(Reading time: 21 - 42 minutes)

 “ப்ப நாம இருக்ற ரூம் வர்ஷனோட பெர்சனல் ரூம்க்கு ஜஸ்ட் பின்னால இருக்குது….  வர்ஷன் தன் பெர்சனல் ரூம்லதான் கீழ அன்டர்க்ரவ்ண்ட் போறதுக்கு சீக்ரட்டா வழி வச்சுறுக்கான்…. அது அவன் கூட இருக்றவங்களுக்கு தெரிஞ்சு இருக்கு…..அது வழியா வந்து தான் அவன் ரூம் கப்யூட்டர யூஸ் செய்றாங்க….. இந்த வழி  யாருக்கும் தெரியலை போல…….எனக்கு புரிஞ்ச வரை அவன் அந்த அண்டர்கிரவ்ண்ட் சேம்பர்ல இருக்கனும்……..அங்க நான் அவனை தேடிப் போகப் போறேன்……என் கெஸ் கரெக்ட்னா….அங்க அவனும் அந்த காணாம பொண்ணும் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்……” அவன் யூகத்தை விளக்கியவன்

“இங்க தான் நான் போயிறுக்கேன்னு உனக்கு தெரியனும்னு கூட்டிட்டு வந்தேன் மனு…” மனைவியின் முகத்தைப் பார்த்தான் அவன்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - புத்தம் புதிய தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

 “ஏதாவது எமெர்ஜென்சின்னா மட்டும் என் டிபார்ட்மென்ட் பீபுள்க்கு  இந்த இடத்தை காண்பி நீ……” என்றபடி அந்த ரகசிய வழியை மூடியவன்

“நீ இப்ப கிளம்பு….ஜோசப் உன்னை சீக்ரெட்டா நான் ஏற்பாடு செய்து வச்சுறுக்க வீட்ல போய் விடுவார்….நீ எங்கயும் வெளிய வராத….மேக்சிமம் ஃப்யூ அவர்ஸ்தான் நான் திரும்பி  வந்துறுவேன்” அவன் சொல்லிக் கொண்டிருக்க….

மனோவோ அந்த அவளுருவ ரோபோடிக்டாயை மீண்டுமாய் அதற்கு முன் அது இருந்த கபோடிற்குள் கொண்டு போய் தள்ளி கதவை மூடினாள். அவளின் செயலில் அப்பட்ட பிடிவாதம் இருந்தது…..

அவன் வார்த்தைகளுக்கு எதிரான ஒரு முடிவுக்கு வந்திருக்கிறாள் அவள்  என காட்டியது அது.

அடுத்த இந்த அறைக் கதவை திறந்து கொண்டு அவளது அஃபீஷியல் அறைக்குள் நுழையப் போனவளை மித்ரனின் அழுத்தமான “மனு” தடுத்து நிறுத்தியது.

நின்று திரும்பிப் பார்த்தவளை பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வையில் இப்போது சற்று கெஞ்சல் ஏறியது…..

என்னை புரிஞ்சுகோயேன் என்ற விதமான கெஞ்சல்…….

இப்போது அவள் அஃபீஷியல் அறைக் கதவை திறந்திருந்தவள் மீண்டுமாய் அதை அழுத்தி மூடிவிட்டு இவனிடம் வந்த மனோ…

“லேப்ல எதுக்கு சீக்ரெட் சேம்பர்லாம் வைப்பாங்க தெரியுமா….?” அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.

“உள்ள வெறும் கான்ஃபிடென்ஷியல் டாகுமென்ட்ஸ் மட்டும் தான் இருக்கும்னு நினைக்காதீங்க….. எந்த ரிஸ்கான ரிசர்ச் கூட உள்ள நடக்கலாம்… ரொம்ப ஆபத்தான மைக்ரோ ஆர்கனிசத்த  கூட அங்க  பாதுகாத்து வச்சுறுப்பாங்க…” பதிலையும் தானே சொன்னாள் மனோ.

