(Reading time: 13 - 25 minutes)

ப்படி இருக்க குண்டு போண்டா? ” என்று பேச்சை ஆரம்பித்தான் அவன்.

வெகுதூரம் செல்ல போகிறான். அவனை வருத்தாமல் இருக்க, இயல்பாய் காட்டிக்கொள்வது என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

அவனின் கேள்விக்கு பதில் உரைக்காமல் அவனை முறைக்க ஆரம்பித்தாள் மகி. காரணம் அவன் அறியாததா!

“ ஓகே ஓகே, முறைக்காத. நீ ஒல்லி தான். ஒன்லி ஒன் டைம் ஒத்துக்குறேன் “.

“ ஒன் டைம்மா? நான் என்ன பாக்குற எல்லா டைமும் வைட் போடுற மாதிரி பேசுறீங்க “ என தன் மௌனத்தை சிறிது தளர்த்தெறிந்தாள்.

“ ஆமாம், உன்ன பாத்தே சிக்ஸ் மன்த்ஸ் இருக்கும். அப்பறம் எப்படி சொல்றதாம்? “

" பார்த்தால் எப்படி தெரியுதாம்? "

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம். அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்...

 " சுமாரா இருக்க, நாட் பேட். குளிக்காம, மேக்கப் போடாம.. கொஞ்சம் டல்லா தெரியுற " புயூர் கலாய்.

“ நீங்க தான் கருவாயன் நான் இல்ல ” என்று முறைத்தே பதில் கூறினாள்.   

" ஹி ஹி... நீ மட்டும் நேர்ல இருந்தா, உன் கருவாயனுக்கு இந்நேரம் உன் காது என் கைல இருந்து இருக்கும். பட் பரவாயில்ல இன்னும் டூ இயர்ஸ் கழிச்சு வந்து பாத்துகிறேன் " என்றான்.

" அவ்ளோ நாள் ஆகுமா?  நடுவுல வரமுடியாத போல சொல்றீங்களே? ஏன்  இந்த வெட்டி பில்டப் ? அப்போ அப்போ இங்கயும் கொஞ்சம் விசிட் பண்ணலாம் " என்று கொஞ்சம் ‌‌குரல் தாழ்த்தி சொன்னவளை பார்க்கும்பொழுதே அவனுக்கு என்னமோ செய்தது.

" ட்ரை பண்றேன்டா.  நீ நல்லா படி. உடம்ப பாத்துகோ. கொஞ்சமாதும் சாப்பிடு "

" ம்ம்ம்ம்  "

" என்ன ம்‌ம்‌ம்‌ம்?  வாய திறந்து பதில் சொல்லு "

“ சரி பாத்துகிறேன். நீங்களும் .. "

" சரிடா,  டைம் ஆச்சு. எல்லாரும் வைட் பண்றாங்க பை "

" பை டேக் கேர்  "

அவளிடம் பேசியவனுக்கோ அவளின் குரலில் தெளிவாய் தெரிந்த  ஒதுக்கத்தை உணர முடிந்தது. இருந்தும் அவளிடம் பேசியதே ஏதோ ஒரு இனிய உணர்வை கொடுக்க, ஒருவழியாக லண்டன் கிளம்பிச் சென்றான். இங்கு ஃபோனை வைத்தவளோ வண்ணம் இல்லா கண்ணீர் தன் கன்னம் தொட்டு செல்வதையும் உணராது உட்கார்ந்து இருந்தாள்.

ஆனால் அவன் திரும்பி வரும்பொழுது இதை விட ஒரு பெரிய பிரிவு தங்களை தாக்கும் என்பது இருவருக்கும் தெரியாமல் போனது.

Love Is Just Like A Single Word Until Someone Special Gives A Meaning To It.

சண்டைகள் தொடரும்

Episode 05

Episode 07

{kunena_discuss:954}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.