(Reading time: 21 - 42 minutes)

தன் பின் மனோ மற்றும் மித்ரனிடம் நிலமையை வர்ஷனின் வேண்டு கோளுக்கு இணங்க விளக்கினாள் அவள்…..மனோ அந்த ரிப்போர்ட்டில் படித்த அதே விஷயங்கள்தான்…

ஆனால் அடுத்தும் எதையோ சொல்ல சொல்லி வர்ஷன் வலி யுறுத்த…..முதலில் பிடிவாதமாய் மறுத்தவள்…..பின் வர்ஷனின் பிடிவாததால் அதையும் சொன்னாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷா லக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

உணர்ச்சி வசப்படும் போது தன் நிலையை இழக்கிறான் வர்ஷன் என்பதை இவர்கள் கண்டறிந்ததே...பயோசி பிஸினஸ் அனாலிஸ்ட் செய்த ஒரு தில்லு முல்லுவைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது உணர்ச்சி வசப்பட்டு மயங்கி விழுந்த வர்ஷன்……. அடுத்து விழித்து எழுந்து அவனை  கடித்து குதறிவிட்ட போதுதானாம்…..அதில் அந்த ஆள் இறந்து போனானாம்…..

சரண்டராகிறதுக்கு கூட வெளிய இருக்றது மத்தவங்களுக்கு ரிஸ்க்குன்னுதான் வர்ஷன் சார் இங்க வந்தது…. வர்ஷன் சாரோட இந்த இன்ஃபெக்க்ஷன் பத்தி தெரிஞ்ச ஒரே ஆள் நான்தான்…. அந்த வைரஸ் பத்தி ஸ்டடி செய்துகிட்டு இருக்றதும் என் லேப்ல தான்… இது மியூடன்ட்றதால இதைப் பத்தி தெரிஞ்சவங்க என்ன தவிர இப்போதைக்கு யாருமே இல்லைனு சொல்லலாம்…..ஆக இப்ப இதுக்காக ஹாஸ்பிட்டல் போறதும் வேஸ்ட்….லேப்தான் கொஞ்சமாவது ஹெல்ப் செய்ய முடியும்….

அதான் இது வரை அந்த வைரஃஸை பத்தி நாங்க கண்டுபிடிச்சுறுக்க விஷயங்களை வச்சு நானே வர்ஷன் சாரை ட்ரீட் செய்துட்டு இருக்கேன்….சைட்ல இன்னும் என்ன செய்யலாம்னு அந்த வைரஸை இன்னுமா தெரிஞ்சுக்க ட்ரைப் பண்ணிட்டு இருக்கேன்….

முதல்ல சார் ரெக்கவராகிடுவார்னு தோணிச்சு….ஆனா நாள் போக போக..எதோ அவரால யாருக்கும் எதுவும் ஆகிடக் கூடாதுன்னு பாதுகாக்கதான் இப்ப எல்லாம் செய்துட்டு இருக்கோம்….அவர்  கண்டிஷன் எத்தனை நாள் தாங்குமோ…?

அவங்க வைஃபை இந்த கண்டிஷன்ல பார்க்கிறது ரெண்டு பேருக்குமே நல்லது இல்ல…..வர்ஷன் சார் உணர்ச்சிவசப்பட்டா ரொம்பவும் ரிஸ்க்…..அவங்களை அட்டாக் செய்துடுவார்…..அதான் ஒரு சூழ்நிலையிலே நானே கூட அவங்க பேசுறதை டிஸ்கரேஜ் செய்ய விஜிலா மேடத்துட்ட எதையோ பேச வேண்டியதாகிட்டு…..

அடுத்தும் விஜிலா மேடத்தோட டெலிவரி நெருங்க நெருங்க சாரை இங்க கண்ட்ரோல்ல வைக்றது படு கஷ்டமாகிட்டு…. நான் மட்டும் தனியா வேற இருக்கனா…?...பக்கத்துல இருக்ற என்னையவே அட்டாக் செய்துடுவாரோன்னு  எனக்கு ரொம்பவே பயமாகிட்டு…..

