(Reading time: 19 - 38 minutes)

ம்மா… அங்க பாரு… யார் வந்திருக்கான்னு…” என பிரசுதியிடம் அவள் கை காட்ட,

ஓடிச்சென்று அவரை வரவேற்றார் பிரசுதி… தட்சேஷ்வரும் சோமநாதனும் எழுந்து சென்று அவரிடம் ஆசீர்வாதம் வாங்க, இஷானும் ஜெய்யும் எழுந்து கொள்ள முயற்சித்த போது அவர் கையமர்த்தி தடுத்துவிட்டு, சபையில் வந்தமர்ந்தார் சதியின் அருகே…

“என்னம்மா?... நீ சொன்ன மாதிரியே வந்துட்டேனா?..” என அவர் கேட்டதும்,

“இப்போதான் தாத்தா நீங்க குட் பாய்…” என அவரின் கைபிடித்து குலுக்கினாள் சதி…

“எப்படி மாமா?... நீங்க இங்க.. திடீர்னு… என்னால நம்பவே முடியலை…” என பிரசுதி தன் ஆச்சரியத்தினை வெளிப்படுத்த,

“அம்மா… நான் தான் சொன்னேன்ல… உன் மாமா கண்டிப்பா இங்க வருவாருன்னு…” என புருவத்தை உயர்த்தியவளிடம்,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

“அதுதாண்டி எனக்கும் ஆச்சரியமா இருக்கு… எப்படி வரவைச்ச மாமாவ நீ?.. அவர்கிட்ட எப்படி பேசின நீ?..” என தன் கேள்விகளை பிரசுதி முன்வைக்க,

“பின்ன இந்த தட்சேஷ்வரோட பொண்ணை என்ன நினைச்ச நீ?... என் அப்பாவை வர வைச்சாளா இல்லையா?...” என சொல்லி அவர் பெருமைப்பட,

“போதும் போதும் உங்க மக புராணம்… மாமா அவகிட்ட மட்டும் தான் பேசுறார் ஊருக்கு போனாலும்… அது எனக்கும் நல்லா தெரியும்…” என பிரசுதியும் முறைப்புடன் சொல்ல,

“என் பொண்ணு என்னைப் போல என் அப்பாக்கும் உயிர் தான்னு உனக்கு தெரிஞ்சா சரி…” என மனைவியிடத்தில் கூறியவர்,

“அப்படித்தானேப்பா…” என தந்தை பிரம்மரிஷியிடமும் கேட்க, அவரின் பார்வையோ ஜெய்யை வந்தடைந்தது…  

நீண்ட முடியும், தாடியும், கழுத்தில் ருத்திராட்சமும், நெற்றியில் விபூதியும் காவி நிற உடையுமாக தோற்றத்தில் ஒரு மகானைப் போன்று இருந்தவரை பார்த்ததும், தானாகவே ஜெய்யின் கைகள் அவரை வணங்க, அவரும் பதிலுக்கு கைகுவித்தார்…

அவரை பார்த்ததும், மனதினுள் ஏதோ ஒரு உணர்வு எட்டிப்பார்க்க, அதை எப்படி எடுத்துக்கொள்ள என தெரியாத மன நிலையில் இருந்தான் ஜெய்…

மெல்ல தட்சேஷ்வரிடம், “உயிர்தான்… ஆனால் அது சாதாரண உயிரல்ல…” என சதியை ஒருபார்வை பார்த்தவர், பின் “எல்லாம் வல்ல அந்த ஈசனோட உயிர்… அக்னிஜூவாலையாக கொழுந்துவிட்டெரியும் உயிர்…” என ஜெய்யைப் பார்த்து முடிக்க, அவன் உடம்பில் ஓர் அதிர்வு பட்டென தோன்றி மறைந்தது…

“என்ன சொல்லுறீங்கப்பா… எனக்கு புரியலை…” என கண்கள் இடுங்க கேட்ட மகனிடம்,

“புரியவேண்டியவர்களுக்கு புரிந்திருக்கும்… புரியாவிட்டாலும் விரைவிலேயே புரியும்…” என அவர் இப்போதும் ஜெய்யைப் பார்த்து கூற,

இம்முறையும் ஜெய்யிடம் ஓர் புரியாத உணர்வு பரவியது…

“நல்லநேரம் முடியபோகுதுப்பா… நாம ஆரம்பிக்கலாமா?..”

