(Reading time: 25 - 50 minutes)

ந்த கேள்வியே பதிலாக வந்தது... "பிருத்வி அன்னைக்கு நீங்க பேசினதுக்கு தான் உங்க மேல கோபம் இல்லைன்னு சொன்னேனே... இங்க பாருங்க பிருத்வி... ஏதோ நம்ம கல்யாணம் நடந்துடுச்சு... நம்ம வீட்டில் இருப்பவங்களுக்காக நாம சேர்ந்து வாழனும்னு எந்த அவசியமும் இல்ல... நீங்க சப்னாவை தானே காதலிச்சீங்க... இப்போ ஒரு நல்ல வாய்ப்பு இது அவளோட நீங்க வாழ... அதனால இந்த டைவர்ஸ் தப்பில்ல பிருத்வி..." எனும்போது அவனுக்கு கோபம் தான் வந்தது...

"நான் சப்னாவை கல்யாணம் செஞ்சுக்கனும்னு நினைச்சிருந்தா.. உன்னை நான் கல்யாணமே செஞ்சிருக்க மாட்டேன்... கல்யாணம்னா உனக்கு விளையாட்டாப் போச்சா... முதல்ல உன்கூட கல்யாணம்... அப்புறம் உன்கூட பிரச்சனைன்னு சப்னாவோட கல்யாணம்... அப்புறம் அதுவும் சரியில்லன்னா வேற ஒருத்திக் கூடவா..??" என்று அவன் கேட்டப்போது...

"எனக்கு உங்க கொள்கை புரியுது பிருத்வி... நீங்க ஒருத்தி கூட தான் உங்க வாழ்க்கையை வாழனும்னு நினைக்கிறீங்க... அதுல குறுக்க நான் தான் வந்துட்டேன்... என்னை ஏமாத்தக் கூடாதுன்னு தானே இந்தக் கல்யாணம் நடந்தது... அப்போ அதை வேண்டாம்னு சொன்னாதான் தப்பு...  ஆனா இப்போ அப்படியில்ல... நமக்கு ஒத்து வரலைன்னு பிரிஞ்சிட்டா யாராலும் நம்மள கட்டாயப்படுத்த முடியாது... அதனால இது தப்பில்ல பிருத்வி.."

"உனக்கு என்கூட இருக்கப் பிடிக்கலன்னு சொல்லு... ஆனா என்னை சப்னாவை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி சொல்லாத... நமக்கு விவாகரத்தே நடந்தாக் கூட அந்த காரியத்தை நான் செய்யமாட்டேன்... அன்னைக்கு பேசினது தப்புன்னு உன்கிட்ட மன்னிப்பு கேட்க வந்தேன் பாரு... அதுதான் என்னோட முதல் தப்பு... அன்னைக்கு பேசினது சரிதான்... நீ என் வாழ்க்கையில் வந்திருக்கவே கூடாது... நான் நல்லா இருந்திருப்பேன்..." என்று கோபமாக கத்தினான்.

"ஆமாம் பிருத்வி நீங்க சொன்னது சரிதான்... நான் உங்க லைஃப்ல வந்திருக்கவே கூடாது... நான் நியூயார்க்லேயே இருந்திருக்கனும்... இல்லை அன்னைக்கு நியூயார்க் போகப் போறதா சொன்னேனே அப்பயாவது போயிருக்கனும்... ஆனா இப்பக் கூட என்ன நான் நியூயார்க்கே போய்ட்றேன்...

இப்போ டைவர்ஸ் பத்தி எதுவும் பேச வேண்டாம்... நான் நியூயார்க் போய்ட்றேன்... நான் இங்க இல்லைன்னா நீங்க யோசிக்க முடியும்.. இதுக்கு தான் நான் அன்னைக்கு வீட்டை விட்டுப் போனேன்... ஆனா அது தப்பு.. இப்போ நான் நியூயார்க் போய்ட்டா... எல்லாரும் கொஞ்ச நாள் அமைதியா இருப்பாங்க... நீங்களும் உங்க லைஃப் பத்தி நல்லா யோசிக்கலாம்..." என்று அவள் முடிக்கும் முன்னரே...

