(Reading time: 19 - 37 minutes)

திரும்பி நடந்த குதிரையின் மீது அமர்ந்திருந்த மன்னர் அதி வீரனால் துக்கம் தாள முடியவில்லை.மகளைப் பிரிந்த அவரால் மனதை சமனப் படுத்த முடியவில்லை.நெஞ்சு வலிப்பதை உணர்ந்தார் மன்னர்.நெஞ்சைப் பிடித்துக்கொண்டார்.வலி அதிகமாகி தோள் வரை பரவியது.னெஞ்சுக்குள் ஆழ்ந்தவலி.அந்த நிலவு ஒளிவீசும் குளிர்ந்த இரவிலும் அவருக்கு உடல் முழுதும் வியர்த்தது.திடீரென உடலின் இடது கை இடது காலும் முகமும் வெட்டி வெட்டி இழுபட்டன.வாய் கோணியது.அப்படியே குதிரையிலிருந்து கீழே விழுந்த மன்னரிடமிருந்து சிறு அசைவும் இல்லை.ஒரு சகாப்தம் முடிந்தது.

தந்தை குதிரையிலிருந்து வீழ்ந்ததைக்கண்ட சுந்தரன்..தந்தையே என்று அலறினான்.அடுத்த அலறல் அவனிடமிருந்து கிளம்பும் முன் ஒரு இரும்புக்கரம் அவன் வாயைப் பொத்தியது.அருகில் நின்ற குதிரைமீது அவன் ஏற்றப்பட்டான்.மயங்கிப்போனான் சுந்தரன்.

அல்லோலகல்லோலப் பட்டது அரண்மனை மட்டுமல்ல..பாண்டிய நாடே..மன்னர் அதிவீரனின் உயிரற்ற உடலும்,மகாராணி ருக்மா தேவியின் உயில்லா உடலும் அருகருகே கிடத்தப்பட்டிருக்க...இளவரசர் சுந்தரனைக் காணவில்லை என்பதும் இளவரசி மதி கொலைக் குற்றவாளி ஹஸ்தனுடன் நாட்டை விட்டுச் சென்று விட்டார் என்பதும் காட்டுத் தீபோல் எங்கும் வெகு வேகமாகப் பரவி எல்லையில் படையோடு நின்றிருந்த சோழனின் காதிலும் அவனுக்குத் துணையாக கூடவே வந்திருந்த சேரனின் காதிலும் விழவே.. அவர்கள் கைத்தட்டி ஆர்ப்பரித்து கெக்கொலிகொட்டிச் சிரித்து தடுக்க யாருமின்றி புயெலென உள்ளே நுழைந்தாரகள் பெரும் படையோடு.

அவர்கள் முழுவதுமாய் உள்ளே நுழைவதற்குள் அவசர அவசரமாய் எவ்வித அதிகபட்ச ஏற்பாடுகளுமின்றி மன்னர் மற்றும் ராணி ருக்மாவின் உடல்கள் பெற்ற பெண்ணின்றி..கொள்ளி வைக்க மகனின்றி தகனம் செய்யப்பட்டன.என்ன கொடுமை இது?இது இவர்களின் விதியா?மதியின் ஜாதகப் பலனா?

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

இப்படி மன்னரின் மற்றும் ராணியின் உடல்கள் தகனம் செய்யப் படவில்லை எனில் அவர்களின் உடல்கள் எதிரிகளின் கைகளில் சிக்கி எத்தகைய அசிங்கங்களைச் சந்திக்குமோ என்ற பயமே இந்த விரைவான தகனத்திற்குக் காரணமாய் அமைந்தது.

மன்னர் மற்றும் ராணியின் உடல்கள் தகனம் செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் இளவரசி மதியின் ஜாதகத்தைகணித்த இரு ஜோதிடர்கள்.ஜாதகம் கணித்த நால்வரில் இருவர் ஏற்கனவே இறந்து விட மிச்சமிருந்த இருவர் இவர்கள்.அவர்கள் முகம் முழுதும் துயரம் அப்பிக்கிடந்தது.

யாக்கிய வல்லரே..குற்ற உணர்வு தாங்க முடிய வில்லை...இவை அனைத்தும் இளவரசியின் பதினெட்டாம் அகவையில் நடக்குமென்பது அவர் பிறந்த போது அவரின் ஜாதகத்தைக் கணிக்கும் போதெ நம்மால் அறியப்பட்டதுதான்.அதை மறைத்து மன்னரிடம் இளவரசியின் ஜாதகத்தைப் பற்றி ஆஹா ஓஹோ என்று கூறி பொய் சொல்லி மன்னரை நம்ப வைத்தோம்.அதற்குக் காரணம் நாம் மன்னரிடம் வைத்திருந்த அளப்பரிய அன்பேதான்.அவர் மகளின் ஜாதகத்தின் பாதகங்களை எண்ணி எண்ணி வாழும் காலம் முழுதும் துயருரக் கூடாது என்பதற்காகவே அவரிடமிருந்து மறைத்தோம்.ஆனால் இளவரசியின் ஜாதகம் பற்றி அறிந்த நாம் அன்றிலிருந்து இன்றுவரை நெருப்பில் நிற்பதைப் போன்ற துன்பத்தைத்தானே அனுபவித்து வருகிறோம்.இளவரசியின் ஜாதகத்தால் பாண்டிய நாட்டிற்கும் அரச குடும்பத்திற்கு என்னென்ன தீங்குகள் நடக்குமென்று உள்ளதோ அவை அனைத்தும் ஒவ்வொன்றாய் நடக்க ஆரம்பித்து விட்டன...மனம் மிகவும் தாங்க முடியாத துயரத்தில் தவிக்கிறது..வல்லரே என்றார் சுகவனேஸ்வர ஜோதிடர்.

ஆம்..ஆம்..நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஜோதிடரே..மனம் துயரத்தால் கனக்கிறது.வாருங்கள் செல்வோம்.

இருவருமாய் வைகையாற்றை நோக்கி நடந்து கைகளைக் கோர்த்தபடி காட்டாற்று வெள்ளமென சுழித்து ஓடும் தண்ணீரின் ஆழப்பகுத்திக்குச் செல்ல வைகையாறு அவர்களை உள்வாங்கிக்கொண்டது.இனி அவர்களின் உடல்கள் எங்கு சென்று கரை ஒதுங்குமோ?

இனியும் பாண்டியனாடு சந்திக்கப் போகும் சோதனைகள் என்ன? அபரஞ்சிதாவின் தந்தை பெரிய மன்னர் மதிவதனியின் கதையை சொல்லி முடித்து விடுவாரா? குதிரைவீரன் என்ன செய்யப்போகிறான்? அனைத்தையும் அடுத்த அத்தியாயத்தில் பார்த்து முடித்துவிடுவோமா?

நன்றி...

தொடரும்...

Episode 21

Episode 23

{kunena_discuss:956}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.