“ஆமா மாமா… அவர் சொல்லுற மாதிரி நேரம் போயிட்டே இருக்கு… உங்க கையால தட்டை எடுத்து கொடுங்க மாமா…”

மகனும், மருமகளும் சொன்னதை காதில் வாங்கிக்கொண்டு பிரம்மரிஷியும், தட்டை எடுத்து கொடுக்க, அனைவரின் முகத்திலும் சந்தோஷம் நிறைந்திருந்தது…

“அப்பா, கல்யாணத்தை எப்போ வச்சிக்கலாம்னு சொன்னீங்கன்னா அதுக்கு தகுந்த மாதிரி நாளும் குறிச்சிடலாம்…”

“நல்ல நாள் பார்த்து நானே சொல்லுறேன்… அதுவரை கொஞ்சம் பொறுமையா இருங்க எல்லாரும்…” என அவர் சொன்னதும், சின்ன சலசலப்பு அங்கே உருவானது…

“என்ன தாத்தா?... இப்படி சொல்லிட்டீங்க?... பாவம் அண்ணன்… அவன் முகமே வாடிப்போச்சு… சீக்கிரம் தைஜூவை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்னு பார்த்தா நீங்க இப்படி சொல்லிட்டீங்களே…” என சதி முகம் தூக்கி வைத்துக்கொள்ள,

“தாத்தா எது சொன்னாலும் அதுல ஒரு காரணம் இருக்கும்னு உனக்கு தெரியும்தானே…” என அவர் கேட்டதும்,

“ஆமாம்…” என்பது போல் தலைஅசைத்தாள் அவள்…

“நீங்க எல்லாரும் நினைக்குறது புரியுது… ஆனா சில நல்ல விஷயங்கள் நடக்குறதுக்கு நேரமும் காலமும் ஒத்துவரணும்… அது ஒண்ணுகூடி வருவதற்காக நாம காத்திருக்கிறது தப்பில்லை என்பது என் கருத்து…” என அவர் சொல்லியதும்

“நீங்க சொன்னா சரியாதான் மாமா இருக்கும்…” என பிரசுதி கூற,

காதம்பரியும், சிதம்பரமும், “பெரியவர் அவர் சொல்லுறதும் சின்னஞ்சிறுசுங்க நல்லதுக்குத்தான்… அதனால அவர் சொல்லுற நாளிலேயே கல்யாணத்தை வச்சிக்கலாம்… எங்களுக்கு பரிபூரண சம்மதம்…” என சொல்ல, தட்சேஷ்வரின் முகத்தில் புன்னகை வந்திருந்தது…

“நல்ல வேளை அண்ணா… நீங்க என்ன சொல்லுவீங்களோன்னு நினைச்சிட்டிருந்தேன்… ஆனா இப்போ அந்த கவலை எல்லாம் இல்லை… ரொம்ப சந்தோஷம் மட்டும் தான்…” என பிரசுதி சிரிக்க,

“பின்ன நீயும் நானும் சம்மந்தி ஆகிட்டோமே…” என காதம்பரியும் தன் தோழியின் சிரிப்பில் கலந்து கொள்ள, நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்த திருப்தியுடன் வந்திருந்த சொந்தங்களை சாப்பிட அழைத்துச் சென்றனர் பெண்ணைப் பெற்றவர்களும், பையனை பெற்றவர்களும்… வந்திருந்த சொந்தங்கள் அனைவரும் சென்றுவிட, சிதம்பரம், சோமநாதன், தட்சேஷ்வர் மூவரும் ஹாலில் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருக்க, கிட்சனில் காதம்பரியும், பிரசுதியும், வந்திருந்த சொந்தங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்க, இஷான் ஜெய்யிடத்தில் கொஞ்ச நேரத்தில் வருவதாய் சொல்லிவிட்டு, மெல்ல யாருக்கும் தெரியாமல் மாடிக்குச் சென்றான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.