மேடமை பார்த்திருந்தார்னா அடுத்து கண்டிப்பா யாரலயும் சாரை துடுத்துறுக்கவே முடியாது…..ஒரு வழியா தன் நிலையை புரிஞ்சுகிட்டு அப்பதான் வர்ஷன் சார் மேடத்துட்ட என்னைவிட்டு போயிடுன்ற மாதிரி என்னதையோ சொல்லி…… மீதி என்னனு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்….” லக்க்ஷணா விளக்க

அடுத்தும் அந்த லக்க்ஷணாவிடம் இந்த லேபில்….வர்ஷன் முன்னிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கேட்டு தெரிந்து கொண்ட மித்ரன்...... இயல்பு போல அந்த வைரஃஸ் ஆராய்சிகாக அந்த சீக்ரெட் சேம்பரில் இருந்த அவளது லேபிற்கு கிளம்பிய அவளை நன்றி கூறி அனுப்பி வைத்தவன்….அவள் அதற்குள் நுழையவும் வெளிப்புறமாக தாளிட்டு பூட்டியும் வைத்தான்…

பின்பாக மனைவியைப் பார்த்தான்….

“அவட்ட எதோ தப்பு இருக்குதுன்னு தெரியுது மனுப்பா…… உங்களை பார்க்கவும் பெரியத்தான் கண்டிப்பா எமோஷனானாங்க….பட் அவ சொல்ற மாதிரி எதுவுமே இல்லையே…..ஆனா கன்ஃபார்மா தெரியாம பெரியத்தான் நிலமையில ரிஃஸ்க் எடுக்க முடியாது….” மனோ தன் உணர்வுகளை சொன்னாள்….தன்னைப் போலவே தன் கணவனும் உணர்கிறான் என்பதில் அவளுக்கு துளி அளவும் சந்தேகம் இல்லை….

“இந்த ரிப்போர்ட் எல்லாம் சரியா இல்லை தப்பானு உன்னால கன்ஃபார்ம் செய்ய முடியுமா மனு…?”

சூழலுக்கு பதில் காண இவன் வழி சொன்னான்.

“அவ்ளவு வர்க்கையும் திருப்பி செய்றதுன்னா ரொம்ப டைம் எடுக்கும்……பட் பெரியத்தான் ப்ளட் டெஸ்ட் மாதிரி அவங்க ஹெல்த் கண்டிஷன் பத்துன  பேசிக் டெஸ்ட் இப்பவே செய்து பார்த்துடலாம் என்றவள்…

கட கடவென அந்த வேலையில்தான் இறங்கினாள்…..

அந்த லக்க்ஷணா எழுதி வைத்திருந்த குறிப்புகளைப் பார்த்து படித்து என அந்த டெஸ்ட்டுகளை செய்து முடிக்க கிட்தட்ட மறு நாள் காலை ஆனது மனோவிற்கு…..

டெஸ்ட் ரிசல்ட் வர்ஷனுக்கு எந்த நோயுமே இல்லை…எல்லாமே பொய் என்பதை நிரூபித்தன….

லக்க்ஷணாவை கைது செய்த நேரம்…..அந்த பயோஸி எம்ளாயியை கொலை செய்தது யார் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை தன் டிபார்ட்மென்ட்டுக்கு கொடுத்திருந்தான் மித்ரன்.

வை அனைத்துக்கும் காரணம் இதுதான்….

ஸ்க்ராப் ரீசைகிளிங்……இ வேஸ்ட் மெயின்டனன்ஸ் என்ற பெயரில் உலகின் மாபெரும் குப்பை தொட்டியாக மாறிக் கொண்டிருக்கிறது இந்தியா….. உலகின் பிறநாடுகளில் உண்டாகும் பல கழிவுப் பொருட்களை இந்தியாவிற்கு கொண்டு வந்து கொட்டுவதும்…அதிலிருந்து பயனுள்ள பாகத்தை நம் தொழிலாளிகள் பிரித்தெடுத்து அவர்களுக்கு கொடுப்பதும்….ஏனைய மிக கெடுதலான பொருட்களை நம் மண்ணில் கொட்டிக் கொள்வதும் படு ஜோராக நடந்தேறிக் கொண்டிருக்கிறது இங்கு…..எந்த நாடுகளும் தங்கள் எல்லைக்குள் வரக் கூடாதென தடைவிதித்துள்ள கதீர்வீச்சுப் பொருட்கள் முதல் பலவும் இந்தியாவிற்கே பயணிக்கின்றன….ஏனெனில் இதை முறைப்படுத்த சட்டங்களோ….நெறிமுறைகளோ எதுவும் இங்கு இல்லை…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.