(Reading time: 13 - 25 minutes)

வரிடம் ஃபோன்னை வாங்கி கார்டன் சென்றவன் “ ஹரி கிளம்பிட்டியாப்பா? எப்படி இருக்காப்பா? ” என்று பேச்சை தொடங்கிய தாத்தா வீரபாண்டியனிடம் “ நேத்து தானே தாத்தா ஸ்கைப்ல பேசுனோம். அதுக்குள்ள எப்படி இருக்கேனு கேக்குறீங்க? வரவர உங்க மெமரி பவர் குறைஞ்சுட்டே போகுது தாத்தா ” என்றவனிடம்,  “ உன் மேல அவ்ளோ பாசம்டா ” என்று சிரித்துக்கொண்டே பதில் உரைத்தார் தாத்தா.

“ போதும் நீங்க பேசுனது, அவன கிளம்ப விடுங்க ” என்று கண்டித்து அவரிடம் இருந்து ஃபோன்னை பிடுங்கி சென்றார் பாட்டி தனலக்ஷ்மி. 'நீ பேச ஆரம்பிச்சா, அவன் ஃப்ளைட் கிளம்பின பிறகுதான் கிளம்புவான்' என்று மனதில் நினைத்து சிரித்துக்கொண்டார் வீரபாண்டியன். (வாய் திறந்து சொன்னால் பாட்டிகிட்ட யார் டோஸ் வாங்குறதாம்).

“ கிச்சா கிளம்பிடியா? பாத்து சூதானமா போயிட்டுவாயா. அங்கபோய் தங்கப்போறா இடமெல்லாம் தெரியுமில்லையாப்பா.. தெரிஞ்சவங்களாம் இருக்காங்கல்ல?  எதுவும் பிரச்சனை இல்லயே ” என்று பதில் அறிந்தும் மனம் கேட்காமல் இடைவிடாது கேள்விகளை தொடுத்தவரை

“ பாட்டி, நோ ப்ராப்ளம். நீங்க ஏன் டென்ஷன் ஆகுறீங்க,  அங்க என் சீனியர் இருக்காங்க,ஒன்னும் பிரச்சனை இல்ல. நீங்க சமத்தா எனக்கு டாட்டா சொல்லுங்க பாப்போம் ” என கூல் பண்ண முயன்றான் ஹரி.

“ போடா ஊருக்கு போற முன்னாடி இங்க வா, சாமிக்கு பொங்கல் வைக்கணும்னு கூப்டேனே வந்தியா!! ”

“ ஐயோ பாட்டி உலகத்துல நான் மட்டும் தான் வெளிநாடு போறேனா! ஏன் எல்லாரும் என்னை சின்ன பிள்ள மாதிரி ட்ரீட் பண்றீங்க. பொங்கல் தானே, எனக்கும் சேர்த்து நீங்களே வைங்க. ஏன் செல்ல பாட்டில! ”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

“ சரி சரி நீ நல்லபடியா போயிட்டுவா. அங்க போனதும் ஒரு முறை பேசுப்பா..... இந்த அத்தைட்ட பேசு " என்று தன் மருமகளிடம் ஃபோன்னை குடுத்தார். ஊருக்கு கிளம்புறதுக்கு முன்ன, காதை இன்சுர் பண்ணாதது தப்போனு உணர ஆரம்பித்தான் ஹரி. உபயம் செந்தில்குமாரின் திருமதி விஜயலக்ஷ்மி. அவரும் சேம் அட்வைஸ் எல்லாம் அடுக்க, நொந்துப்  போனான்.

நெக்ஸ்ட் அவன் செல்ல அத்தை பார்வதி. அவன் முகம் பார்த்து உணர்த்தாரோ என்னவோ, ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக டாட்டா சொல்லிகொண்டு இருந்தவரிடம் இருந்து மொபைலை பறித்து கொண்டு மகியிடம் ஓடினாள் அனன்யா.

மகியின் அருகில் சென்று அமர்ந்தவாரே அனு, “ ஹாய் அத்தான்! அல் தி பெஸ்ட் அண்ட்  ஹாப்பி ஜர்னி ” என்று விஷ் செய்ய அவன் பார்வையில் விழுகிறாள் மகதி. ஏதோ ஒரு தவிப்பு அடங்கியதை போன்ற ஒரு உணர்வு. எல்லாம் இயல்பானது அவனுக்கு.

