(Reading time: 19 - 37 minutes)

வன் எங்கிருந்தோ வந்தவன்..வேற்று மொழியாளன்..பழக்க வழக்கங்களில் வேறு பட்டவன் என்றெல்லாம் சொல்லி ஹஸ்தனை நிராகரிப்பார்.என்னை அக்கம்பக்கத்து நாட்டு இளவரசர்களில் ஒருவனை மணந்து கொள்ள வற்புறுத்துவார்.அவர் மன்னர்.அவருக்கு நாடும் நாட்டின் பெருமையும்தான் முக்கியம்.ஆனால் நான் ஒரு பெண்.என்னதான் இளவரசியாய் இருந்தாலும் நானும் ஒரு பெண்தானே.விருபியவனை மணந்துகொண்டு அவனோடு இணைந்து இசைந்து வாழ்வதையே என் மனம் விரும்புகிறது.ஹஸ்தன் ஒரு நாட்டின் இளவரசராய் இல்லாதிருந்து சாதாரணப் பிரஜையாய் இருந்திருந்தால் கூட அன்னிலையிலும் என் மனம் அவரை விரும்பியிருந்தால் அவரைத்தான் மணப்பேன்.அவரோடுதான் வாழ்வேன்.எனவே ஏ மனமே நீ அமைதி கொள் என்று தானே தன் மனதைச் சமாதானம் செய்தாள் மதி.தன் முடிவை நியாயப் படுத்திக் கொண்டாள்.

இளவரசி...சுசீயின் குரலைக்கேட்டு எழுந்தாள் மதி..

சுசீ...

செல்வோமா இளவரசி..கேட்கும் போதே தொண்டையை அடைத்தது சுசீக்கு...

ம்.....

இருவருமாய் சுரங்கப்பாதை நோக்கி நடக்கும் போது இரவு நடுனிசியைத் தொட்டிருந்தது.இவர்கள் சுரங்கப்பாதையை அடைவதற்கும் காளி ஹஸ்தனோடு அவ்விடம் வந்து சேர்வதற்கும் சரியாய் இருந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

சன்னமாய் எரிந்து கொண்டிருந்த தீவட்டி தந்த வெளிச்சத்தில் முன்னே காளியும் அவன் பின்னால் ஹஸ்தனும் அவனின் பின்னால் மதியும் அம்மூவருக்கும் பின்னால் கடைசியாய் சுசீயும் சுரங்கப்பாதையில் நடந்து கொண்டிருக்க குபுக் என்று அடிவயிற்றிலிருந்து கிளம்பி வாய்க்குள் வந்த திரவம் சுசீயின் உதட்டை நனைக்க விரலால் தொட்டுப்பார்த்தாள் சுசீ.பிசுபிசுத்த விரலை தீவட்டியின் வெளிச்சத்தில் பார்த்தவளுக்கு அது ரத்தம் எனப் புரிந்து போயிற்று.உடல் தள்ளாடியது.மெல்ல சுவற்றைப்பிடித்தபடி நடந்தாள்.வயிற்றில் வலி தீவிரமாகியது.வைரக்கண்ணாடித் துகள்கள் வயிற்றில் உள்ள மெல்லிய குடல்களில் பதிந்து துளையிட்டு அறுத்து ரத்தக்கசிவை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டதை உணர்ந்தாள் சுசீ.

ஆயிற்று இன்னும் சற்று நேரத்தில் எல்லாம் முடிந்து விடும்.அதற்குள் மகாராணியின் கட்டளையை நிறைவேற்றி விட வேண்டும்.அதுவரை உயிரோடு இருக்க வேண்டும் என்று நினைத்தாள் சுசீ.

சுரங்கப்பாதை முடியும் இடத்தில் இருந்த வட்டமான கதவைத் திறந்தான் காளி.வெளிக்கார்று குபீரென உள்ளே னுழைந்தது.காற்றின் வேகத்தில் சன்னமாய் எரிந்து கொண்டிருந்த் தீவட்டி அணைந்து போயிற்று.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிக்காற்றை சுவாசித்தான் ஹஸ்தன்.வெட்ட வெளியில் கால் வைத்தபோது உடல் சிலிர்த்தது அவனுக்கு.

வானில் பால் போன்ற நிலவு.அங்கே நடக்கப் போகும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் காணப்போகும் சாட்சியாய்...அப்போது குதிரை ஒன்று ஓடி வந்தது ஹஸ்தனிடம்...அளவில்லா மகிழ்ச்சியுடன் அவனை முகர்ந்து முகர்ந்து பார்த்தது.தலையால் அவனை செல்லமாய் முட்டி முட்டி சின்னதாய்க் கனைத்தது.

ஹஸ்தனுக்குத் தாங்கமுடியாத மகிழ்ச்சி வியப்பு.ஆம் அது அவனுடைய குதிரை.அதனிடம் அவனுக்கும் அதனுக்கும் மட்டுமே தெரிந்த பாஷையில் ஏதோ அவன் சொல்ல சந்தோஷ மிகுதியில் அவனைச் சுற்றிச் சுற்றிவந்தது. 

குப்த இளவரசே நேரமாகிவிட்டது..கிளம்புங்கள்...காளி சொல்ல...

ஆம் இளவரசி..கிளம்புங்கள்...சுசீ மதியிடம் சொல்ல..

மதி..நீங்கள் முதலில் குதிரையில் ஏறுங்கள்...ஹஸ்தன் மதியின் கரம்பிடித்து அருகே அழைத்து அவளின் இடுப்பைப் பிடித்து குதிரை மீது ஏற்றி அமரவைத்தான்.மதி ஒன்றும் குதிரை ஏற்றம் யானை ஏற்றம் அறியாதவள் இல்லை.ஆனாலும் அவள் மனது ஓர் நிலையில் இல்லாததால் எதுவும் செய்ய இயலாமல் இருந்தாள்.குதிரை மீது அமர்ந்தவள் சுசீ..என்று அழைத்தாள்.அப்படி அழைத்தபோது அவளிடமிருந்து கேவல் வெடித்துச் சிதற சப்தமாய் அழ ஆரம்பித்தாள்.தானும் மதியின் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டான் ஹஸ்தன்.

இவை அனைத்தையும் இருட்டான பகுதியில் ஒளிந்து நின்றபடி பார்த்துக்கொண்டிருந்த மகாராணியின் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தோடியது.தாய்பாசத்தால் அந்தத் தாயின் மனது தவித்தது.கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் வாயிலிருந்து வழிந்த ரத்தத்தோடு கலந்து அவர் மார்பை நனைத்தது.வாய்விட்டு அழாமல் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டார் ருக்மாதேவி.மயக்கம் வரும் போல் இருந்தது அவருக்கு.கால்கள் நிற்கும் சக்தியை இழந்தன.கண்கள் மசமசத்தன.ஆனாலும் உறுதியாய் நின்றார்.

சுசீ இளவரசியின் அழைப்பைக் கேட்டு இளவரசி மதி அமர்ந்திருந்த குதிரையின் அருகில் சென்றாள்.

சுசீ..என்றபடியே அவளின் கைகளைப் பற்றிக்கொண்டாள் மதி.சுசீ நீ செய்த உதவிகளை என்னால் மறக்கவே முடியாது..இனி உன்னை நான் சந்திப்பேனா என்று தெரியவில்லை.நான் செல்கிறேன் சுசீ..என் உயிர் உள்ளவரை உனை மறவேன் சுசீ...நா தழுதழுக்க சொன்ன இளவரசியைப் பார்க்கவோ பேசவோ சக்தியற்று நின்றிருந்தாள் சுசீ.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.