!' என்றது.

( சைட் அடிக்குறியா?? தப்பு!! தப்பு!! )

அடுத்து அவர், " இந்த பொண்ணை நம்ம பையனுக்கு பார்த்தா என்ன? " என்று சொல்ல, திக் என்றது ஹரிக்கு. கடுப்பானவன் இடத்தை காலி செய்தான். பாவம் அந்த பெரியம்மாக்கு.. வடை, கேசரி கட். :P

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

கிருத்திகாவின் "வசந்த காலம்" - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

முக்கியமான ஒருத்தரை சொல்லாம விட்டேன் பாருங்க. நம்ம ஹரியோட உயிர் தோழன் ரவி. எல்லா வேலைக்கும் ரெண்டு பேரும் ஒன்னா தான் போவாங்கலாம். ஹரி, " அண்ணா, அங்க என்ன சத்தம்? " அப்படினு கேட்டால், பின்னாடியே ரவியும் " அட ஆமா.. அண்ணா, அங்க என்ன சத்தம்? " அப்படினு கேட்பான். இது வைஸ்- வெர்ஸா எபக்ட்.

ஒண்ணுக்குள்ள ஒன்னு, உற்ற நண்பன் இப்படியும் இவங்கள சொல்லிக்கலாம். சென்னைல இன்ஜினியரிங் படிக்குற பிள்ளை, லீவ் போட்டு வந்திருந்தான். ஸோ, ஹரி இஸ் கொஞ்சம் பிஸி வித் ரவி.

நேரமாக ஆக, கல்யாணத்திற்கு வந்தவர்கள் வீடு திரும்பினர். கல்யாண வீட்டின் பரபரப்பு சற்று அடங்கியது. நெருங்கிய சொந்தங்கள் மட்டும் ஆங்காங்கே அமர்ந்து பல வருட கதைகள் பேச, அங்கும் இங்குமாய் பிள்ளைகள் ஓடி விளையாடி கொண்டிருந்தனர். ஒரு பக்கம், குடும்பம் குடும்பமாக மணமக்களுடன் நின்று போட்டோகள் எடுத்துக்கொள்ள, எல்லோர் முகத்திலும் ஒரு நிறைவு. 

மணமக்களும் உணவுண்ட பின்னர், அவர்களை நடுவில் உட்கார வைத்து, கலாய்த்து தீர்த்துவிட்டனர் அவர்களின் நண்பர்கள் குழு. ஒரு ஆளையும் சும்மா விடாமல் இழுத்து வைத்து, முகத்தை அஷ்டகோணலாக்கி, நவரசம் சாம்பார் கூட்டு என காட்டி நூற்றுகணக்கில் செல்பிகளும் எடுக்கப்பட்டன. நேரம் ரெக்கை கட்டி பறக்க, ஷண்மதி கண்ணனுடன் கிளம்ப வேண்டிய நேரம் நெருங்கியது. இல்லாத வேலைகளை எல்லாம் இழுத்து போட்டு செய்ய முயன்றுக் கொண்டிருந்தார் தில்லைராஜன். தன் செல்ல மகளை பிரிய போகிறோம் என்ற உணர்வு. அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது டென்சன்.

கண்கள் குளமாக, தாய் கையை பிடித்தபடி நின்றாள் ஷண்மதி. அவளால் தந்தையை நிமிர்ந்தும் பார்க்க முடியவில்லை. வாசலை அடைந்ததும், தானாக நகர்ந்து தில்லைராஜன் தோளில் சாந்துகொள்ள, அவர் கண்களும் கலங்கின. அவரின் மனநிலையை எல்லோராலும் புரிந்துக்கொள்ள முடிந்தது.

சூழ்நிலையை லகுவாக்க எண்ணிய கண்ணன்,

" என்ன மாமா, இந்த சீன்ல 'என் பொண்ணு, கண்ணு கலங்கிச்சு, சுட்டுடுவேன் ' இப்டி ஒரு பன்ச் எதிர்பார்த்தா, ஒரே கண்ணு வேர்த்திங் சீன்-அ  இருக்கு. உண்மையா நான் தானே தலைக்கு மேல கத்தியோடு வாழ, என் அம்மா மேல சாய்ந்து அழணும். என்ன மம்மி நான் சொல்றது!! " என்று மகேஸ்வரி மேல் சாய்ந்தபடி நின்று கொண்டான்.

அவன் சொன்ன கத்திக்கு முறைத்தாலும், கண்டினு செய்யமுடியாமல் தந்தையும் மகளும் சிரிக்க, அப்பொழுது தான் அத்தையின் அருகில் நின்ற ஹரியை கவனித்தாள் மகதி.

நடந்த எமோஷனல் சீனில் அதிகம் பாதிக்கப்பட்டது அவன் தான். தில்லைராஜனை பார்த்தபடி நின்றிருந்தவன் கண்களும் கலங்கியிருந்தன. பையன், ரொம்ப பீல் ஆயிட்டாபுல..

ஒருபக்கம் அவர் கண்களை துடைக்க, பின்னால் ஹரியும் கண்களை துடைக்க, பார்த்த மகதிக்கு சிரிப்பை கண்ட்ரோல் செய்ய முடியாமல் சிரித்துவிட்டாள்.

( இவ்ளோ நாள் கட்டி காப்பாத்தின கெத்து எல்லாம் பொத்துன்னு போச்சே பாஸ்!!!.. )

அவள் பார்வையை உணர்ந்து திரும்பிய ரவியும், இந்த கண்கொள்ளா காட்சியை பார்த்து சிரிக்க, அப்புறம் என்ன! மொத்த குடும்பமும் சுற்றமும் நட்பும் வச்சு கலாய்ச்சுட்டாங்க.

ஒரு வழியாக அவர்கள் எல்லாம் நகர, மெதுவாக அவன் அருகில் வந்தாள் மகதி. கையைக் காட்டிய படி நின்றவள் முகத்தில் குறும்பு கூத்தாடியது. 'முகத்தை மட்டும் விறப்பா வச்சுக்க வேண்டியது, உள்ளுக்குள்ள குட்டி பாப்பா போலாவே' என்று எண்ணியவள்,

“ லாலே லாலலி லாலா... ஹோ...

 லாலே லாலலி லாலா... ஹோ... “

அவன் தலையில் அடித்துக் கொள்ள, அவள்

" ச்சோ.... சுவீட்ட்ட அத்த்தத்த்தான். இம்புட்டு நல்லவனா நீ.!!!. தெரியாம போச்சே எனக்கு ! “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.