இந்த ஆறு மாதங்களில் அவளை அவனால் சந்திக்க முடியவில்லை. அது ஏன் என்று எல்லாம் ஆராயவுமில்லை அவன்.

உற்சாகமாய் சொன்னான் அவன் அனுவிடம், “ தாங்க்ஸ்டா ”

“ நானும் உங்கள சென்ட் ஒப் பண்ண வந்திருப்பேன் அத்து. இந்த சைக்ளிக் டெஸ்ட் வந்து என் பிளன்ன ஸ்பாய்ல் பண்ணிருச்சு .ச்ச, மிஸ் பண்ணிட்டேன் ”

“ ஏய் வாலு, ஒழுங்கா படி. பப்ளிக் எக்ஸாம் நல்ல பண்ணி மனத்த காப்பாத்து ”

“ ஹலோ!!!! நாங்கலாம் கிளாஸ் ஃபர்ஸ்ட். சொல்லி கொடுக்காமலே நல்ல ஸ்கோர் பண்ணுவோம் "

“ செல்லம், என் இனமடா நீ ” என்று ஃபோனிலே அனுக்கு ஹைபை குடுத்தவன் காதில் “ஆமா, ஆமா ரெண்டும் வேஸ்ட் பீஸ்சு, லூசு கேஸ்சு” என்ற வாய்ஸ் விழ அது யார் என்று அறிந்தவன் மனமோ அவளிடம் பேச விரைந்தது.

ஆனால் தானாக இறங்கி வந்துபேசவிடாத ஈகோவிடம் மனம் போட்டி போட, கடைசியில் இரண்டும் ஜெயிக்கும் வகையில் “ அனு, அது என்னடா க்ராஸ் டாக் ” என்று ஒரு பிட்டை போட்டான்.

“ உங்களுக்கு தெரியவே தெரியாது பாருங்க.வேற யாரு, மகி அக்கா தான். இருங்க அத்தான் அக்காட்ட கொடுக்குறேன் ” என்று மகியிடம் மொபைலை நீட்ட, மகி முறைத்தபடி 'வேண்டாம்,நான் பேச மாட்டேன்' என்று அனுவிடம் தலை ஆட்ட, அதுவும் அவனுக்கு லைவ் ரிலே ஆகும் என்பதை உணர்ந்து வேறு வழியில்லாமல் அதை வாங்கிக்கொண்டாள். அனு அவளை சிரித்து வெறுப்பேற்றி  அங்கிருந்து  ஓடியேவிட்டாள்.

அன்று ஹரி ரவியுடன்  பேசியதை கேட்டதில் இருந்து ஹரியிடம் ஒதுக்கத்தை காட்டி வருகிறாள் மகதி. அவளிடம் அவன் பேச எடுத்த எல்லா முயற்சியையும் தோற்கடித்தாள். ஃபேமிலி வாட்ஸ்-அப் குரூப்பில் இவன் ஒரு குட் மோர்னிங் போட்டால் கூட சங்கரனின் நம்பரில் இருந்து குட் மார்னிங்டா கருவாயா என்று இவனை வம்புக்கு இழுப்பவள், இன்று இத்தனை விலகி நிற்பது அவனுக்கும் புரியாமல் இல்லை. ஆனால் அதன் காரணத்தை தான் அவன் அறியவில்லை. அவனும் அவளுக்கு ஸ்பெஷல் கிளாஸ் எக்ஸாம்னு எதாதும் இருக்கும் என்று அவனே நினைத்துக் கொண்டான்.

என்ன செய்யவென்ற பதட்டத்துடன் தடுமாறினாள் மகி. இப்போது கண் முன் தெரியும் பிம்பத்தை அவள் எப்படி தவிர்ப்பாளாம்?? இத்தனை நாள் கழித்து சந்தித்த முகங்களுக்கு இடையில் சிறிது நேரம் மௌனம் மட்டுமே..

எங்கோ சென்ற குரலை இழுத்து பிடித்து பேச ஆரம்பித்தான் ஹரி கிருஷ்ணன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.