“வர்ஷன் அங்க தான மனு இருக்கான்…அப்டி ஒன்னும்….”  சொல்லிக் கொண்டு வந்ததை மித்ரனால் முடிக்க கூட முடியவில்லை…

‘விஜிலாவை தன்னை தேடி வர கூடாதுன்னு நினைச்சுறுக்கான் வர்ஷன்…எல்லோரை விட்டு ஓடி ஒளிஞ்சுறுக்கான்……உண்மையில் அவனுக்கு எதாவது ஆபத்தான மைக்ரோ ஆர்கனிச இன்ஃபெக்‌ஷன் ஏற்பட்டு இருக்குமோ…..???’ இப்படி ஒரு நினைவு மித்ரனின் மனதில் ஓட துவங்கியது….. ‘ஆனால் ஹாஃஸ்பிட்டல் போகாம இவன் இங்க என்ன செய்றான்???’

“பெரியத்தானுக்கும் பயாலஜிக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லைனாலும்….கூட இருக்க பொண்ணு ப்ராஜக்ட் ஹெட்னு சொல்றீங்க,….அவங்களுக்கு அண்டர் க்ரவ்ண்ட் லேப்ல எப்டி நடந்துகனும்னு நல்லா தெரிஞ்சிருக்கும்….ஆனா உங்களுக்கு அந்த டீடெய்ல்ஸ் எப்டி தெரியும்…..? அதான் நானும் கூட வர்றேன்….” மனோவின் இந்த பிடிவாதம் இப்போது மித்ரனுக்கு நியாயமாக பட்டது…. கூடவே மனோ போல பயாலஜிகல் ரிசர்ச் பற்றி அறிந்த ஒருவர் இவனோடு  வருவது அத்யாவசியம் என்றும் தோன்றியது…

“சரி இப்ப எப்டி உள்ள போகனும்னு சொல்லு மனு…” அடுத்து எந்த விவாதமும் செய்யாமல் ஒத்துக் கொண்டான்  மித்ரன்.

அடுத்த அரை மணி நேரத்தில், ரகசியமாக  லேப் சூட்ஃஸை கொண்டு வந்து, அதை இந்த அறையில் வைத்து அணிந்து கொண்டு…….அந்த ரொபோடிக் டாயை அடுத்த அஃபீஷியல் அறையில் உட்காரவிட்டு…….. அனைத்து கவனத்துடனும் அந்த அண்டர் க்ரவ்ண்ட் சேம்பருக்குள் நுழைந்தனர் மனோவும் மித்ரனும்….

முதலில் உள்ளே நுழயவும் கண்ணில் பட்டது கீழ் நோக்கி செங்குத்தாய் இறங்கும் படிகட்டுகள் தான்….ஆழமாய் குறுகலாய்…..அதுவும் சற்று இறங்கவும் வெளி வெளிச்சம் மறைய ஒரு வகையில் கும்மி இருட்டு….. வெகு வெகு ஆழமாய் இறங்கி….. அடுத்தும் முதலில் கணத்த கிரில் கதவையும்…..அடுத்து சுவரளவு தடித்த இரும்புக் கதவையும்……அடுத்து கடைசியாய் கண்ணாடி கதவையும் தாண்ட வேண்டி இருந்தது இவர்கள்….இப்பொழுது காரிடார்  போன்ற அந்த இடத்தில் வெளிச்சம்….

வரிசையாய் தெரிந்த பல அறைகள் மூடிக் கிடக்க,  ஒரு அறையில் இருந்து வெளிச்சம் வழிந்து கொண்டிருந்தது….

அதற்குள் நுழைந்தனர் இருவரும்….

உள்ளே…..

வர்ஷன் ஒரு கண்ணாடி பேழைக்குள் படுத்திருக்க……

அந்த கண்ணாடிப் பேழை இன்னொரு பேழைக்குள் வைக்கப் பட்டிருக்க…..

அதன் மேல் கொட்டுக் கொண்டிருந்தது நீர்…..

பார்த்த முதல் கணம் மிரண்டு போனாள் மனோ….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.