(Reading time: 13 - 25 minutes)

ஸார்க்கு காஃபி வேண்டாமா? காஃபி வச்சு எவ்ளோ நேரம் ஆச்சு. 'ஆறி போச்சு மறுபடியும் சுட வச்சுதா'னு சொன்ன வச்சு தர மாட்டேன் ” என்று கூறிய மனைவியை ஓர கண்ணால் ரசித்து கொண்டு தலை வாரி கொண்டு இருந்தான் கண்ணன்.

" காஃபி என்ன டேபிளுக்கா மேடம்? "

" நீங்க குடிச்சாலும் ஓகே, டேபிள் குடிச்சாலும் ஓகே. ஏதோ ஒன்னு வேஸ்ட் பண்ணாம இருந்தா சரி " என்று சொல்லி தன் காபியை முடித்து எழப்போனால் ஷண்மதி.

“ ஓய்..  என்ன? காஃபிய ஒழுங்கா கைல குடு டீ ”

“ முடியாது போயா ”

“ அப்போ  நீயே குடி ” என்று ரூம்மை விட்டு செல்ல எத்தனித்தவனை,  “குழந்த மாதிரி அடம் பிடிக்கிறீங்க” என்று காஃபியை எடுத்து நீட்டியவளை சுற்றி வளைத்து அருகில் இருந்த கௌச்சில் அமர்ந்து  அவளையும் மடி மீது அமர்த்தி அவள் கையாலயே அந்த காஃபியை பருக ஆரம்பித்தான் கண்ணன்.

தன் மடி மீது இருந்தவளிடம் இருந்து சிறு துள்ளலை  எதிர் பார்த்தவன் அவள் அந்த காஃபியை தனக்கு சாஸரில் வைத்து குடிக்க உதவுவதில் குறியாய் இருப்பதைக்  கண்டு சிரித்தேவிட்டான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...

படிக்க தவறாதீர்கள்...

இந்த ஆறு மாதங்களில் கண்ணன் ஷண்மதிக்கு இடையில் ஒரு அழகான பந்தம் உருவாகி இருந்தது நட்பு காதல் ஊடல் என்று எதேனும் ஒன்றை தினம் தினம் அது ரசிக்க செய்தது.  

“ ஹேய் பாத்து பாத்து ” என்று புறையேறிய தலையை தட்டி எழுந்தவளை “ செம்ம்ம்மம இம்ப்ரூவ்மெண்ட் ஷணு ” என்று கூறி கண்சிமிட்டினான் அவன்.

தொடர்ந்து குறும்புடன் சிரித்து கொண்டு இருந்தவனை, " என்ன இளிப்பு ??? நான் எழுந்தா ஷர்ட் கசங்கிடும் பாவம்னு யோசிச்சா, ரொம்பத்தான் சிரிக்குறீங்க "

“ இத நான் நம்பனும் "

“ தட்ஸ் யுவர் விஷ் எனக்கு நிறைய வேலை இருக்கு. அத்தை தேடுவாங்க, ஒழுங்கா குட் பாய்யா கிளம்பி சீக்கிரம் கீழ வாங்க. ஹரிய சென்ட் ஒப் பண்ணனும்லா ” என்று கூறி சிட்டாய் பறந்துவிட்டாள் ஷண்மதி.

ஹரி தயாராகி கீழே வந்த சமயம், 'சாமி கும்பிடு', 'பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கு' என்று ஒவ்வொரு அறிவுரை வழங்கிய மகேஷ்வரியின் பதட்டம் தான் குறைவதாக இல்லை. அவர் வீட்டு கடைக்குட்டி, ஸ்பெஷல் செல்லம் எல்லா சேட்டைகளையும் செய்து  அவரிடம் குட்டு வாங்கும் நல்லவன்.. இன்று அவரை பிரிந்து இரண்டு வருடம் வெளிநாடு செல்ல போகிறான். ஸ்கைப் ஃபேஸ்டைம் என்று கம்யூனிக்கேஷன் வளர்ந்தாலும் அவரின் கழுத்தோடு கட்டிக்கொள்ளும் செல்ல மகனை பிரிவது அவருக்கு சுலபமாக இருக்கவில்லை. என்னதான் எல்லோர் முன்னும் தைரியமாய் இருப்பதாய் காட்டி கொண்டாலும் எங்கே அவன் கிளம்பும் சமயம் அழுது விடுவோமோ என்ற பயம் மட்டும் அவரை விடுவதாய் இல்லை.

அதை உணர்ந்தவனும் மென்நகையுடன் அவர் கைகளை பற்றி விடை கூறினான்.

இதை பார்த்த ரவியோ “ டேய் ஒழுங்கா டூ இயர்ஸ முடிச்சுட்டு சீக்கிரம் வா. இதுக்கும்மேல அங்கேயே வேல பாக்குறேன்னு ஏதாவது சொன்ன!!!! அவ்ளோ தான்டா நீ ” என்று பேச்சைத்  திசை திருப்பினான்.

“ ஹேய் நான் மேல படிக்கலாம்னு இருக்கேன் ”

“ நான் உன்ன கொல்லலாம்னு இருக்கேன் ” கண்ணன் கட்டியாகி பதில் சொல்ல,

" அப்படி சொல்லுங்கண்ணா " என்று கண்ணனுடன் இன்ஸ்டண்ட் கூட்டணி ஒன்றை உருவாக்கினான் ரவி.

“ நம்ம கம்பெனிக்கு வாடானு கூப்ட்டா, நான் படிக்கணும்னு சொல்லி அடம்பிடிச்சு பர்மிஷன் வாங்குன. பாவம் சின்ன பையன்னு ஒதுக்கிட்டா இப்ப மேல படிக்கனும்னு கீழ படிக்கனும்னு புது பாம் போடுற. ஒழுங்கா படிச்சுட்டு நல்லபடியா திரும்பிவா ” என்று அண்ணனாக பேசினான் கண்ணன்

“ அவன் அறிவாளி, படிக்கிறான். உங்களுக்கென்ன ? ” என்று ஹரிக்கு சப்போர்ட்க்கு வந்தாள் ஷணு. மகேஷ்வரியும் ராஜேந்திரனும் குனிந்து சிரிக்க, ஹரி ஷண்மதியிடம் ஹை-பை போட்டுக் கொண்டான்.

“ அடிப்பாவி,  புருஷனையே வாருற... ஐ அம் எ அவுட்ஸ்டாண்டிங் ஸ்டூடண்ட் யு நோ!!! ” என்று சமாளிக்க முயன்றான் கண்ணன். ஆனால் அவனின் அருமை மம்மியோ, “ டேய் அத தான் டா அவளும் சொல்றா, எப்போவும் வெளில ” என்று அவர் பங்கிற்கு கொஞ்சம் வாரினார்.

“ ஓகே ஓகே நோ டென்ஷன். என் ஸ்டேட்மெண்ட்ட வாப்பஸ் வாங்கிக்கிறேன். முடிச்சதும் ஓடி வந்துடுறேன் ” என்று சரண்டர் ஆனான் ஹரி.

ஒருவழியாக அட்வைஸ் கமிட்டி முடிந்து ஹரி புறப்பட்ட நேரம், “ ஹரி இந்த தாத்தா பேசுறாங்க "  என்று தான் பேசிகிக்கொண்டு இருந்த வீடியோ கால்லை ஹரியிடம் நீட்டினார் சங்கரன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.