"ரொம்ப நல்லது... நீ என்னை விட்டு தூரமா போனின்னா சந்தோஷம் தான் படுவேன்... அன்னைக்கு நீ நியூயார்க் போறன்னு சொன்னப்போ...  போக வேண்டாம்னு கெஞ்சுன மாதிரி இப்போ நான் கெஞ்சுவன்னு நினைச்சின்னா அது கண்டிப்பா இப்போ நடக்காது... போகும் போது தகவல் சொல்லு சந்தோஷமா வந்து வழி அனுப்பி வைக்கிறேன்..." என்று கத்திவிட்டு அவன் போன போது அதிர்ச்சியை விட அவளுக்கு அது ஆச்சர்யமாக தான் இருந்தது...

அவளிடம் அவன் கத்திவிட்டு வெளியில் கிளம்ப திரும்பினால் அங்கு தேவாவும் கவியும் நின்றுக் கொண்டிருந்தனர்... கவியோ பிருத்வியை முறைத்துப் பார்த்தாள்... தேவாவிடம் கூட பேசாமல் பிருத்வி வெளியில் போய்விட்டான்... யுக்தாவோ அவர்கள் இருவரையும் பார்த்து தலைக் குனிந்துக் கொண்டாள்.

பின் உள்ளே வந்த கவியோ தேவாவைப் பார்த்து... "அந்த பிருத்வி இவ்வளவு கோபமா பேசுறான்... இவ என்னடான்னா அப்படியே நிக்குறா... அப்படி என்ன பைத்தியதனமான காதலோ அவன் மேலே... அவனுக்காக நியூயார்க் போகப் போறாளாம்... நம்மள பத்தி கவலையெல்லாம் இல்லைப் போல...

இந்த பைத்தியக்காரத்தனமான காதல் தான அவன் வேறொருத்திய காதலிக்கிறான்னு தெரிஞ்சும் அன்னைக்கு நைட் அவன் கூட..." என்று பேசிக் கொண்டே போனவள்... தேவா அங்கு இருப்பதை உணர்ந்து பேச்சை நிறுத்தினாள்... ஆனால் அவள் என்ன சொல்ல வந்தாள் என்பதை உணர்ந்த யுக்தா உடனே தன் அறைக்குள் சென்றுவிட்டாள்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...

படிக்க தவறாதீர்கள்...

"சே அவசரத்துல என்ன பேசறோம்னு கூட தெரியாம பேசிட்டோமே என்று கவி குற்ற உணர்வில் இருக்க... யுக்தா அறைக்குள் போய்விட்டாளா என்றுப் பார்த்த தேவாவோ...

"சங்கவி உனக்கு அறிவிருக்கா... அன்னைக்கு அந்த துணிக் கடையில அந்த சப்னா பேசினதுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் இருக்கு..." என்று கோபமாக கேட்டான்.

"இல்லை தேவா... அந்த பிருத்வி கோபமா பேசிக் கூட இவ அமைதியா இருக்காளேன்னு தான்... ஏதோ கோபத்துல அப்படி பேசிட்டேன்..."

"கோபத்துல என்ன வேணாலும் பேசலாமா..?? அப்போ பிருத்வியை நீ தப்பு சொல்லக் கூடாது... யார் வேணாலும் யுக்தாவை தப்பா பேசலாம்... நீயே அப்படி பேசலாமா..?? நம்ம யுக்தா இதெல்லாம் செய்யக் கூடியவளான்னு நீ யோசிச்சியா..??"

"அவளே தானே தேவா அதை ஒத்துக்கிட்டா.."

"இதுவரைக்கும் பிருத்விக்கும் யுக்தாவுக்கும் நடுவுல என்ன நடந்ததுன்னு எனக்கு சரியா தெரியாது... எல்லோரும் பேசினதை வச்சு நானே யூகிச்சு வச்சிருக்கேன்... அப்போ ஏன் இந்த கல்யாணம் நடக்குது சங்குன்னு நான் கேட்டப்போ கூட நீ சொல்லல... அப்போ நான் உன்னை நினைச்சு பெருமை பட்டேன் தெரியுமா...??" என்று அவன் சொன்னபோது கவி தலைக் குனிந்துக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.