(Reading time: 19 - 37 minutes)

பிறந்த வீடோ..புகுந்தவீடோ அக்குடும்பத்தை சார்ந்த பெண்ணே அக்குடும்பத்தின் பெருமைக்கோ அல்லது இழிவிற்கோ காரணமாகிறாள்.ஆண்கள் செய்யும் தவறுகள் சமூகத்தில் பெரிது படுத்தப் படுவதில்லை.ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணே அக்குடுபப் பெருமைக்குக் காரணமாகிறாள் என்றால் ஒரு நாட்டின் இளவரசிக்கு எத்தகைய பொறுப்பு அவசியமாகிறது?அவள் செய்யும் தவறு அரச குடும்ப வரலாற்றில் இடம் பெறாதா?துடைக்க முடியாத களங்கமாகி விடாதா?இப்போது சொல் சுசீ..மதி இப்பாண்டிய நாட்டின் இளவரசி இல்லையா?இவள் செய்யப் போகும் தவறு பாண்டியனாட்டின் வருங்கால வரலாற்றின் பக்கக்கங்களில் கரும் புள்ளியாய் விழுந்து விடாதா?சாதாரணக் குடும்பத்துப் பெண்களைவிட ஒரு நாட்டின் இளவரசிக்குக் காதலிக்கும் உரிமை மிகக் குறைவு.தன் நாட்டின் நன்மைக்காக அதன் பெருமையைப் பேணுதற்காக அவர்கள் தம் காதலைத் தியாகம் செய்ய நேரிட்டால் அதனைச் செய்ய அவர்கள் சிறிதும் தயங்கக்கூடாது.அவர்களின் சொந்த நலனைவிட நாட்டின் பெருமையே அவர்களுக்குத் தலையாயது...ஆனால் அனைத்தும் அறிந்த மதி இப்படி மதிகெட்டு

நடந்துகொள்ளத் துணிவது என்ன காரணம் பற்றி எனத் தெரியவில்லை.அவளின் ஜாதக அமைப்பா?அன்றி அவளின் விதியின் விளையாட்டா?..

சுசீயிடமிருந்து ஒரு நீண்ட பெருமூச்சொன்று வெளிவந்தது.

எது நடக்குமோ அது நடந்தே தீரும்..நான் கிளம்புகிறேன் மகாராணி...இளவரசியை தங்கள் சித்தப்படி அழைத்து வந்து விடுகிறேன்..அதற்கு முன் ஒரு சின்ன விண்ணப்பம் மகாராணி..

விண்ணப்பமா..?என்ன அது சுசீ..?

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்... 

மகாராணி..தனக்கும் குப்த இளவரசருக்கும் பல வழிகளில் உதவும் அந்த முக்கியமானவர் யார்? என்று அறிய விரும்புவதாகவும் அவரைக் காணவேண்டும் அவருக்கு தங்கள் இருவரின் நன்றியையும் தெரிவிக்க வேண்டும் என்றும் பல முறை இளவரசி என்னிடம் வற்புறுத்திக் கேட்டுள்ளார்.இனி மீண்டும் உங்களை அவரோ அவரை நீங்களோ காணப் போவதில்லை..எனவே ஒரே ஒருமுறை உங்களை அவர் கடைசியாய்க் காண... தங்களுக்கு உதவியது தனது தாய்தான் என்பதை அறிய ஒரு சந்தர்பம் தருவீர்களா மகாராணி..?

இல்லை முடியாது சுசீ..நான் அவள் கண்களில் படாதவாறு முகத்தை மூடி ஒளிந்துதான் நிற்பேன்.என்னால் மதியைக் காண முடியும்.ஆனால் அவளால் என்னைப் பார்க்க முடியாது...பெற்ற மனது மகளைக் கடைசியாய்க் காணத் துடிக்கிறது.ஆனால் அவள் பெற்றவளைக் காணவேண்டுமென உன்னிடம் கேட்கவில்லையே?தங்களுக்கு உதவியவரைக் காணவேண்டுமெனத் தானே கேட்டாள்..?....தந்தை,தாய், உடன் பிறந்த தம்பி யாரையுமே கடைசியாய்க் காணவேண்டுமெனத் துடிக்காத அவள் பாசமற்ற அவள் என்னைப் பார்க்க நான் அனுமதியேன் சுசீ....

மகாராணி..தாங்கள் சொல்வது முற்றிலும் நியாயமானதுதான்...ஆனாலும் எனது கடைசி ஆசையாய் இதனை எண்ணி ஒரு முறை ஒரே முறை நொடிப்பொழுது தங்கள் முகத்தை இளவரசியிடம் காட்டவேண்டும்..என் இறுதி ஆசையை நிறைவேற்றுவீர்களா மகாராணி...?குரல் தழுதழுக்க கெஞ்சினாள் சுசீ..

........................

மகாராணி ருக்மா பதில் ஏதும் சொல்லாததால்..சரி மகாராணி தங்கள் உசிதம் போல் செய்யுங்கள் என்றபடி அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.அவ்வாறு நகரும்போது  மீண்டும் இவ்விடம் நாம் வரப்போவதில்லை இதுவே கடைசியாய் இவ்விடத்தைப் பார்ப்பது என்று நினைத்தபடி அவ்வறையை விட்டு வெளியேறும் போது தலை சுற்றுவது போல் உணர்ந்தாள்.வயிற்றில் கடும் வலி.

ராணி ருக்மாவுக்கும் இதே நிலைதான். தலையைச் சுற்றியது.வயிறு பொருமியது.வயிற்றைத் திருகித்திருகி வலித்தது.

ளவரசி மதியின் அறை.இளவரசிக்கே உரிய எவ்வித இலக்கணமுமின்றி வெகு சாதாரணமாக மிக எளிமையாக இருந்தாள் மதி.என்னதான் ஹஸ்தனோடு தான் விரும்பியவனோடு சென்றுவிடும் பிடிவாதத்தோடு உறுதியோடு இருந்தாலும் அவளும் பெண்தானே?மனம் நிலைகொள்ளாமல் தவித்தது.

கண்களில் படும் ஒவ்வொரு பொருளும் ஒரு கதை சொல்லிற்று அதற்கும் அவளுக்குமான உறவை எடுத்துச் சொல்லி.சாதாரண ஜடப் பொருள்களே அவளுடனான உறவைச் சொல்லும் போது என்னைவிட்டு நீ பிரிகிறாயா?என்று கேட்காமல் கேட்கும் போது உயிரும் சதையும் ரத்தமும் கொடுத்த பெற்றவர்கள் என் பிரிவை எண்ணி எப்படித் தவிப்பார்கள்?சொல்லாமல் கொள்ளாமல் இரவோடிரவாக பிரிந்து செல்லும் நான் எத்தகைய துரோகத்தை அவர்களுக்குச் செய்கிறேன்?சதா அக்கா அக்கா என எனையே சுற்றிவந்த தம்பிக்குமல்லவா நான் துரோகம் செய்கிறேன்?...

இல்லை இல்லை நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை...என் மனம் ஹஸ்தனை விரும்புகிறது... இப்போது அவர் என் காதலர் மட்டுமல்ல கணவரும் கூட..ஹஸ்தனை நான் விரும்புவதாகச் சொன்னால் என் தந்தையாகிய மன்னர் என்னை அவருக்கு மணமுடித்து வைத்துவிடுவாரா என்ன?ஹஸ்தன் சோழ இளவரசனைக் கொன்றவன் என்பார்...விசாரணைக் கைதி என்பார்..மரண தண்டனை விதிக்கப் பட்ட ஒருவன் என்பார்..கொடுங் குற்றவாளி என்பார்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.